தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
திருக்குறள்
அதிகாரம்:அருளுடைமை
திருக்குறள்:248
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
விளக்கம்:
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.
பழமொழி
Small rudders guide great ships
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
இரண்டொழுக்க பண்புகள்
1. முடிந்த அளவு சுற்று சூழலுக்கு உகந்த பொருட்களையே உபயோகப் படுத்துவேன்.
2. இந்த மழை நாட்களில் எங்கு எல்லாம் மர விதைகள் போட முடியுமோ அங்கு எல்லாம் போட்டு அதன் மூலம் மரங்கள் வளர்க்க முயற்சி செய்வேன்.
பொன்மொழி
சமூகத்தின் கால்கோளாகவும் ,மனிதனின் நடத்தையையும், நாகரீகத்தையும் கட்டிக் காக்கும் ஆற்றல்மிகு சக்தியாகவும், நீதிநெறி வழுவாது செயலபடும் திறனை வழங்கும் நிறுவனம் நம் குடும்பம் தான் ....
மிக்ஸிகன் ..
பொது அறிவு
ஜூலை28 நேற்று உலக மஞ்சள் காமாலை நோய் விழிப்புணர்வு தினம்
1.மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படும் மூலிகை தாவரங்கள் எவை?
கீழாநெல்லி, வெள்ளை கரிசலாங்கண்ணி
2. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு எது?
கல்லீரல்
English words & meanings
Kangaroo - a marsupial animal.
வயிற்றில் குட்டி வைத்து வளர்க்கும் விலங்கு
1. ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு.
2. அங்கு மனிதர்கள் விட கங்காரு அதிகம் காணப்படும்.
ஆரோக்ய வாழ்வு
சாக்லேட் மூளையில் மகிழ்ச்சியை தூண்டும் ஹார்மோனான செரட்டோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மூளையை சுறுசுறுப்பாக்கி சோர்வை நீக்க உதவுகிறது.
Some important abbreviations for students
* D.I.Y. - Do it yourself
* E.T.A. - estimated time of arrival
நீதிக்கதை
காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.
“எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.
அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.
அதைப்பார்த்த சிங்கம், “ஏய்……..ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே…..எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது.
அதற்கு யானை, “இதோ……என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்……….என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்……….”என்றது.
அது கேட்டு சிங்கம் யோசித்தது. “இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!
கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!” என்று அது புரிந்து கொண்டது
கவலை படுவதால் நம் பிரச்சினைகள் தீராது. எனவே தீர்வு பற்றி யோசிக்க வேண்டும் குட்டீஸ்.
திங்கள்
தமிழ்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்
சந்ததி - வழித்தாேன்றல்
சமீபம் - அண்மை
சத்தியாகிரகம் -அறப்பாேராட்டம்
சம்பிரதாயம் - தாென்மரபு
சாபம் - கெடுமாெழி
இன்றைய செய்திகள்
29.07.2019
* உலகில் முதல்முறையாக நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ அருங்காட்சியகம்..: ஜோர்தானில் மக்கள் பார்வைக்காக திறப்பு.
* இயற்கை இடர்பாடுகள் குறித்த வானிலை முன் எச்சரிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு ‘‘டி.என். ஸ்மார்ட் ஆப்’’ என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
* டெல்லி , மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் கன மழை. வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
* இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.
* தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தங்கம் வென்றார். இப்போட்டியில் 4 வெள்ளி, 3 வெண்கலத்தையும் வென்றது இந்தியா.
Today's Headlines
🌸For the first in world military museum has been very opened in Jordan.It was opened inside the water
🌸 The Government of Tamil Nadu has introduced a "TN Smart App".This app is to get awareness of weather forecasts and natural hazards .
🌸Heavy rains in Northern states including Delhi, Madhya Pradesh and Rajasthan. Floods affect people's normal lives.
🌸 Indian player Mary Kom won the gold medal in the Presidential Cup in Indonesia.
🌸 Ashish Kumar won gold in Thailand Open Boxing Tournament .India won 4 silver and 3 bronze medals.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment