Showing posts with label ஆசிரியர்கள். Show all posts
Showing posts with label ஆசிரியர்கள். Show all posts

Wednesday, 10 June 2026

GO. (Ms) No. 497Dated: 15.09.1993 Pay-Personal Pay-Grant of Personal Pay to certain categories of employees-Orders-. Issued.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்










                                









Friday, 1 March 2024

தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி தொடக்கம்! !!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - 


தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி தொடக்கம்! !!
     மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலியை தொடங்கி வைத்தார்


செய்தி வெளியீடு எண்: 387


செய்தி வெளியீடு


தேதி : 27.02.2024


     மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி தொடங்கி வைத்தார் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் இன்று (27.02.2024) கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பிலான பின்வரும் நிகழ்ச்சிகளை பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை 6வது தளத்தில் தொடங்கி வைத்தார்.

     தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), அரசு பொது நிதி நடைமுறையை எளிமைப்படுத்துதல், கருவூலத்தில் இருந்து கடைசி பயனர் வரை நிதி சென்று சேர்வதைக் கண்காணித்தல், அரசு செலவினத்தை முறைப்படுத்துதல், சிறந்த நிதி கண்காணிப்பு செயலி மூலம் திட்டங்களை தீட்டுதல், அரசின் கடனைக் குறைத்தல் என்ற வகையில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு துவக்கி வைக்கப்பட்டது.

     களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை வாயிலாக அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான சுயசேவைகளை நேரம் மற்றும் இருப்பிடம் சாராமல் பயன்படுத்தும் வகையில் கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டது. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் (Website) மற்றும் கைபேசி செயலி (Mobile App) அரசு ஊழியர்கள். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் (NHIS/PNHIS) சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், சிகிச்சைகளின் விவர பட்டியல்கள். மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யும் வசதிகள் மற்றும் பல விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டது.


     இந்நிகழ்ச்சியில் நிதித்துறை. முதன்மை செயலாளர். திரு.த.உதயச்சந்திரன். இ.ஆ.ப. அவர்கள், அரசு சிறப்பு செயலாளர், திரு. பிரசாந்த் மு.வடநேரே, இ.ஆ.ப. அவர்கள், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் திரு.க.விஜயேந்திர பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள். அரசு இணைச் செயலாளர், திரு. எச்.கிருஷ்ணனுண்ணி, இ.ஆ.ப. அவர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SGT - State Seniority List Upto 31.12.1997

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - 




Tuesday, 28 November 2023

ஆசிரியர் நலநிதி முன்பண விண்ணப்பம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


https://drive.google.com/file/d/1atqmwwdo_m1Tbht_c9A7J17k3frc4rT0/view?usp=drive_link

Thursday, 15 August 2019

மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

கடந்த அக்டோபர் (04/10/2018) அன்று ஜாக்டோ ஜியோ அழைப்பின் பேரில் போராடும் ஆசிரிய சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.


இதில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தலைமைச் செயலரின் சுற்றறிக்கைக்குப் பிறகு இன்னும் தீவிரமாக நடந்தது
இது இப்படி இருக்க .....

மழை விடுப்பு அறிவிப்பு செய்யப்பட்ட புதுகை திரூவாரூர் மாவட்டங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற ஒரு விசித்திரமான உத்தரவை நிர்வாகம் போட்டதாக கூறி  போராடாத ஆசிரிய சங்க முன்னோடிகள் பள்ளிக்கு வந்து கையெழுத்து போட்டனர்.


இதை இப்படியே விட்டால் பின்னாளில் விடுமுறை மாணவர்களுக்கு மட்டுந்தான் என்ற நிலை வந்துவிடும்




 இந்த வழக்கில் பதிலுரைத்த அரசு வழக்கறிஞர் , அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது , அது வேலை நாள் இல்லை  என  பதிலுரைக்க
அதனை ஏற்று  நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இந்த வழக்கின் மூலம் மழை விடுமுறை உள்ளிட்ட விடுமுறை நாட்களை (ஆசிரியர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு கையெழுத்து போட்டாலும் ) பள்ளி வேலை நாளாக கருத முடியாது ......  என்ற ஆசிரியரின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது

Monday, 12 August 2019

CPS Account Slip & Missing Credit Download - Available Upto 2019 Now - Direct Link

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

ஒரு மாணவர் கூட சேராத 46 பள்ளிகளில் இருந்த ஆசிரியர்களின் தற்போதையை நிலை என்ன?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

ஒரு மாணவர் கூட சேராத 46 பள்ளிகளில் இருந்த ஆசிரியர்களின் தற்போதையை நிலை என்ன?




பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் 46 தொடக்க, நடுநிலை பள்ளிகளில் தான் ஒரு மாணவர்கள் கூட இல்லை. ஆனாலும், அந்த பள்ளிகளை மூடிவிடவில்லை;  அங்கு இரண்டு ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள், எந்த வேலையும் இல்லாததால் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அயல்பணி அடிப்படையில் மாற்றுப்பள்ளிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். தினமும் அங்கு சென்று மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகின்றனர்.

 தற்போது ஒரு மாணவர்கள் கூட இல்லாத நிலையில், அந்த பள்ளிகளில் தற்காலிகமாகத்தான் நூலகமாக மாற்றுகிறோம். பல பள்ளிகளையும் இப்படி செய்வதாக கூறுவது சரியல்ல. அந்த பள்ளி கட்டிடம் பயன் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அந்த பள்ளிகளை நூலகமாக தற்காலிகமாக மாற்றப்படுகிறது. அந்த பள்ளிகளில் 6 மாதத்திற்குள் அந்த பகுதிகளில் உள்ள மாணவர்களை மீண்டும் சேர்த்து அடுத்த கல்வியாண்டு முதல் அது, பள்ளியாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அரசு இத்தகைய நிலைமையை கூர்ந்து கவனித்து தான் வருகிறது. பள்ளிகளை மூடிவி–்ட முடிவு செய்து விட்டது போல பேசப்படுவதில் உண்மையல்ல. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தது. அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இப்போது நிலைமை மாறி வருகிறது. பல பள்ளிகளில் தரம் உயர்த்தி, எல்லா வகையிலும் மாணவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் மாற்றி  அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சேர்க்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.  அரசு நடவடிக்கை காரணமாக இந்தாண்டு அரசு பள்ளிகளில் 1.72 லட்சம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனினும், மொத்தத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி,  46 பள்ளிகளில் தான் ஒரு மாணவர்கள் கூட இல்லை. இந்த பள்ளிகளில் தலா 2 ஆசிரியர்கள் இருக்கின்றனர். அந்த ஆசிரியர்கள் பணி இல்லாமல் சும்மா இருக்க கூடாது என்பதற்காக அவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு அயல்பணி அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மூடப்பட்ட பள்ளிகள் தற்காலிகமாகத்தான் நூலகமாக இருக்கும்.  பள்ளியில் மாணவர் சேர்க்கை ஏற்படுத்தி மீண்டும் ஆசிரியர்கள் அதே பள்ளிக்கு பணியமர்த்தப்படுவார்கள். தமிழகத்தில் பள்ளிகள் எண்ணிக்கையை உயர்த்திய நாங்கள் எப்படி பள்ளிகளை மூடுவோம்? கண்டிப்பாக  ஒரு பள்ளிகளை கூட மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. 46 பள்ளிகளும் மீண்டும் இயக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அரசு மேல்நிலை பள்ளிகளில் நவீன அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படுகிறது. இதற்காக, சீனாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் தான் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல் நிலைபள்ளகளில் அறிவியல் ஆய்வகம் அமைக்கும் பணியை செய்வார்கள். இந்த பள்ளிகளில் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்கள் சீனாவுக்கு அனுப்பப்பட உள்ளனர். அந்த மாணவர்கள், சீனாவிற்கு அனுப்பி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்கள் ஹெலிகாப்டர், ஏரோபிளேன் போன்று உருவாக்கும் அளவுக்கு அவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள், கணிதத்தை எளிதில் புரிந்து படிக்கும் அளவுக்கு மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஆப் மூலம் கணிதத்தை எளிதாக படித்து புரிந்து கொள்ள முடியும். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவும், கணிதத்தில் சிறந்து விளக்குவதற்காகவும் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு நடவடிக்கை  காரணமாக இந்தாண்டு அரசு  பள்ளிகளில் 1.72 லட்சம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில்  சேர்க்கப்பட்டு உள்ளனர். 46 பள்ளிகளில் தான் ஒரு மாணவர்கள் கூட இல்லை.