Sunday, 4 August 2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 05-08-2019

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


*இன்றைய திருக்குறள்*

*குறள்-682*

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
 இன்றி யமையாத மூன்று.

மு.வ உரை:

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

கருணாநிதி  உரை:

தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.

*சாலமன் பாப்பையா உரை:*

அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு.
- இயேசு கிறிஸ்து

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி*

அதிக ஆசை அதிக நஷ்டம் ; பேராசை பெரு நஷ்டம்.

Much would have more, and lost all.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
*Important  Used Words*

 Pot Herb  பீர்க்கங்காய்

 Potato  உருளைக்கிழங்கு

 Pumpkin  பரங்கிக்காய்

 Pulp  பழச்சதை

 Radish  முள்ளங்கி

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1.சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

புதுமைப்பித்தன்

2. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தொடரை கூறியவர் யார் ?

அறிஞர் அண்ணாதுரை

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Conjunctions†

A conjunction is a word that "joins". A conjunction joins two parts of a sentence.

Here are some example conjunctions:

Examples;

Coordinating Conjunctions;

and, but, or, nor, for, yet, so

Subordinating Conjunctions;

although, because, since, unless

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*

*வேற்றுமை*

எழுவாய் வேற்றுமை

செயப்படு பொருள்

 வேற்றுமை

கருவி வேற்றுமை

உடன் நிகழ்ச்சி
வேற்றுமை

கொடை வேற்றுமை

நீங்கல் வேற்றுமை

உடைமை வேற்றுமை

இட வேற்றுமை

விளி வேற்றுமை

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*பழமொழி கதை*

*குருவை மிஞ்சிய சிஷ்யன்*

 குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் என்று நிறைய பேர் இருந்தலும் இவர்களில் மிகச் சிறந்தவர் இராமானுஜர். இராமானுஜர் சிறு வயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக ஒரு குரு வந்தார். சிறுவனின் புத்திசாலித்தனத்தைப் பார்த்தார். அவருக்கு அந்த சிறுவனை மிகவும் பிடித்து போய் விட்டது. அதனால் அவனுக்கு ஒர் மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். ஒம் நமோ நாராயாயணாய நமஹ என்ற மந்திரத்தை சொல்லிக் கொடுத்துவிட்டு அவனுக்கு ஒரு நிபந்தனையும் வைத்தார்.

 அதாவது இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றும் அப்படி சொல்லிக் கொடுத்தால் மந்திரம் பலிக்காமல் போய் விடும் என்றார். அவரும் சரி என்றார். ஆனால் ராமானுஜனோ மந்திரம் பலிக்கும் நிலையில் இருக்கும் போது ஊர் கோவிலின் கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டு எல்லோரையும் அழைத்து மந்திரத்தை உபதேசித்தார். இதைப் பார்த்த குருவுக்கு கோபம் வந்தது விட்டது.

 இராமானுஜனிடம் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டபோது உங்கள் கட்டளையை மீறியதற்காக நான் ஒருவன் நரகத்திற்குப் போனாலும் பரவாயில்லை. இத்தனை பேர் சொர்க்கத்திற்கு போவார்கள் இல்லையா? என்று ராமானுஜன் கூறினார். இவர் குருவை மிஞ்சிய சிஷ்யராகி உலகப் புகழ் பெற்றார்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾
*செய்திச் சுருக்கம்*

🔮சந்திராயன் 2 விண்கலம் முதல்முறையாக பூமியை படம்பிடித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது இஸ்ரோ.

🔮புனேயில் மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம், 170 பேர் மீட்பு.

🔮சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை.

🔮ஜப்பான் ஹொன்சூவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.

🔮நண்பர்கள் தினத்தையொட்டி இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல்!

🔮சென்னை தீவு திடலில் பிரமாண்ட மாரத்தான் போட்டி; 5,800 பெண்கள் பங்கேற்பு.

🔮After Indian Army’s strongly-worded statement, Pakistan PM Imran Khan repeats ‘cluster bombs’ claim.

🔮Chandrayaan-2 sends back images of Earth. Yes, these are the real ones!

🔮India test-fires all-weather, all-terrain Quick Reaction Surface to Air Missile.

🔮Over 70,000 people affected as Godavari swells in Andhra.

🔮Steve Smith becomes second-fastest batsman to register 25 Test centuries.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

*தொகுப்பு*

T. தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்,
9600423857

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment