Tuesday 2 September 2014

COPY WRITING NOTE , DIARY SCHEME STARTED ENNA THAAN SEIYURATHU TWO TEACHERS ARRESTED NEW TEACHERS APPOINTMENT COUNSELLING நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலக காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை அரசுப் பள்ளிகளில்மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள்



கலவை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம் விரைவில் 

 
சென்னை: தமிழகத்தில் உள்ள, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில் பலவகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம், விரைவில் துவக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு ஒன்றியத்தில் உள்ள, அங்கன்வாடி மையங்கள் மற்றும் மூன்று பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில், சோதனை அடிப்படையில், பலவகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் முன்னோடி திட்டம், கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதி துவக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு, மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், தமிழகத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு திட்டம் நீட்டிக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு, 103.28 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின விழா அன்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து, திட்டத்தை அனைத்து மையங்களுக்கும் விரிவுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தலைமைச் செயலகத்தில், அமைச்சர் வளர்மதி தலைமையில், சமூக நலத்துறை அலுவலர்கள், அனைத்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு), ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பலவகை கலவை சாதத்துடன் மசாலா கலந்த முட்டை வழங்கும் திட்ட விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, அமைச்சர் வளர்மதி கூறியதாவது: முதல்வர் உத்தரவின்படி, விரைவில் அனைத்து மையங்களிலும், பலவகை கலவை சாதத்துடன், மசாலா கலந்த முட்டை வழங்கும் திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சமையலர்களுக்கு, பலவகை கலவை சாதம் மற்றும் மசாலா கலந்த முட்டை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடிந்ததும், அடுத்த மாதம் திட்டம் விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு வளர்மதி தெரிவித்தார்.

நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலக காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

By நாகப்பட்டினம்

நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டம் நாகையில் அண்மையில் நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் இரா. முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் மு. லட்சுமி நாராயணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். வட்டாரச் செயலாளர் கி. பாலசண்முகம், மாவட்டப் பிரதிநிதி ஆவராணி ஆனந்தன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ. சம்பத், இ. பரமநாதன், வட்டாரப் பொருளாளர் தொ.மு. தனுசுமணி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பள்ளி வேலை நேரங்களில் உதவித் தொடக்கக் கல்வி அலுலர்களால் நடத்தப்படும் பள்ளித் தலைமையாசிரியர் கூட்டங்களால் கற்பித்தல் பணி தடைபடுவதைக் கருத்தில் கொண்டு, இந்தக் கூட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்து வரைமுறைப்படுத்த வேண்டும்.
நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நீண்ட நாள்களாக காலியாக உள்ள 5 காலிப் பணியிடங்களில் ஆசிரியர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்க்க, உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நாகை ஒன்றியத்தில் 13 பள்ளிகளில் உள்ள கூட்டுநர்களுக்கு கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசுப் பள்ளிகளில்மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள்

By வேதாரண்யம்,

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவியுடன் செயல்படும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க 16 பள்ளிகளில் மாலை நேர சிறப்பு இலவச வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் உள்ள எயிம்ஸ் இந்தியா பவுன்டேஷன், நாம்கோ நிறுவனம் இணைந்து நடத்தும் திட்டத்தின் தொடக்க விழா கருப்பம்புலம் வடகாடு ஞானாம்பிகா தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நாம்கோ நிறுவன இயக்குநர் சி. ஜீவானந்தம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி ஆர். சின்னசாமி முன்னிலை வகித்தார்.
ஊராட்சித் தலைவர் சு. சிங்காரவேல், தலைமையாசிரியர் வே. சித்திரவேலு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

No comments:

Post a Comment