Sunday 15 January 2017

சமச்சீர் கல்வி: பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தில்மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதோடு, 
கற்பித்தல்முறைகளில் புதியஉத்திகள்பின்பற்றப்படுகின்றனஎன்று
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில்தமிழக அரசு தெரிவித்துள்ளது. கால மாற்றத்துக்கு ஏற்ப சமச்சீர்கல்விபாடத்திட்டத்தில் மாற்றம்கொண்டு வரவேண்டும் என்றபத்திரிகை செய்தியை, சென்னை உயர் நீதிமன்றமதுரைக்கிளை தாமாகவேமுன்வந்துவழக்காகஎடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு ஏற்கெனவேவிசாரணைக்குவந்தபோது, பள்ளிக் கல்வித்துறைஇயக்குநர் பதிலளிக்கநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிபதிகள் ஏ. செல்வம், பி. கலையரசன் ஆகியோர்அடங்கிய அமர்வின்முன்பு, இந்தவழக்குபுதன்கிழமைவிசாரணைக்குவந்தது. அப்போது, பள்ளிக்கல்வித் துறைஇயக்குநர் எஸ். கண்ணப்பனின்பதில் மனுதாக்கல்செய்யப்பட்டது.
அதில், ஆதாரமற்றதகவல்களின் அடிப்படையில்செய்தி வெளியாகியுள்ளது. 1 முதல்9 ஆம் வகுப்பு வரைமுப்பருவத்தேர்வு முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள்தேர்வு நேரத்தில்சந்திக்கும் மன அழுத்தம்உள்ளிட்டவைகுறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-2010ஆம்கல்வியாண்டில் 1 முதல்10ஆம்வகுப்பு வரையிலானபாடத்திட்டம்மாற்றிஅமைக்கப்பட்டது. இந்தப்பாடத்திட்டம் கல்விஆராய்ச்சிமற்றும் பயிற்சிக்கானதேசியகவுன்சிலின் நிபுணர்கள்மூலம் உருவாக்கப்பட்டது.
சமுத்துவசமுதாயம், பேரிடர்மேலாண்மை, சுயஒழுக்கம்உள்ளிட்ட பல்வேறுஒழுக்கநெறிகளைஉள்ளடக்கியது. இதுதவிர, 9 மற்றும்10 ஆம் வகுப்புமாணவர்களுக்கு ஒலி, ஒளிகுறுந்தகடுகள் மூலம்கற்பித்தல்வகுப்புகள்நடத்தப்படுகின்றன. இதன் மூலம், 15 லட்சம்மாணவர்கள்பயனடைந்துள்ளனர். மேலும், 3 முதல் 8ஆம் வகுப்புவரையிலானமாணவர்களுக்கு ஆங்கிலப்பாடங்களை ஒலி குறுந்தகடுகள்மூலம்கற்பிக்க முடிவுசெய்துள்ளோம். இதுவரை3 முதல் 5ஆம் வகுப்பு வரைஇந்தத்திட்டம்செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தகுறுந்தகடுகளுக்கானமொழிபெயர்ப்புப்பணி 240 ஆசிரியர்களைக்கொண்டுசெய்யப்பட்டுள்ளது.
காது கேட்காத, வாய் பேசமுடியாதமாற்றுத்திறனாளிமாணவர்களுக்கு சைகைமொழியில்கற்பித்தலுக்கானசோதனைமுயற்சி திண்டுக்கல்மாவட்டத்தில்அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி கல்விகற்பிப்பதில் தமிழகஅரசுமுன்னோடியாகத் திகழ்கிறது. மாணவர்களுக்கு சிறந்தகல்வியைவழங்குவதற்காகஆசிரியர்களுக்கும்அவ்வப்போது பயிற்சிகள்அளிக்கப்படுகின்றன. மேலும், மாணவர்களுக்குஇலவசமடிக்கணினி, சீருடைஉள்ளிட்ட 16 விதமானஉதவிகளை அரசுவழங்குகிறது. இந்தஉதவிக்கு 2015-2016 வரை ரூ. 3 ஆயிரத்து45 கோடி ஒதுக்கப்பட்டது. மாணவர்கள் உதவிக்கான நிதிஒவ்வொருஆண்டும்உயர்த்தப்படுகிறது. இவற்றை கண்காணிக்கமாவட்டவாரியாக தனிஅலுவலர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி தரத்தை மேம்படுத்தஅரசுநடவடிக்கை எடுத்துவருவதால், இந்தமனுவைத்தள்ளுபடி செய்யவேண்டும்என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைஏற்றுக்கொண்டநீதிபதிகள், தமிழகத்தில் கல்வித் தரத்தைமேம்படுத்தமேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளைதொடர்ந்துசெயல்படுத்தஉத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment