Tuesday 9 September 2014

VIJAYKANTH CONDEMNS TN GOVERNMENT CBSE GRADING BY SMILEYS HC STAYED TEACHERS APPOINTMENT 14,700 ஆசிரியர்கள் நியமனத்தில் உச்சகட்ட குழப்பம்: நீதிமன்ற உத்தரவால் பெரும் கலக்கம் BEST WISHES THALAIVAR ATHAIYAVATHU SENJARU WARM UP DR.RADHAKRISHNAN AWARD FOR 377 TEACHERS இவர்களா எதிர்ப்பது?






பள்ளிக்கல்வித் துறை யில், 14,700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில், உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், பணியில் சேர அனுமதிக்கக் கூடாது' என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவால், ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள், கலக்கம் அடைந்துள்ளனர்.பணி நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவை பெறாமல் உள்ளவர்களும், 'தேர்வு ரத்தாகிவிடுமோ' என, அச்சம் அடைந்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) முறையை கொண்டு வந்ததில் இருந்து, தமிழகத்தில், தொடர் குளறுபடி நடந்து வருகிறது.


காரணம் என்ன?




கடந்த 2012, அக்., 5ம் தேதி, ஆசிரியர் நியமனம் தொடர்பாக, முதல் அரசாணை வெளியானது. அதில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டது.அதன்படி, டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், பிளஸ் 2, ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு, பட்டப் படிப்பு, பி.எட்., போன்ற படிப்புகளில், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 40 மதிப்பெண் என, 100 மதிப்பெண் கணக்கிட்டு, அதன் அடிப்படையில், தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டது. இந்த முறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர். 'இந்த அரசாணை, அறிவியல் பூர்வமானது அல்ல; எனவே, யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல், புதிய அரசாணையை வெளியிட வேண்டும்' என, அந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.மேலும், தமிழக அரசுக்கு, புதிய கணக்கிடும் முறை ஒன்றையும், உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்று, தேர்வர் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும், சதவீத அடிப்படையில் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் தேர்வு செய்யும் புதிய முறையை, கடந்த மே 30ம் தேதி, புதிய அரசாணையாக, கல்வித்துறை வெளியிட்டது. இதற்கிடையே, டி.இ.டி., அல்லாத பிற கல்வி தகுதிகளுக்கு வழங்கப்படும், 40 மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.


தடை:




இந்நிலையில், ஆக., 10ம் தேதி, ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதை தொடர்ந்து, கடந்த ஆக., 30ம் தேதி முதல், பணி நியமனம் நடந்து வருகிறது. நேற்றுடன் ஐந்து நாள் நடந்த கலந்தாய்வில், 5000த் திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.நேற்று, மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கலந்தாய்வு நடந்து கொண்டிருந்த நிலையில், பிற்பகல், 2:00 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு குறித்த தகவல், கல்வித்துறைக்கு கிடைத்தது.'புதிய ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், அவர்கள் பணியில் சேர, கல்வித்துறை அனுமதிக்கக் கூடாது' என, மதுரை கிளை, இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.இதனால், அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த கல்வித்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து, உயர் அதிகாரிகளிடம் விளக்கினர்.தேர்வு பெற்ற, 14,700 பேரில், பணி நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவு பெற காத்திருப்பவர்களும், 'தேர்வு ரத்தாகிவிடுமோ' என, அச்சம் அடைந்துள்ளனர்.


பணியில் சேர உடனடி தடை:




கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது:தற்போதைய நிலை யில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, எதுவும் கூற முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவு விவரம் கிடைத்ததும், உயர் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, அடுத்த முடிவு எடுக்கப்படும்.பணி நியமன கலந்தாய்வுக்கு, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி, பணி நியமன கலந்தாய்வு, தொடர்ந்து நடக்கும். ஆனால், உத்தரவு பெற்ற ஆசிரியர்கள், பணியில் சேர அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.


முதல் கோணல் முற்றும் கோணலானது :




ஆய்வுக் கூட்டம் நடத்துவதில், கல்வித்துறையை மிஞ்ச, வேறு ஒரு துறையும் கிடையாது. அந்தளவிற்கு, மாதத்திற்கு, 20 கூட்டங்களை நடத்துவர். ஆனால், எந்த ஒரு பொருள் குறித்தும், விளக்கமாக, ஆழமாக விவாதித்து, யாரும் ஆட்சேபனை எழுப்பாத வகையில், முடிவை எடுக்க மாட்டர்.'ஏனோ, தானோ' என, முடிவை எடுப்பதும், பின், அதற்கு எதிர்ப்பு வந்ததும் மாற்றுவதும் தான், கல்வித்துறையின் வாடிக்கையாக உள்ளது. ஆசிரியர் நியமனத்திற்கான வழிமுறையை உருவாக்க, அமைச்சர் (அப்போது சிவபதி) தலைமையில், உயர்மட்டக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழு அமைப்பதற்கான அரசாணை, 2012, செப்., 14ல் வெளியானது. செப்., 14, 24 ஆகிய இரு நாட்கள் கூடி, ஆலோசனை செய்து, அக்., 5ம் தேதி, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணுடன் கூடிய அரசாணையை வெளியிட்டு விட்டனர்.இந்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம், சில மாதங்களுக்கு முன் தான் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின், கடந்த, மே 30ம் தேதி, புதிய அரசாணையை வெளியிட்டனர்.






இவர்களா எதிர்ப்பது?

By ஆசிரியர்

ஆசிரியர் தினத்தை (செப்டம்பர் 5) மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் "குரு உத்சவ்' என்று பெயர் மாற்றம் செய்ய முற்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதை எதிர்பார்க்காத எதிர்க்கட்சிகள், அரசை எதிர்ப்பதற்கு வலுவான காரணங்கள் எதுவும் கிடைக்காமல், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் முடிவைப் பிரச்னையாக்க முற்பட்டிருப்பது சந்தர்ப்பவாதமாகத் தெரிகிறதே தவிர, இதய சுத்தியுடனான விமர்சனமாகத் தெரியவில்லை.
"குரு உத்சவ்' என்று மத்திய அரசால் பெயர் மாற்றப்பட்டிருக்கும் ஆசிரியர் தினத்தன்று, "பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுடன் உரையாற்ற இருக்கிறார். அனைத்துப் பள்ளிகளும், பிரதமரின் உரையை மாணவர்கள் கேட்பதை உறுதிப்படுத்த வேண்டும்' என்பது மனித வள மேம்பாட்டுத் துறையின் இன்னொரு உத்தரவு.
ஒரு பிரதமருக்கு, அடுத்த தலைமுறையினருடன் தனது கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவோ, அவர்களை நல்வழிப்படுத்தும் ஒரு சில வார்த்தைகளைப் பேசவோ உரிமை உண்டு. பிரதமர் மோடியின் உரையில் தவறிருந்தால், அவர் தெரிவிக்கும் கருத்துகளில் எதிர்க்கட்சிகள் முரண்பட்டால் விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால், பிரதமர் மாணவர்களிடம் பேசவே கூடாது என்பது ஏற்புடையதல்ல.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான பிகாரும், மேற்கு வங்கமும் பிரதமர் மாணவர்களுக்கு "ஆசிரியர் தின உரை' நிகழ்த்துவது தங்களது அதிகாரத்தில் தலையிடுவதாகும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருப்பதால், தங்களிடம் கலந்தாலோசிக்காமல் பிரதமர் மாணவர்களுக்கு ஆசிரியர் தின உரை நிகழ்த்தக்கூடாது என்பது விதண்டாவாதம். மத்திய அரசு, மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் கல்வித் துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோ, தலையிடுவதோ கூடாதே தவிர, பிரதமர் மாணவர்களுடன் உரையாற்றக்கூடாது என்பது எப்படிச் சரி?
"குரு உத்சவ்' பிரச்னைக்கு வருவோம். இதற்கு அதிகமான எதிர்ப்பு தமிழகத்திலிருந்துதான் எழுந்திருக்கிறது. "குரு உத்சவ்' என்பது சம்ஸ்கிருத வார்த்தை என்றும் அது "டீச்சர்ஸ் டே' என்று ஆங்கிலத்தில் இருப்பதுதான் சரியென்றும் பா.ம.க., ம.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிப்புத் தெரிவிக்கின்றன. சம்ஸ்கிருதப் பெயரே கூடாது என்றால், மேலே குறிப்பிட்ட கட்சியின் தலைவர்கள் முதலில் அவர்களது மனைவி, குழந்தைகளின் பெயர்களை மாற்றி வைக்க வேண்டும். அதற்குப் பிறகு இந்தப் பிரச்னையில் கருத்துத் தெரிவித்தால், அது நியாயம்.
அவரவர் கட்சியில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகள் தமிழ்வழி பள்ளிகளில் படித்தாக வேண்டும் என்பதை அவர்கள் முதலில் உறுதிப்படுத்தட்டும்.
1993-இல் கொண்டு வரப்பட்ட "பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா' (பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டம்), 2001-இல் கொண்டு வரப்பட்ட "சர்வ சிக்ஷô அபியான்' (அனைவருக்கும் கல்வித் திட்டம்), 2005-இல் கொண்டு வரப்பட்ட "ஜனனி ஸ்வரக்ஷô யோஜனா' (பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்), 2007-இல் கொண்டு வரப்பட்ட "ஸ்வர்ண ஜயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா' (கிராமப்புற சுய வேலைவாய்ப்புத் திட்டம்), பிரதமரின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டிருக்கும், "தன தன் யோஜனா' (மக்கள் - நிதித் திட்டம்) ஆகியவை தமிழ் வார்த்தைகளா? அவையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்து அழைக்கப்படும்போது "குரு உத்சவ்' ஏன் ஆசிரியர் தினமாக நம்மால் அமைக்கப்
பட்டுத் தொடரப்படக் கூடாது? "டீச்சர்ஸ் டே'யும் தமிழல்ல, "குரு உத்சவ்'வும் தமிழல்ல எனும்போது அதுபற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
தமது குழந்தைகள் தமிழில் பேசுவதில்லை. தாய்மொழி எழுதப்படிக்கத் தெரியாத வருங்காலத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அடையாளங்களுக்கு எதிராகக் குரலெழுப்புவதை விட்டுவிட்டு, தாய்மொழி உயிர்ப்புடன் தொடர நாம் போராட வேண்டிய காலகட்டம் இது.
தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும், சுவர் விளம்பரங்கள் மூலமும், ஃபிளெக்ஸ் பேனர்கள் மூலமும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்வதை விட்டுவிட்டு, தாய்மொழியில் பேசுங்கள், தமிழில்தான் பேசுவோம் போன்ற வாசகங்களை முன்னிலைப்படுத்துவது அல்லவா இன்றைய காலத்தின் கட்டாயம்?
பெயர் எந்த மொழியிலாவது இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆசிரியர்கள் மதிக்கப்படுகிறார்களா, அவர்கள் வணங்கப்படுகிறார்களா என்பதுதான் முக்கியம்!

No comments:

Post a Comment