தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 உச்ச வரம்பில் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதால் அரசுக்கு ரூ.325 கோடியே 20 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும் எனவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment