Wednesday, 31 July 2019

பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டியவை.....

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தலைமை ஆசிரியர்கள்

மற்றும்
ஆசிரியர்களுக்கு ...
பார்வையின் போது பின்பற்றப்பட வேண்டியவை.....
‍♂ அனைத்து ஆசிரியர்களும் காலை வழிபாட்டிற்கு வருகை புரிதல் வேண்டும்.
அரசாணை 264 ன்படி காலை வழிபாட்டு செயல்பாட்டிற்கான பதிவேடுகள் முறையாகப் பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்
உறுதிமொழி
கொடிப்பாடல்
ஆத்திசூடி (1,2 வகுப்புகளுக்கு)
திருக்குறள்-விளக்கத்துடன் (3,4,5 வகுப்புகளுக்கு)
பழமொழி
பொதுஅறிவு
செய்திகள் (தமிழ் / ஆங்கிலம்)
பிறந்த நாள் வாழ்த்துகள்
ஆசிரியர் நன்னெறி கருத்துக்கள்
தேசியகீதம்
முதலான அனைத்து செயல்பாடுகளும் காலை வழிபாட்டு நிகழ்வுகளில் இருத்தல் வேண்டும்.
‍♂. சுயவருகைப் பதிவேடு
    மாணவர்கள் தாங்களாகவே குறித்துக் கொள்ளுதல் வேண்டும்.
‍♂ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும்  தானாக வருகையை பதிவு செய்திட பயிற்சி கொடுத்தல் வேண்டும்.
‍♂ வகுப்பறையில் பாட அட்டவணை (கால அட்டவணை ) இருத்தல் வேண்டும்.
அதன்படியே கற்பித்தல் நிகழ்வு நடைபெறுதல் வேண்டும்.
‍♂ காலநிலை அட்டவணையை மாணவர்கள் குறித்திட  வேண்டும்‌.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவர் குறித்தல் நன்று.
அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான பயிற்சி கொடுத்தல் வேண்டும்.
மாத இறுதியில் காலநிலை சார்ந்த தொகுத்தல் இடம் பெறுதல் வேண்டும்.
‍♂ ஆரோக்கிய சக்கரம் வகுப்பறையில் இருத்தல் வேண்டும்.
பவுடர்,கண்ணாடி,சீப்பு,சோப்பு முதலான பொருள்கள் ஒரு டிரேவில் மாணவர்கள் பயன்படுத்தும் வண்ணம் இருத்தல் வேண்டும்.
‍♂ஆரோக்கிய சக்கர பொருட்கள் ஒவ்வொரு வகுப்பறையிலும் தனித்தனியே இருத்தல் வேண்டும்.
‍♂ கம்பி பந்தலில் மாணவர்களின் புதிய படைப்புகள் ( ஒரு மாதத்திற்குள்ளானவை - 30 நாட்கள் - ) மட்டுமே இடம் பெறுதல் வேண்டும்.
‍♂படைப்புகளில் ஆசிரியர் தனது கையொப்பத்தை தேதியுடன் குறிப்பிடுதல் வேண்டும்.
‍♂பழைய படைப்புகள்  ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே கோப்புகளில் பராமரிக்கப்பட வேண்டும்.
‍♂. தாழ்தள கரும்பலகையினை மாணவர்கள் முறையாக பயன்படுத்திட வேண்டும்.
‍♂மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தாழ்தள கரும்பலகை பிரித்திருக்க வேண்டும்.
‍♂மேலும் அதில்
மாணவர் பெயர்,வகுப்பு,பாடம்,தேதி மற்றும் மாணவர்கள் அடைய நினைக்கும் இலக்குகள் குறிப்பிடப்பட வேண்டும்.
‍♂அத்தோடு மாணவர்கள் முன்னர் எழுதியதை அழித்து விடாமல் பாதுகாத்தல் நன்று.
‍♂. மாணவர்களுக்கு இரண்டு (2) கோடு மற்றும் நான்கு (4)கோடு நோட்டுகளில் ஆசிரியர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை தனது கைப்பட எழுதி பயிற்சிக்காக கொடுத்திட வேண்டும்.
‍♂மேலும் அதனை சரியான முறையில் அந்த வளைவு கோடுகள்,ஏற்ற இறக்கங்கள் முதலான இதர பிழைகள் இருந்தால்
அதை சுட்டிக்காட்டி திருத்தம் செய்து தேதியுடன் கையொப்பமிட வேண்டும்.
‍♂. மாணவர்களுக்கு தினமும்
தமிழில் இரண்டு வார்த்தைகளும் ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகளும்
Dictation ஆக கொடுக்க வேண்டும்.
அதனை தினமும் வகுப்பு ஆசிரியர் திருத்தி தனது கையொப்பத்தை தேதியுடன் குறிப்பிட வேண்டும்.
‍♂ 1,2 ,3 ஆகிய வகுப்புகளுக்கு புதிய கற்றல் அணுகுமுறையிலேயே கற்பித்தல் நிகழ்வு நடத்திட வேண்டும்.
‍♂மூன்று வகுப்புகளும் இருந்தால் ஒவ்வொரு வகுப்புக்கும் 30 நிமிடங்களும்
