Sunday 28 July 2019

புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இதுவரை 19 தவறுகள் திருத்தம்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இதுவரை 19 தவறுகள் திருத்தம்: அமைச்சர் செங்கோட்டையன்





புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இதுவரை கூறப்பட்டுள்ள 19 தவறுகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால் உடனடியாக திருத்தம் செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாடப்புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். மேலும் அவர் பணியில் தவறுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதற்காக 19 தவறுகளை தாம் ஏற்று, அதற்காக ஆன்லைன் மூலமாக எந்தெந்த இடங்களில் தவறு ஏற்பட்டிருக்கிறதோ அது திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சிறந்த கல்வியை பெறுவதற்கு தமக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார். ஏனினில் ஏதாவது ஒரு குறைபாடு எங்காவது இருக்குமானால் அதை சுட்டிக்காட்டுகிற போது அதை இந்த அரசு கண்டிப்பாக நிறைவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் உருதுமொழி பாடப்புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், உருதுமொழியிலும், சிறுபான்மையின மக்கள் அவரவர் மொழிகளிலும் தேர்வுகள் எழுத வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து வேலூரில் 30 அமைச்சர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் திமுக சார்பில் 30 முன்னாள் அமைச்சர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment