தமிழக அரசு ஊழியர்கள் " passport" பெறுவதற்கான வழிமுறைகள் -முழு விபரங்கள்..


அரசு ஊழியர்கள், அதிகாரிகள்கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
பெறஅடையாளச் சான்றோ,ஆட்சேபணையின்மைச்சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது.
இதற்குமுன்னறிவிப்புக் கடிதம்கொடுத்தாலே போதும் என்றும்அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், அதிகாரிகள்கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறஅடையாளச் சான்றோ,ஆட்சேபணையின்மைச்சான்றோ பெறவேண்டியதில்லை என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதற்குமுன்னறிவிப்புக் கடிதம்கொடுத்தாலே போதும் என்றும்அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அனைத்துத் துறை
செயலாளர்கள், துறைத்தலைவர்கள் உள்ளிட்டோருக்குபணியாளர்- நிர்வாகச்சீர்திருத்தத் துறை செயலாளர்பி.டபிள்யூ.சி.டேவிதார்அனுப்பியுள்ள கடிதம்: அரசுத்துறைகளில் பணியாற்றும்அதிகாரிகள், பணியாளர்கள்,பொதுத் துறைகளைச்சேர்ந்தவர்கள்கடவுச்சீட்டுகளைப் பெற சிலகடினமான நடைமுறைகள்பின்பற்றப்படுகின்றன. இந்தநடைமுறைகளை எளிதாக்கவெளியுறவுத் துறை அமைச்சகம்முன்வந்துள்ளது. கடவுச்சீட்டுக்குவிண்ணப்பிக்கும்போது அரசுத்துறைகளின் அதிகாரிகள்,அலுவலர்கள், பணியாளர்கள்உள்ளிட்டோர் தங்களது பணி,தாங்கள் யார் என்பதைத்தெரிவிக்கும் அடையாளச்சான்று அல்லது அரசுத்துறைகளில் இருந்துஆட்சேபணையின்மைச்சான்றினைச் சமர்பிக்கவேண்டும் என்று ஏற்கெனவேதெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச்சான்றிதழ்களைப் பெறுவதுகடினமாக இருப்பதால் இந்தநடைமுறை இப்போதுஎளிதாக்கப்பட்டுள்ளது.அதன்படி, கடவுச்சீட்டைப்பெறுவதற்குவிண்ணப்பிப்பதற்கு முன்னதாக,அதுகுறித்த முன்னறிவிப்புக்கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசுத்துறை உயரதிகாரிக்குத்தெரிவித்தால் போதும்.ஆட்சேபணை ஏதும் இருந்தால்சம்பந்தப்பட்ட அந்த உயரதிகாரிமண்டல கடவுச்சீட்டுஅலுவலகத்துக்கு அதைத்தெரிவித்து கடவுச்சீட்டுவிண்ணப்பத்தை திரும்பப்பெற்று விடலாம் என்று தனதுகடிதத்தில் டேவிதார்தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்பெறுவது இனி ”ஈசி” -எளிதாக்கப்பட்ட புதியநடைமுறை அறிமுகம்
சென்னை: தமிழக அரசுஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும்முறையில் மாற்றங்கள்கொண்டு வரப்பட்டுள்ளதாகதமிழக பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத்துறைசெயலாளர் சுற்றறிக்கைஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின்அனைத்து துறை செயலாளர்கள்மற்றும் அதிகாரிகளுக்குபணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத்துறை செயலாளர்டேவிதார் அனுப்பியசுற்றறிக்கையில், "பாஸ்போர்ட்டுகளை அரசுஊழியர்கள், அதிகாரிகள் மற்றும்பொதுத்துறைகளைச் சேர்ந்தஊழியர்கள்பெற்றுக்கொள்வதில் கடினமானநடைமுறை இருந்தது. இதைமத்திய வெளியுறவுத்துறைஅமைச்சகம் தற்போதுஎளிதாக்கியுள்ளது.