‍♂இரண்டு வகுப்புகள் இருந்தால் ஒவ்வொரு வகுப்புக்கும் 45 நிமிடங்களும்
‍♂ஒரே வகுப்பு இருந்தால் 90 நிமிடங்களும் கற்பித்தல் நிகழ்வு நடத்திட வேண்டும்.
‍♂ஒரு வகுப்பிற்கு கற்பிக்கும் போது மற்ற இரண்டு (2) வகுப்புகளுக்கு இதர கற்றல் செயல்பாடுகளை அல்லது பணிகளை கொடுத்திட வேண்டும்.
‍♂குழு அட்டை பயன்படுத்துதல் வேண்டும்.
‍♂. கற்பித்தலின் போது குழு செயல்பாடுகளுக்கும்
மாணவர்களின் தனித் திறமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து விட வேண்டும்.
‍♂. 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி (SALM)முறையில் கற்பித்தல் நிகழ்வு நடைபெற வேண்டும்.
‍♂கற்றல் பெட்டிகள் புதிய வார்த்தைகள், கருத்து வரைபடம், தொகுத்தல், மதிப்பீடு, தொடர் பணி ஆகிய ஐந்தும் (5) நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு தனித்தனியே இருத்தல் வேண்டும்.
‍♂புதிய வார்த்தையில் பொருள் புரியாத அல்லது தெரியாத வார்த்தைகள் மட்டுமே இடம் பெறுதல் வேண்டும்.
‍♂கருத்து வரைபடம் வரையும்போது கோடிட்ட இடத்தை நிரப்புவது போன்று அமைதல் வேண்டும்.
‍♂  ஆசிரியர் பாடத்திட்டம் எழுதுதல் வேண்டும்.
‍♂. கற்பித்தலின் போது கற்றல் துணைக்கருவிகள் பயன்படுத்துதல் வேண்டும்.
ABL அட்டைகளை பயன்படுத்தலாம்.
‍♂. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் ஒரு கட்டுரை கண்டிப்பாக எழுதுதல் வேண்டும்.
‍♂கட்டுரைகள் பல உட் தலைப்புகளை கொண்டிருத்தல் வேண்டும்.
‍♂கட்டுரையில் வரும் தவறுகளுக்கு அதன் நேர் பகுதியில் மட்டுமே மாணவர்கள் எழுதி இருத்தல் வேண்டும்.
‍♂ஆசிரியர் கட்டுரையை திருத்தி கையொப்பம் இடுதல் வேண்டும்.
‍♂. இரண்டு  முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் பதிவேடு Update செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.
‍♂மாணவர்களின் தரநிலை உண்மை தன்மையுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
‍♂ 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு  மற்றும் ஆங்கில வாசிப்புத் திறன் , எழுதுதல் திறன் மற்றும் எளிய கணித செயல்பாடுகள் முதலானவற்றில் தரநிலை A மற்றும் B  நிலையிலேயே மாணவர்கள் இருத்தல் வேண்டும்.
‍♂6 ,7, 8 ஆம் வகுப்புகளுக்கு  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்பு திறன் என்பது A தரநிலையிலேயே இருத்தல் வேண்டும்.
‍♂அதற்கான முயற்சியை ஆசிரியர்கள் விரைவாக மேற்கொள்ளுதல் வேண்டும்.
‍♂ வளரறி மதிப்பீடு( அ ) Fa(a)
மற்றும்
வளரறி மதிப்பீடு (ஆ) Fa(b)
முதலான தேர்வுகள் நடைபெற்று இருக்கவேண்டும்‌.
‍♂அந்த நோட்டினை திருத்தம் செய்து ஆசிரியர்கள் தேதியுடன் கையொப்பம் இட வேண்டும்.
‍♂மேலும்
Fa(a) , Fa(b) தேர்வுக்கான வினாத்தாள்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
‍♂ஆசிரியர்கள் பராமரிக்கும் CCE பதிவேட்டில் மாணவர்களின் மதிப்பெண்கள் முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தால் வேண்டும்.
மாணவர்கள் நோட்டில் உள்ள மதிப்பெண்களுக்கும் CCE பதிவேடிற்கும் முரண்பாடுகள் இருத்தல் கூடாது.
‍♂. மெல்லக் கற்போர் பதிவேடு பராமரித்தல் வேண்டும்.
‍♂C மற்றும் D தரநிலையில் உள்ள மாணவர்களுக்கு என்னென்ன செயல்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது ? என்பதை பதிவேட்டில் பதிவு செய்யவும்.
‍♂. ஆசிரியர்கள் பாட வேலை பதிவேடு ( Work Done Register ) Update செய்திருத்தல் வேண்டும்.
‍♂கற்பித்தல் நிகழ்வானது ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய வகுப்புகளுக்கு புதிய கற்றல் / கற்பித்தல் அணுகுமுறையிலேயே இருத்தல் வேண்டும்.
