Sunday, 4 August 2019

செயலை தொடங்கும் முன் யோசி _ தினம் ஒரு கதை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
Think Before you work

      A fox was walking near a well. Somehow by incident it slipped in. It tried its best to get out but could not. At that time a very thirsty goat passed by the well and saw the fox there. It asked the fox what it was doing there.

      The cunning fox replied that it had itself jumped into the well. I find it very pleasant here. If you want to drink sweet and cold water, come down and experience that pleasure here.

     Without thinking of the consequences goat jumped into the well. The fox jumped on goat′s back and come out of well. The fox smiled at the goat and went on its way. The Goat began to repent its decision.

Moral: Look before you leap.


செயலை தொடங்கும் முன் யோசி

     ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த நரி கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால் வெளியே வர முடியவில்லை. அந்த நேரத்தில் மிகவும் தாகமாக இருந்த ஆடு கிணற்றின் வழியாக செல்லும் போது நரியைப் பார்த்து, அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டது.


     தந்திரமான நரி, தானே கிணற்றுக்குள் குதித்ததாக பதிலளித்தது. இங்கே நான் மிகவும் இதமாக இருக்கிறேன். நீ இனிப்பு மற்றும் குளிர்ந்த நீரை குடிக்க விரும்பினால், இங்கே வந்து அந்த இன்பத்தை அனுபவித்து பார், என்றது.

   விளைவுகளை பற்றி யோசிக்காமல் ஆடும் கிணற்றினுள் குதித்தது. நரி ஆட்டின் முதுகின் மீது குதித்து கிணற்றை விட்டு வெளியே வந்தது. நரி ஆட்டை பார்த்து சிரித்துக் கொண்டே அதன் வழியில் சென்றது. ஆடு தனது முடிவை எண்ணி வருந்தியது.

நீதி: ஆழம் தெரியாமல் காலை விடாதே.

No comments:

Post a Comment