Monday 15 September 2014

புத்தக வாசிப்பு எந்த வகையில் வாழ்க்கைக்குபயன்பட போகிறது?

கூட்டணி - திருமருகல்


       வாசிப்பு என்பது ஒரு தவம்யோகாவில் கிடைக்கும்ஒருநிலைப்பாடுவாசிப்பில் கிடைக்கும்நல்ல புத்தகங்கள்,உடலுக்குள் நிகழ்த்தும் ரசாயன மாற்றத்தையும்கற்பனைகளையும்,செயல்வழி தாக்கத்தையும்வேறு எதனாலும் நிகழ்த்தமுடியாதுகடந்த 1950களில்நம் நாட்டில்எழுத்தறிவு பெற்றோரைவிரல் விட்டு எண்ணிவிடலாம். 60 - 70களில்படித்து பட்டம்பெற்றோரைமரியாதைக்குரியோராக சமூகம் எண்ணியது. 80களில்,கல்வியாளர்களும் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்தது. 90களுக்கு பின்கல்விசம்பாத்தியத்திற்கு மட்டுமே என்றானது.

          அதன்பின்பாட புத்தகங்களை மட்டும் வாசிக்க வைத்து,பணம் சம்பாதிக்க மட்டுமே கற்றுக்கொடுத்துவாழ்க்கையை ரசிக்கதெரியாதோராகமற்றவர்களின் உணர்வுகளை மதிக்க தெரியாதோராக,நடைமுறை அறிவு அற்றோராகநாம் ஒரு நவீன தலைமுறையைஉருவாக்கி கொண்டிருக்கிறோம்.


அவர்கள்எப்போதும் மனஅழுத்தம் உள்ளோராகவே இருக்கின்றனர்.அவர்களை வாசிப்புக்குள் இழுத்துவிட்டால்வன்முறைகளும்,குடும்பநல வழக்குகளும் குறையும்.

No comments:

Post a Comment