‍♂4 மற்றும் 5-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி (SALM) முறையிலேயே கற்பித்தல் இருத்தல் வேண்டும்.
‍♂6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு படைப்பாற்றல் கல்வி (ALM) முறையில் கற்பித்தல் நிகழ்வு அமைதல் வேண்டும்.
‍♂. கற்பித்தலின் போது அனைத்து ஆசிரியர்களும் QR Code னை பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.
‍♂. மாணவர்களின் நோட்டுகளில் புதிய வார்த்தைகள் கண்டறிதல் , அடிக்கோடிடுதல் கருத்து வரைபடம் அல்லது மன வரைபடம் தொகுத்தல் முதலான செயல்பாடுகளை செய்துள்ளனரா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.
‍♂. வகுப்பறையில் அகராதிகள் (3 Volume Dictionary) பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.
‍♂  TV DVD மாணவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட பதிவேடு Update செய்தல் வேண்டும்.
‍♂. கணித உபகரணங்கள் பயன்பாடு பதிவேடு Update செய்தல் வேண்டும்.
‍♂. எளிய அறிவியல் சோதனைகள் பதிவேடு Update செய்தல் வேண்டும்.
‍♂. புத்தக பூங்கொத்து பதிவேடு Update செய்தல் வேண்டும்.
‍♂. Language Kit பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.
‍♂. Science Kit பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.
‍♂. Sports Kit பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.
‍♂. கணினி மையங்கள்  உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு கணினி சார்ந்த அடிப்படை பயிற்சிகள் கொடுத்தல் வேண்டும்.
அதற்கான பதிவேட்டினை Update செய்திருத்தல் வேண்டும்.
‍♂பழுதடைந்த கணினிகள் இருந்தால் அதனை சரி செய்து வைக்கவும்.
‍♂ மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு முறையாக சுத்தமாக வழங்கப்படுகிறதா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.
‍♂. பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் முறையாக பயன்படுத்தி அதற்கான இரசீதுகளை கோப்புகளில் பராமரிக்கவும்.
‍♂மான்ய தொகையிலிருந்து பள்ளிக்கு செய்தித்தாள் வாங்கிக்கொள்ளலாம்.
‍♂ தீர்மானப் பதிவேடு ஒவ்வொரு செயல்பாடுகளுக்கு முன்பும் முறையாக Update செய்திருத்தல் வேண்டும்.
‍♂. பள்ளி மேலாண்மை குழு (SMC)
கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று நடைபெறுதல் வேண்டும்.
‍♂பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் கற்றல் வளர்ச்சி மற்றும் இதர செயல்பாடுகள் அனைத்தும் பதிவேட்டில்  இருத்தல் வேண்டும்.
‍♂. குடிதண்ணீர் வசதி முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.
‍♂. கழிப்பிட வசதி சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறதா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.
‍♂வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் முதலானவை தூய்மையாக இருத்தல் வேண்டும்.
‍♂. ஆசிரியர் பயிற்றுநர்கள் நடத்திய  Periodical  Assessment test க்கான தரநிலை படிவம் பள்ளியில் இருத்தல் வேண்டும்.
‍♂. பள்ளி செல்லா குழந்தைகள்/ இடைநின்ற மாணவர்களுக்கான இணைப்பு மையம் ( NRSTC ) பள்ளியில் செயல்பட்டு வந்தால் மையத்தை , மாணவர்கள் கற்றல் நிகழ்வினை தலைமையாசிரியர் கண்காணித்தல் வேண்டும்.
இணைப்பு மையம் தனி வகுப்பறையில் செயல்படுதல் வேண்டும்.
‍♂. போக்குவரத்து வசதிகள் இல்லாத குடியிருப்புகளுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலம் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனை முறையாக மாணவர்கள் பயன்படுத்துவதை தலைமையாசிரியர் கண்காணித்தல் வேண்டும்

No comments:

Post a Comment