Saturday 13 September 2014

3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்து சோதனை நடத்தப்படும்.

கூட்டணி - திருமருகல்


            சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள், 5,000க்கும்அதிகமானோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனஇதனால்காவல்துறைமாநகராட்சி உட்பட பல்வேறு துறைகள் இணைந்து,பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை மீண்டும் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.

         கணக்கெடுப்பு : சென்னையில் கடந்த கோடைவிடுமுறையின்போதுஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், 1,150குழந்தைகள் மட்டுமே இருப்பதாக புள்ளிவிவரங்கள்வெளியிடப்பட்டனஅடையாளம் காணப்பட்ட இந்த குழந்தைகளை,ஆங்காங்கே உள்ள உண்டுஉறைவிட பள்ளிகள் மற்றும் மாநகராட்சிபள்ளிகளில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டனஇந்நிலையில்,சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள்தற்போது இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அடுத்த மாதம் : பெரும்பாலான குழந்தைகள் கடைகளில் வேலைபார்ப்பதாகவும் தெரியவந்துள்ளதுஇதனால் மாநகராட்சிகாவல்துறை,அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவை இணைந்து ஒரு குழுஅமைத்துசென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்தகணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதுஇந்தகணக்கெடுப்பு அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

இதுகுறித்து மாநகராட்சி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:எந்த வகையான வர்த்தகத்தில் குழந்தைகள் அதிகமாக பணிக்குஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது கண்டறியப்படும்.அந்தவர்த்தகர்களுடன் பேசிகுழந்தை தொழிலாளர்களை பணிக்குநியமிப்பது தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.குழந்தைதொழிலாளர்களை கண்டறிய காவல்துறையின் உதவியுடன்கணக்கெடுப்பு நடத்தப்படும்இதை தவிர 3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின்அடைவு திறன் குறித்து சோதனை நடத்தப்படும்இவ்வாறு அந்தஅதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment