தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
இன்று தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 19 வயதுக்குட்பட்ட 2.24 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வினியோகிக்க பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:தேசிய குடற்புழு நீக்க தினம் இன்று (ஆகஸ்ட் 8ம் தேதி) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி தமிழகத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்கள் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகிக்கப்பட உள்ளது. ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் என ஒரு லட்சம் பேர் மாத்திரைகள் வினியோகிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி மாத்திரைகள் வினியோகிக்கப்படும்.
1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மி.கி அல்பெண்டசோல் மாத்திரை (அரை மாத்திரை) வழங்கப்படும். 2 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு அல்பெண்டசோல் மாத்திரை (400 மி.கி) வழங்கப்படுகிறது. அல்பெண்டசோல் மாத்திரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இந்த மாத்திரை சாப்பிட்டால், குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்படும். ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதனால் பெற்றோர் இந்த வாய்ப்ைப பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்டத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று தேசிய குடற்புழு நீக்க தினம் - அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம்
இன்று தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 19 வயதுக்குட்பட்ட 2.24 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வினியோகிக்க பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:தேசிய குடற்புழு நீக்க தினம் இன்று (ஆகஸ்ட் 8ம் தேதி) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி தமிழகத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்கள் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகிக்கப்பட உள்ளது. ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் என ஒரு லட்சம் பேர் மாத்திரைகள் வினியோகிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி மாத்திரைகள் வினியோகிக்கப்படும்.
1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மி.கி அல்பெண்டசோல் மாத்திரை (அரை மாத்திரை) வழங்கப்படும். 2 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு அல்பெண்டசோல் மாத்திரை (400 மி.கி) வழங்கப்படுகிறது. அல்பெண்டசோல் மாத்திரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இந்த மாத்திரை சாப்பிட்டால், குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்படும். ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதனால் பெற்றோர் இந்த வாய்ப்ைப பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்டத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment