தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
30 கிராம் எடையில் நீர் செயற்கைக்கோள் - 30 (வாட்டர் சாட் - 30) - அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு - சந்திராயன் 1 முன்னாள் திட்ட இயக்குனர் உயர்திரு முனைவர். மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு .
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறிய அளவிலான செயற்கைக்கோளை ராட்சத பலூன் உதவியுடன் விண்ணில் செலுத்துவதற்கான பயிற்சி அளிக்கும் திட்டம் முதல் கட்டமாக ஆகஸ்டு 11 ஆம் தேதி நிகழ உள்ளது என சந்திராயன் 1 திட்ட இயக்குனரும் , விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கான போட்டியாக 30 கிராம் எடையில் செயற்கைக்கோளை 5 மாணவர்கள் கொண்ட குழு தயாரித்து அனுப்ப வேண்டும் என ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.
இதைத் தொடந்து கரூர் மாவட்டம், வெள்ளியணை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் சி. நவீன் குமார், கோ.சுகந்த், கு.பசுபதி, மு.விஷ்ணு ,சு.ஜெகன் ( 8 ஆம் வகுப்பு), ஆகிய மாணவர்கள் தம் வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால் வழி காட்டுதலுடன் இன்று சமுதாயத்தில் நிழவும் சுற்றுச் சூழல் சார்ந்த பிரச்சினையான நீர் பற்றாக்குறை , நிலத்தடி நீர் மட்டம் குறைவு, மழைப்பொழிவு குறைவு, விவசாய நிலங்களின் மண் வளம் பாதிப்பு, நீர், ஆறு, ஏரி, குளம், கண்மாய் என எங்கும் பரவியிருக்கும், வெட்ட ,வெட்ட மீண்டும் வளரும் ப்ரோசோபிஸ் ஜுலிபுளோரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட சீமைக்கருவேலம்மரம் குறித்த தங்கள் ஆய்வை மேற்கொள்ளும் விதத்தில், 3.5 செ.மீ கன சதுரம் கொண்ட கலனில் 30 கிராம் செயற்கைக்கோளை வடிவமைத்து அதற்கு நீர் செயற்கைக்கோள் - 30, (வாட்டர் சாட் - 30 , ws_30) என பெயர் வைத்துள்ளனர்.
இன்று (03.08.2019) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிவியல் பலகை நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றிய ISR0 துணைக் கோள் மையம் , முன்னாள் திட்ட இயக்குனர் சந்த்ராயன், சென்னை , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவர் முனைவர். மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பேசுகையில் அறிவியல் கருத்துக்களை, தமிழ் மொழியில் மக்களிடமும், மாணவர்களிடமும் எடுத்துச் செல்வதன் நோக்கம் தான் அறிவியல் பலகை திட்டம். இதன் மூலம் 9வது திசையான ஆகாயத்திலும் அறிவியல் பரவ வேண்டும் , நிலத்திலும், நிலவிலும், விண்வெளியிலும் அறிவியலை விதைப்போம் என்று கூறியதுடன், ஆகஸ்டு 11 ஆம் தேதி தமிழகத்தைச் சார்ந்த 12 அரசுப்பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பான 30 கிராம் அளவிலான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளோம் என்றார்.
அறிவியல் பலகை கருத்தரங்கத்தில் கலந்துக் கொள்ளும் பொருட்டு, கரூர் மாவட்டத்திலிருந்து நானும் (பெ.தனபால்), ஆசிரியர் திரு . எம். மனோகர் அவர்களும் தேர்வு பெற்று பங்கேற்கச் சென்றிருந்தோம். வெள்ளியணை, அரசுப் பள்ளி மாணவர்கள் தயாரித்த 30 கிராம் நீர் செயற்கைக்கோளை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஐயா அவர்களிடம் காண்பித்தேன். வெள்ளியணை, அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் செயல்பாட்டை ஐயா அவர்கள் பெரிதும் பாராட்டினார்கள், மேலும் அரசுப் பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான செயற்கைக்கோளை (30 கிராம்) ராட்சத பலூன் உதவியுடன் சுமார் .15 கி.மீ உயரத்துக்கு விண்ணில் செலுத்தவும், செற்கைக்கோள் செயல்பாட்டையும், அது அனுப்பும் படம் மற்றும் சமிக்ஞைகளை தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் நிஜமான விண்வெளி திட்டங்களில் இஸ்ரோவுடன் இணைந்து செல்படுவதற்கான உத்வேகம் கிடைக்கும் என பாராட்டி வாழ்த்தினார்.
வெள்ளியணை அரசுப்பள்ளி மாணவர்கள் தயாரித்த ws - 30 செயற்கைக்கோளில் கையொப்பமிட்டார், ஐயாவுடன் அருகில் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளவும் அனுமதித்தார். இந்நிகழ்வு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. ஐயாவின் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் வெள்ளியணை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த பரிசாக நான் கருதுகின்றேன்.
30 கிராம் செயற்கைக்கோள் தயாரிப்பு போட்டியில் வெள்ளியணை, அரசுப் பள்ளியை தேர்வு செய்து ,எங்களை ஊக்கப்படுத்தி வரும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்திற்கும், பாராட்டி ,வாழ்த்துக்களை தெரிவித்த சந்திராயன்-1 முன்னாள் திட்ட இயக்குனர் , தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் துணைத் தலைவர் உயர் திரு . முனைவர் . மயில்சாமி அண்ணாதுரை ஐயா அவர்களுக்கும், விஞ்ஞான் பிரசார், இயக்குனர், உயர் திரு .முனைவர். நகுல் பராசர் ஐயா அவர்களுக்கும், விஞ்ஞான் பிரசார், விஞ்ஞானி, உயர்திரு முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் ஐயா அவர்களுக்கும்,சென்னை, தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் , செயல் இயக்குனர் - பொறுப்பு உயர்திரு . முனைவர்.S.செளந்திரராஜ பெருமாள் ஐயா அவர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் , பெங்களூர் ஆக்டிவிட்டி எஜுகேட்டர் இயக்குனர் திரு. பாலமோகன் அவர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி.
நீர் செயற்கைக்கோள் - 30
(வாட்டர் சாட் - 30)
பெ.தனபால்,
(செயற்கைக்கோள் தயாரிப்பு வழிகாட்டி ஆசிரியர்)
பட்டதாரி அறிவியல் ஆசிரியர்,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
வெள்ளியணை,
கரூர் மாவட்டம்.

No comments:
Post a Comment