Friday, 19 September 2014

ஐஎஸ்ஓ (ISO) தரச் சான்றிதழ் பெற்ற அரசு தொடக்கப் பள்ளி!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


      பள்ளித் தலைமை ஆசிரியரின் முயற்சியால் கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிதனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறுவசதிகளைப் பெற்று மாணவர்களை கவர்ந்து வருகிறது.

           அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளைதனியார் பள்ளிக்குக்கொண்டு சேர்க்கும் இன்றைய காலகட்டத்தில்தனியார்பள்ளியில் பயிலும்மாணவர்களைஅரசுப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் அதிசயம் நிகழ்கிறதுஎன்றால்உங்களால் நம்ப முடிகிறதாஅதுவும்தமிழகத்தின் ஒரு மூலையில்உள்ளஒரு குக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இது நடந்துள்ளதுமுயன்றால்எதுவும் சாத்தியம்...

                ஐந்தாம் வகுப்பு படிக்கும் சத்தியபிரியாவின் தாத்தாவுக்கு செருப்புதைக்கும் தொழில்பெற்றோருக்கு கூலி வேலைஇருந்தாலும்பள்ளியில் ஓய்வுநேரங்களில்மடிக்கணினியில்ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம்வீட்டில்மின்சாரம் இல்லாத மேகவண்ணன் படிப்பதுமூன்றாம் வகுப்புபள்ளியில்திரையிடப்படும்ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்மட்டற்ற பிரியம்வீட்டில் உப்பு நீரைப் பருகும் திலகவதிவகுப்பு நேரங்களில்,சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அடிக்கடி குடிப்பதில் விருப்பம்இன்றும் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரியாத பெற்றோருக்குப் பிறந்தநான்காம் வகுப்பு வினோதினி,வகுப்புக்கு வந்தவுடன் படிப்பதுஆங்கில நாளிதழ்மேற்கத்தியஇந்தியப் பாணிக்கழிவறைகள் இரண்டு இருப்பதால்அங்கு படிக்கும் நாகேந்திரனுக்கு சிறுநீர் கழிக்கதிறந்தவெளி தேவையில்லை.

           மாலையில் ஆம்னி வேனில் வீட்டுக்குச் செல்லும் போதுசகமாணவர்களைப் பார்த்துக் கையசைப்பதுகருணாவுக்கு பெருமிதம்சகலாவதிக்குசதுரங்க விளையாட்டுசுரேந்தருக்குகுழந்தைகள் படிப்பதற்கான புத்தகங்கள்.முனுசாமிக்குகேரம் போர்டுஇப்படி ஒவ்வொரு மாணவரின் தனித்தனிவிருப்பங்களைப் பூர்த்தி செய்வதுஇதெல்லாம் பெருநகரங்களில் உள்ள,சி.பி.எஸ்.., மெட்ரிக்ஆங்கிலோ-இந்தியன் பள்ளி என நீங்கள் நினைத்திருந்தால்,உங்கள் எண்ணங்களை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள்தமிழகத்தின் வறட்சிமாவட்டமானகிருஷ்ணகிரி மாவட்டம்மத்தூர் ஒன்றியத்தில் உள்ள கஞ்சனூர்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிதான் இது.

           மத்தூர் ஒன்றியத்தில் உள்ளஅரசு தொடக்கப் பள்ளிகள்ஒவ்வொன்றாகமூப்பட்டு வரும் நிலையில்இப்பள்ளி மட்டும்தனியார் பள்ளிகளுக்கு இணையாகபோட்டி போட்டு வருகிறதுஒரு நாளைக்குநான்கு முறை மட்டுமே அரசுப்பேருந்து வரும் இந்தக் குக்கிராமத்தில்இப்படி ஒரு சாதனை எப்படிச் சாத்தியம்எனப் பொதுமக்களிடம் கேட்டால்அவர்களின் விரல்கள்பள்ளித் தலைமைஆசிரியர் வீரமணியை நோக்கியே நீள்கின்றன.

            2007 வரைஇந்தப் பள்ளியின் நிலைமை தலைகீழ்இம்மாவட்டத்தில்,குழந்தைத் திருமணம் அதிகளவு நடப்பதால்பெரும்பாலோர்பெண்குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில்லைமேலும்அருகில் உள்ள,பெங்களூருக்கு வேலைக்குச் செல்வதால்குழந்தைகளையும் கூட்டிச் செல்வர்.அதுமட்டுமின்றிஇங்குள்ள செங்கல் சூளைகளில்குழந்தைகளை வேலைக்குஅமர்த்துவதால்பள்ளிக்கு அனுப்புவதில்லைமது பழக்கம்அதிகளவில்புழக்கத்தில் இருப்பதால்தங்கள் குழந்தைகள் படிப்பு குறித்துபொதுவாகதந்தைகளுக்கு எந்த அக்கறையும் இல்லைஇதனால், 30 பேராகக் குறைந்தது,மாணவர்களின் எண்ணிக்கை.

மாணவர்களின் படிப்புபெற்றோர்களின் கைகளில் இருக்கிறதுஅதனால்,           முதலில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதைஉணர்ந்தேன்தினமும்மாலை நேரங்களில்கஞ்சனூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்வேன்குழந்தைகள் படிக்க வேண்டியஅவசியத்தை உணர்த்தினேன்ஆரம்பத்தில்அப்பகுதி மக்கள் இப்பிரச்சினையைப்புரிந்துகொண்டதாகக் கூடத் தெரியவில்லைதொடர்ச்சியாகவிழிப்புணர்வுஏற்படுத்தியதன் விளைவாககுழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் துவங்கினர்.அதுதான் என் முதல் வெற்றி” என்கிறார்தொடக்கப் பள்ளியின் தலைமைஆசிரியர் வீரமணி.

           பொதுமக்கள்குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினாலும்பிரச்சினைவேறொரு வடிவில் காத்திருந்ததுஅது பள்ளியின் உள்கட்டமைப்பு பிரச்சினை.மலையடிவாரத்தில் பள்ளியின் இருப்பிடம் அமைந்திருந்ததால்சறுக்குவிளையாட்டு விளையாடும் வகையில்அதன் அமைப்பு இருந்ததுகழிவறைசுத்தமாக இருக்காதுசமையல்கூடம் பக்கம் போனாலேவாந்தி வரும்பள்ளிவளாகத்தில் சுகாதாரம் என்ற பேச்சுக்கே இடமிருக்காதுஎங்கு பார்த்தாலும்குப்பைகள்மேலும்மாலைக்கு மேல் சமூக விரோதிகளின் கூடாரமாகி விடும்.பள்ளியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவில்லை என்றால்இருக்கும்மாணவர்களும்பள்ளியை விட்டு நின்று விடுவர் என உணர்ந்த வீரமணி,அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம்அனைத்து வசதிகளையும் பெற்றார்.முதலில்பள்ளி வளாகத்தில் மண்ணை நிரவிசமதளப்படுத்தினார்வளாகம்தயார்மற்றவைதொடக்கப் பள்ளிகளுக்குஅரசு வழங்கும் அனைத்துவசதிகளையும்போராடிப் பெற்றார்விளைவுஇப்போதுடைல்ஸ் தரை,சுத்தமான ஐந்து கழிவறைகள்பாதுகாப்பான சுற்றுச்சுவர்சூரிய ஒளியின் மூலம்மின்சக்தி பெறும் வசதிவளாகம் முழுக்க விதவிதமான செடி கொடிமரங்கள்இத்யாதி இத்யாதி எனப் பெருகியது.

இப்போதுஅதிக முன்னேற்றம் அடைந்துள்ளதுமாணவர்கள்ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி பெற தொலைக்காட்சிஓவியங்கள் வரையமற்ற செய்திகள்தெரிந்துகொள்ள மடிக்கணினிஅனைத்து விதமான விளையாட்டுப் பொருட்கள்,குழந்தைகளுக்கு எழுதப்பட்ட புத்தகங்கள்நூலகம் முழுக்க, ‘புதிய தலைமுறை’, ‘புதிய தலைமுறை கல்வி’ வார இதழ்கள்நடுப்பக்க வாசகங்கள்குழந்தைகளுக்குசொல்வதற்குபெரியவர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்கள் எனப் பயன்படும்வகையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளதுஅதனால்இப்பள்ளி.எஸ்.., தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.

இரண்டாவது ஆண்டாகஇப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி நடந்து வருகிறது.இப்பள்ளியின் பெருமைஅருகில் உள்ள படப்பள்ளிபுதுக்காடுகயிற்றுக்காரன்கொட்டாய்கூராக்கம்பட்டிகுரும்பர் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியதால்,மத்தூரிலும்ஊத்தங்கரையிலும் உள்ள தனியார் பள்ளிகளில்தங்கள்குழந்தைகளைச் சேர்த்த பெற்றோர்கள்இப்போதுகஞ்சனூர் பள்ளியை நோக்கிபடையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்தனியார் பள்ளியையே மிஞ்சும் வகையில்,உள் கட்டமைப்பு வசதிசெயல்முறைக் கல்விபோதிய பாதுகாப்புபராமரிப்புபோன்றவை இருப்பதால்அருகில் உள்ள கிராமத்தினர்கஞ்சனூர் பள்ளியில்தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வருகின்றனர்அதனால்மூடப்படும் நிலையில்இருந்த பள்ளியில்இன்று, 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள்படித்து வருகின்றனர்.

