Sunday, 15 January 2017

பள்ளி மேலாண்மை குழுவிற்கு ரூ.3.60 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


ராமநாதபுரம்,பள்ளி மேலாண்மை குழுவிற்கு பயிற்சி அளிப்பதற்காக 3 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தலைமை ஆசிரியர் உள்பட 30 பெற்றோரை உறுப்பினராக கொண்ட பள்ளி மேலாண்மை குழுக்கள் ஒவ்வொரு பள்ளியிலும் செயல்படுகின்றன. பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக பெற்றோரில் ஒருவரே இருக்கிறார்.
தமிழகத்தில் பள்ளி மேலாண்மை குழு செயல்படும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், தலா ஒரு தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவரின் பெற்றோர், என ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 3 பேர் வீதம் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு 4,088 இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக 3.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகள், பாலின பாகுபாடு களைதல், பேரிடர் மேலாண்மை, தரமான கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சமூக தணிக்கை, சுகாதாரம் பேணுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பொங்கல் விடுமுறைக்கு பின் பயிற்சி துவங்கும்,என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment