Wednesday, 14 August 2019

1) School Morning Prayer Activities - 14-08-2019

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்

14-08-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள்-181*

 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
 புறங்கூறான் என்றல் இனிது.

*பொருள்*

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது கெட்டது தெரியாமல் நல்லவராய் இருப்பது  ஆபத்தானது.

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

புல் தடுக்கிப் பயில்வான் போல ,

*நாம் அறிந்த விளக்கம்* :

புல் தடுக்கி எங்கேயாவது யாரேனும் விழுந்திருப்பதாய் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சில நேரங்கள் சில பதங்கள் இவ்வாறு பழமொழிகளில் கலந்து விடுகிறது. புல் தடுக்கி என்பதை நம்பவே முடியாது. வேண்டுமானால் சிலவகை காட்டுப் புல்கள் அடர்ந்து புதராய் இருக்கும் இடத்தில் புல் இடறி வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். அப்படி ஒரு சம்பவத்தால் வந்ததுதான் இந்த பழமொழி. ஆனால் இதன் உண்மை விளக்கம் அல்ல

*விளக்கம்* :

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான். ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர் உடனே அதை வேரோடு பிடுங்கி எரித்து சாம்பலாக்கி - கரைத்துக் குடித்தாராம். எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது. இது தான் உண்மை விளக்கம்.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார்?

வில்கின்சன்

2. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார்?

எகிப்தியர்கள்

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Use Of 'Little' and 'A Little'*

Liitle means 'hardly any' and it has a negative meaning.

Example :

There is little water in the jug.
Practically it means no water.

A Liitle means 'some, but not much' and it has a positive meaning.

Example :

There is a little water in the jug.
Practically it means some water.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*பலம் எது? பலவீனம் எது?*

 ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமைபட்டுக் கொண்டே இருந்தது.

 உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும் மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.

 இப்படியிருக்க ஒரு மழைக்காலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது. அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப்படுத்தி அருகில் சென்றது.

 மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற மைனா மயிலிடம் நீ மிகவும் அழகாய் இருக்கிறாய் அதை நினைத்து நீ சந்தோஷப்பட்டிருக்கிறாயா என்றது. மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லை என்று பதில் கூறியது.

 இதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையும் இருக்கும். அது என்ன என்பதை உணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டுமே அன்றி எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது.

 இறுதியில் தன் தவறை உணர்ந்த மயில் மைனாவிற்கு நன்றி தெரிவித்தது.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*செய்திச் சுருக்கம்*

🔮எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயார் - ராணுவ தளபதி பிபின் ராவத்.

🔮காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை.

🔮கல்லூரிப் படிப்புடன் ஐ.ஏ.எஸ்.தேர்வுக்கு பயிற்சி சென்னையில் 7-ந் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்.
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி தகவல்.

🔮கீழடி அகழ்வாராய்ச்சி பணி: திண்ணை வடிவிலான திட்டு, சிமெண்டு சுவர் கண்டுபிடிப்பு.

🔮கிரிக்கெட்டை 2028-ல் ஒலிம்பிக்கில் சேர்க்க பேச்சுவார்த்தை : மைக் கேட்டிங்

🔮Military movement by Pakistan along LoC normal, says Gen. Rawat.

🔮Affected by floods, rains, Karanataka to keep independence day celebrations simple.

🔮India's passenger vehicles' sales slumped by 31% in July.

🔮South Africa include three new names in Test squad for India tour; Quinton de Kock to lead T20I side

No comments:

Post a Comment