முன்பு பாஸ்போர்ட்டை அவர்கள்பெறவேண்டுமானால், அரசுத்துறையின்ஆட்சேபனையின்மைச் சான்று,அடையாளச் சான்றுபோன்றவற்றை வாங்கிசமர்ப்பிக்க வேண்டும். இந்தநிலை தற்போதுமாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, பாஸ்போர்ட் கேட்டுமண்டல அலுவலகத்திடம்விண்ணப்பிப்பதற்கு முன்பதாக,அவர் பணியாற்றும் துறையின்உயர் அதிகாரிக்குமுன்னறிவிப்பு கடிதத்தைகொடுத்தால் மட்டும்போதுமானது. அவருக்குபாஸ்போர்ட் வழங்கக்கூடாதுஎன்றால், மண்டல பாஸ்போர்ட்அலுவலகத்துக்கு துறையின்உயர் அதிகாரி கடிதம் மூலம்ஆட்சேபனைகளைத் தெரிவித்து,விண்ணப்பத்தை திரும்பப்பெற்றுவிடலாம்" என்றுகூறப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் அப்ளை செய்யதேவையான ஆவணங்கள்,கட்டணங்கள், விதிமுறைகள்என்ன? எப்படி செய்வது?
ஒரு நாட்டைக் கடந்து மற்றொருநாட்டிற்கு செல்கிற எவரும்கடவுச்சீட்டு (Passport) பெறவேண்டியது அவசியமாகஉள்ளது. அதனால் பாஸ்போர்ட்நமக்கு தேவை என்றால் முதலில்நாம் அணுகுவது இடைதரகர்களை தான், ஆனால்தற்போது எந்த இடைதரகர்களும் இல்லாமலே நாமேநேரடியாக பாஸ்போர்ட் எடுக்கஇந்திய அரசாங்கம் வழிவகைசெய்துள்ளது. பாஸ்போர்ட்விண்ணப்பிக்கும் செயல்முறைஇப்போது ஆன்லைனில்மாறிவிட்டது. புதியதாகநிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட்சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிறசெயல்பாட்டின் மூலம்,ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30நாட்களுக்குள்ளேயே உங்களதுபாஸ்போர்ட்டைப் பெற்றுவிடலாம். அந்த அதிகாரப்பூர்வஇணையதளம் இப்போது டாடாகன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம்பராமரிக்கப்படுகிறது. நம்மில்பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட்எடுக்க விருப்பம் இருந்தாலும்அதற்கான வழிமுறைகள்தெரியாததால் தரகர்களிடம்சென்று எடுக்கிறோம், இனிஅந்த அவசியம் தேவையில்லை.உங்கள் பாஸ்போர்ட்டைஆன்லைனிலேயே நீங்கள்அப்ளை செய்யும்செயல்முறையையும்,பாஸ்போர்ட் எடுக்க என்னவிதிமுறை மற்றும் வழிமுறைஅனைத்தையும் தெரிந்துகொள்ள போகிறோம்.
1) பாஸ்போர்ட் எத்தனைவகைப்படும்?
• ஆர்டினரி (Ordinary)
• அப்பிசியல் (Official)
• டிப்ளோமேட்டிக் (Diplomatic)
• ஜம்போ (Jumbo)
என நான்கு விதமானபாஸ்போர்ட்கள்வழங்கப்படுகின்றன. Ordinaryபாஸ்போர்ட் சாதாரணகுடிமக்களுக்கும், Officialபாஸ்போர்ட் அரசாங்கஊழியர்களுக்கும்,Diplomaticபாஸ்போர்ட் முதல்வர், பிரதமர்போன்ற உயர்மட்டத்தலைவர்களுக்கும், Jumboபாஸ்போர்ட் வியாபாரநிமித்தமாக அடிக்கடி வெளிநாடுசெல்பவர்களுக்கும்வழங்கப்படுகின்றன.
2) பாஸ்போர்ட் பெறுவதில்எத்தனை முறைகள் உள்ளன?
