Thursday, 8 August 2019

School Morning Prayer Activities - 09-08-2019

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

School Morning Prayer Activities - 09-08-2019


காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்
09-08-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள்-670*

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
 வேண்டாரை வேண்டாது உலகு.

*பொருள்*:

வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும் செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பி போற்றாது.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

 நம் செயல்களால் மற்றவர்கள் வருந்தக் கூடாது என நினைப்போர் தான், இங்கு பல சூழ்நிலைகளில் வருந்தத்தக்க நிலைக்கு தள்ளப்படுகின்றனர்,மற்றவர்களால்!!
- ஸ்ரீகிருஷ்ணா

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

 *ஏறச் சொன்னால் எருது கோபம்இ இறங்கச் சொன்னால் நொண்டி கோபம் .*

நாம் அறிந்த விளக்கம் :

கால் ஊனமான ஒருவன் ஏர் பூட்டி உழவுத்தொழிலை மேற்கொள்ளும் போது அவனையும் மாடையும் இணைப்பது ஏர். கால் ஊனமானவனால் ஏரைத் தள்ளிக் கொண்டே நடக்க முடியாது. அவனை ஏரில் ஏற்றினால் மாடு எடை தாளாமல் தள்ளும். அவனை இறங்கச் சொன்னால் அவன் கோவித்துக் கொள்வான். இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவது ஏர்தான் என்பது நமக்கு விளங்கும். ஆக ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம். இறங்க சொன்னால் நொண்டிக்கு கோபம் என பழமொழியின் அர்த்தம் விளங்குகிறது

விளக்கம் :

ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும் மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும் இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம்இ அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள் தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல் ஏறினால் எருதுவுக்கு வலிக்கும் ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. ஆக மொத்தம் இந்த பழமொழியின் மூலம் நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும் சிலருக்கு தீமையும் பயக்கும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*(T.T)
1. இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன?

 ஹீமோகுளோபின்

2. இராணித் தேனீயின் முக்கிய வேலை எது?

 முட்டையிடுதல்

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important  Used Words*

 Kerosene  மண்ணெண்ணெய்

 Table  மேஜை

 Candle  மெழுகுவர்த்தி

 Dish  சிறு தட்டு

 Rope  கயிறு

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬(T.T)

*Today's grammar*

This list contains both homophones and homographs.

allowed - permitted
aloud - out loud

ant - picnic pest
aunt - relative, as in your mom's sister

arc - curve
ark - Noah's boat

ate - chewed up and swallowed
eight - number after seven

bare - uncovered
bear - grizzly animal

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*குருவும் சீடனும்*

 குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்றான் சீடன் உடனே குரு அவனை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பட்டாம் பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்ததை இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா! என்று குரு அவனிடம் சொன்னார்.

 அவன் பட்டாம் பூச்சியைத் துரத்திக் கொண்டு ஓடினான். ஆனால் அவனால் பிடிக்க முடியவில்லை. பரவாயில்லை வா நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம் என்று குரு அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். இருவரும் அங்கு அமைதியாக நின்று தோட்டத்தின் அழகைக் கண்குளிரப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

 சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. சற்று நேரத்திற்கு முன்பு அவன் பிடிக்கத் சென்ற பட்டாம்பூச்சி இப்போது அவன் கைகளிலே வந்து அமர்ந்தது. அப்போது குரு சிரித்தபடி அவனிடம் சொன்னார். இதுதான் வாழ்க்கை! மகிழ்ச்சியைத் தேடி ஓடுவதை விட நாம் வாழ்க்கையை அமைதியாக ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும் என்றார்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾
T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள்: வெளிநாட்டினர் அணியும் அரிய வகை அணிகலன்கள் கண்டுபிடிப்பு.

🔮ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு.

🔮தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு.

🔮 அத்திவரதர் வைபவம் 16-ம் தேதி இரவுடன் நிறைவு: 17-ம் தேதி தரிசனம் ரத்து...மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு.

🔮வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் 42 பந்தில் 65 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

🔮Pakistan suspends Samjhauta train service, bans Indian films.

🔮Kerala rains: Red alert in 4 districts; Munnar receives 194 mm rainfall in 24ஜ hours.

🔮2 Hyderabad Men Invent "Smart Bangle" For Women Safety. It Sends Shock Signals.

🔮Pranab Mukherjee, Nanaji Deshmukh, Bhupen Hazarika conferred Bharat Ratna.

🔮Avalanche in Nilgiris records highest rainfall in Tamil Nadu.

No comments:

Post a Comment