Sunday, 15 January 2017

மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிக்க 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை பயிற்றுவிக்க, 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒழுக்க பண்புகளை கற்றுக் கொடுக்காததால், அவர்களின் செயல்பாடுகளில், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. 
பல மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்பதில்லை.ஊர் சுற்றுவது, மாணவியரை கிண்டல் செய்வது, சக மாணவர்களிடம் பிரச்னை செய்வது, ஆசிரியர்களை எதிர்த்து பேசுவது, வகுப்புகளுக்கு வராமல், பள்ளி வளாகத்தில் கூடி விளையாடுவது என, தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையை மாற்ற, மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வியை கற்றுக் கொடுக்கும் வகையில், பாட நேரங்களிலேயே, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக பள்ளி கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. முதல் பிரிவுக்கான பயிற்சி, பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில், சென்னையில் நேற்று துவங்கியது. தமிழகம் முழுவதும், 6,700 பள்ளிகளில் படிக்கும், 20 லட்சம் மாணவர்களுக்கு, நல்லொழுக்க கல்வி கற்றுத் தரப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment