கூட்டணி - திருமருகல்
|
சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்செப்டம்பர் 14,2014,15:35 IST
விருதுநகர்: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அரசு பள்ளிகளில், சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளி கட்டட மேற்கூரை பெயர்ந்து, சுவர்களில் கீறல் விழுந்து பராமரிப்பின்றி, சேதமடைந்த நிலையில் உள்ளன. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அக்கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: துவக்க முதல் மேல்நிலை வரை அனைத்து அரசு பள்ளி கட்டடங்களின் நிலை குறித்தும், பொதுப்பணித்துறை இன்ஜினியர்களின் உதவியுடன் ஆய்வு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம்.
அங்கு நடத்தப்படும் வகுப்புகளை வேறு பகுதிக்கு மாற்றவும், பள்ளிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் அதன் திறப்பு விழாவிற்காக காத்திருக்காமல், துறை உயர் அதிகாரிகளின் முறையான அனுமதி பெற்று பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி அருகே தாழ்வாக செல்லும் மின் வயர்கள், உயர் மின்அழுத்த கம்பிகளை உடனடியாக மாற்றி அமைக்க, வளாகத்தில் மழைநீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
|
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டப் பொதுக்குழுக்கூட்டம் நாளை ( ஞாயிறு) செப்டம்பர் 14 காலை 10 மணியளவில் நாகப்பட்டினம் வடகுடி சாலையில் உள்ள நாகை மாவட்ட அலுவலகம் ஈசுவரன் மாளிகையில் நடைபெறுகிறது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்...
|
No comments:
Post a Comment