பக்கத்து ஊர்களில் பயிலும்நடுநிலைஉயர்நிலைமேல் நிலைப் பள்ளிமாணவர்கள்தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக, ‘கஞ்சனூர் இளைஞர் நற்பணி மன்றம்’ அமைத்துக் கொடுத்துள்ளார் வீரமணி.இம்மாணவர்கள் மூலம்பெற்றோர்களுக்குவிழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கிறது.பள்ளிக்கூடமே இல்லாத ஊரில்தற்போது பட்டதாரி மாணவர்கள் உருவாகிவருகின்றனர்நற்பணி மன்றத்தில் உள்ள அவர்கள்மாலை நேரங்களில்எட்டாம்வகுப்புக்குமேல் பயிலும்அனைத்து மாணவர்களுக்கும் டியூஷன் எடுத்துவருகின்றனர்வீடுகளில் போதுமான வசதி இல்லை என்பதால்இரவு வரை,பள்ளியில் டியூஷன் நடக்கிறதுஇக்காரணங்களுக்காகமாவட்ட அளவில்,பள்ளிகளுக்குத் தரப்படும் அனைத்து விருதுகளையும்இப்பள்ளி பெற்றுள்ளது.நூற்றுக்கணக்கான விருதுகளும்கோப்பைகளும்நூலகத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளனமாவட்ட அளவில் நடக்கும் பேச்சுகட்டுரைகுறள்ஒப்புவித்தல் போட்டிகளில்இப்பள்ளி மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு மரம் நடும் விருப்பம் வர வேண்டும் என்பதற்காகஒவ்வொருமாணவரையும் ஒரு மரத்தை நடச் செய்துஅதைப் பராமரிக்கும் பொறுப்பு,அவர்களிடமே கொடுக்கப்பட்டுள்ளதுஇப்பள்ளியில் உள்ள தனிச் சிறப்பு,மாணவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்பிறந்த நாள் காணும் மாணவருக்கு,ஆசிரியர்களின் சார்பில்கிரீடமும் பரிசுப் பொருளும் வழங்கப்படும்மேலும்,அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்படும்.

பள்ளியின் வளர்ச்சியில் பெற்றோர்களும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக,மாதம் ஒரு முறைஅவர்களின் குழந்தைகள் என்னென்ன படிக்கின்றனர்;அவர்களுக்கு எதில் விருப்பம்அதை எவ்வாறு முன்னேற்றுவது போன்ற பல்வேறுஆலோசனைகளையும் வழங்குகின்றனர்இதனால்பெற்றோர்களுக்கும்,பள்ளிக்குமான நெருக்கம் மேலும் அதிகரிக்கிறதுஅதுமட்டுமின்றிஒவ்வொருஆண்டும் நடக்கும் ஆண்டு விழாவான கல்வித் திருவிழாவில்பெற்றோர்களுக்குமுக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதுஇதனால்பள்ளியின் வளர்ச்சியில்பெற்றோர்களும் கை கோர்க்கின்றனர்.

எந்த மாணவர் முகத்திலும் சோர்வு இல்லைகளைப்பு இல்லைமாலை நேர மணிஅடித்தவுடன்பள்ளியை வெறுத்து ஓடும் அவசரம் இல்லைகுறிப்பாகபள்ளியின்எந்த இடத்திலும் பிரம்பு இல்லைஅந்தப் பள்ளி வளாகம் முழுவதும்,சிரிப்பலைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளதுஅது மாணவர்களின் முகத்திலும்எதிரொலிக்கிறது. “நாங்கள் நல்ல சம்பளம்தான் வாங்குறோம்அதுக்குஉண்மையா இருக்கணும்னு முயற்சி பண்றோம்எங்களாலஒரு சின்ன ஊர்லமாற்றம் வந்துதுன்னாஅதை விட பெரிய விருதுவேற என்ன இருக்க முடியும்சார்” என்கிறார் வீரமணி.


கஞ்சனூரில் தொடக்கப்பள்ளி மட்டுமே இருப்பதால்உயர்நிலைமேல் நிலைவகுப்புகள் படிப்பதற்குஊத்தங்கரைக்கும்மத்தூருக்கும் செல்ல வேண்டியநிர்பந்தத்தில் மாணவர்கள் உள்ளனர்எனவேஇதே ஊரில்நடுநிலைப்பள்ளியாவது அமைக்க வேண்டும் என்பதுஅப்பகுதி மக்களின் நெடுநாள்கோரிக்கைஅதுமட்டுமின்றிஇப்போது, 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள்இருந்தாலும்போதுமான ஆசிரியர்கள் இல்லைநன்றாகச் செயல்படும்இதுபோன்ற அரசுப் பள்ளிகளை ஊக்குவிக்க அரசு ஏதாவது செய்யுமா?

No comments:

Post a Comment