பாஸ்போர்ட் பெறுவதில்எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன.ஒன்று ஆர்டினரி (Ordinary),மற்றொன்று தட்கல்(Tatkal).
3) ஒரு முறை வாங்கும்பாஸ்போர்ட்டை எத்தனைவருடங்களுக்குப்பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்தபாஸ்போர்ட்டைப் பத்துவருடங்களுக்குப்பயன்படுத்தலாம். மீண்டும்அதை அதற்கான கட்டணத்தைக்கட்டிப் புதுப்பித்துக்கொள்ளலாம். ஒன்பதுவருடங்கள் முடிந்தவுடன்எப்போது வேண்டுமானாலும்புதுப்பித்துக் கொள்ளலாம்.மீண்டும் 10 வருடங்களுக்குவழங்கப்படும். இப்படிபுதுப்பிக்கும்போது, 15நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட்கிடைத்துவிடும்.
4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்கதேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டுஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவதுஇரண்டு)
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்தஒரு வருடமாக பணம் எடுக்கவும்போடவும் செய்து அதை பதிவுசெய்திருக்கவேண்டும்)
• தொலைபேசி ரசீது (உங்கள்பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கானரசீது (உங்கள் பெயரில் இருக்கவேண்டும்)
2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவதுஓன்று)
• விண்ணப்பதாரர் 26.01.89அன்றைக்கு பிறந்த அல்லதுஅதற்குப் பிறகு பிறந்தவராகஇருந்தால் மட்டும் நகராட்சிஆணையாளரால் அல்லதுபிறப்பு & இறப்பு பதிவாளர்அலுவலகத்தில் கொடுக்கும்பிறப்பு/இறப்பு சான்றிதல்ஏற்கதக்கதாகும்.என்றால்அரசாங்கத்தால் தரும் பிறப்புசான்றிதழ்
• பள்ளியில் வழங்கப்படும்சான்றிதழ்
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்)ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதழ்கள்
• 10வது மேல் படித்திருந்தால்ECNR முத்திரை இருக்காது,அதற்காக கடைசியாக எதைபடித்து முடித்தீர்களோ அதனைகொண்டுபோகவும்.
• உங்களது பெயரை (மதம்மாறும்போது/ எண்கணிதமுறையில்) மாற்றி இருந்தால்அதற்கு உண்டான சான்றிதழ்.
• பழைய பாஸ்போர்ட் எடுக்கும்போது திருமணம் ஆகாமல்இருந்து, பழையது முடிந்துரினிவல் பாஸ்போர்ட் அப்ளைசெய்ய போனாலும் மேற்கன்டஅனைத்தையும் கொண்டுபோகவேண்டும்,
• மேலும் திருமண சான்றிதழ்இணைக்க வேண்டும் அல்லதுமாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரிபப்ளிக் மூலமாக கணவனும்மனைவியும் சென்றுவாங்கவேண்டும்.
• பழைய பாஸ்போர்ட்டைகொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப்படித்திருந்தால் அல்லதுபடிக்கவே இல்லை என்றால்நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட்பெற்று விண் ணப்பிக்கலாம்.26.01.1989-ம்ஆண்டுக்குப் பிறகுபிறந்திருந்தால் பிறப்புசான்றிதழ் கட்டாயம் தேவை.
சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டுஎடுக்க விரும்பினால்,பெற்றோர்கள் கடவுச்சீட்டுஇருப்பவராக இருந்தால்,காவல்துறை அறிக்கைதேவைப்படாது. பெற்றோர்க்குகடவுச்சீட்டு இல்லாவிட்டால்அவர்தம் விண்ணப்பங்களும்காவல் துறைக்கு அனுப்பிஅறிக்கை பெற்ற பின்னரேகடவுச்சீட்டு அளிப்பர்.
5) இணையதளம் மூலம்விண்ணப்பிபதால் என்னபயன்கள்?
