Thursday, 1 August 2019

காற்றுக்கு பெயர்!!! தெற்கிலிருந்து வீசினால் --தென்றல் வடக்கிலிருந்து வீசினால் --வாடை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
காற்றுக்கு பெயர்!!!
தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் --வாடை
கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் ---மேலை

உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு ! இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் !

(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:
(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:

(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
(௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"

இப்பேர்ப்பட்ட மொழியை தமிழர்கள் புறக்கணிப்பது வேதனையிலும், வேதனை...!!!.

No comments:

Post a Comment