• விண்ணப்பதாரர்கள் வட்டாரபாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ளஅதற்குரிய அலுவலரிடம்சமர்ப்பிக்கவேண்டியதற்கானதிட்டமிட்ட தேதி, நேரம்,தேவையான ஆவணங்கள்மற்றும் கட்டணம்ஆகியவைகளை பெறமுடியும்
• நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய தேவையில்லை
6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கானகட்டணம்?
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்துகொள்ள:http://passport.gov.in/cpv/FeeStructure.htm
• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ(சாதரணமான முறை)
• காணாமல் போனால் –சேதமடைந்தால் – 1500 ரூ(பாஸ்போர்டு முடிந்து இருந்தால்– Expired)
• காணாமல் போனால் –சேதமடைந்தால் – 3000 ரூ(பாஸ்போர்டு Expireஆகவில்லைஎனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில்500 ரூபாயைச் சேர்த்துக்கொள்ளவும்
• தட்கல் முறையில் பெற 2000ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்
7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்துபோனால் காவல் துறையினரிடம்புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெறவேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள்.அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட்பாஸ்போர்ட் வழங்கப்படும்.இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய்மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய்கட்டணம்.
தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட்விண்ணப்பங்களை மண்டலபாஸ்போர்ட் அலுவலகத்தில்செலுத்தி 30 நாள்களில்பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடுகின்றன. அவசரமாகவெளிநாடு செல்பவர்க்குஉதவியாக விரைந்துபாஸ்போர்ட் பெறவும்வகையிருக்கிறது. இதற்கு“தட்கல் திட்டம்” என்ற புதியமுறை அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. இத்திட்டத்தில்சிறப்புரிமை அடிப்படையில்விரைந்து பாஸ்போர்ட் பெறமுடியும்.
தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும்அனைத்து பாஸ்போர்ட்களைச்சார்ந்த காவல்துறையின்சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட்வழங்கிய பின் இருக்கும் கீழேசொல்லப்பட்ட பட்டியலிலிருந்துமூன்று ஆவணங்களைசமர்ப்பிப்பதன் மூலம் தட்கால்திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட்பெறுவதற்கு விண்ணப்பதார்ர்பெறமுடியும். மூன்றுஆவணங்களில் ஒன்றுபுகைப்படைத்துடன் கூடியஅடையாள அட்டையாக இருக்கவேண்டும்
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட்பெற விழைவோர் ரூ.2500/-கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாகசமர்பிக்க வேண்டும்.
கீழ் வரும் ஆவணங்களின்பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாகசமர்ப்பிக்க வேண்டும்
• வாக்காளர் அடையாள அட்டை
• இரயில்வே அடையாளஅட்டைகள்
• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
• வங்கி அலுவலக புத்தகம்
• எரிவாயு இணைப்பிற்கானரசீது
• ஓட்டுனர் உரிமம்
• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும்பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி)சான்றிதழ்கள்
• சொத்து ஆவணங்களான பட்டா,பதிவுசெய்யப்பட்டஒப்பந்தபத்திரங்கள் இன்னும்பிற குடும்ப அட்டைகள்
• அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களால் வழங்கப்பட்டமாணவர்களுக்கான புகைப்படஅடையாள அட்டைகள்
• ஓய்வூதிய ஆவணங்களானமுன்னாள் இராணுவ வீரரின்ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம்செலுத்துவதற்கான ஆணை,முன்னாள் இராணுவ வீரரின்விதவை/சார்ந்தவர்கள்சான்றிதழ்கள், முதியோர்ஓய்வூதிய ஆணை, விதவைஓய்வூதிய ஆணை
• மத்திய/மாநில அரசுகளால்வழங்கப்பட்ட பணிக்கானபுகைப்பட அடையாள அட்டை,பொது நிறுவனங்கள், உள்ளூர்அமைப்புகள் அல்லது பொதுவரையறை நிறுவனங்கள் வழங்கிய ஆணை.

No comments:

Post a Comment