தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
தமிழகத்தைச் சேர்ந்த, 17 சிறார்கள், மத்திய அரசின், 'பாலஸ்ரீ' விருது பெற்றுள்ளனர்.
மேடைக்கலை, படைப்புக் கலை, அறிவியல் கலை, எழுத்துக் கலை ஆகியவற்றில், 16 வகையான உட்பிரிவுகளில் புதுமைகள் படைத்திடும், 10 முதல், 16 வயதிற்கு உட்பட்ட
சிறுவர்களுக்கு, தேசிய அளவில், 'பாலஸ்ரீ' விருது வழங்கப்படுகிறது.
சிறுவர்களுக்கு, தேசிய அளவில், 'பாலஸ்ரீ' விருது வழங்கப்படுகிறது.
இது, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும், தேசிய சிறுவர் மன்றத்தால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின், ஒரு பகுதியாக விளங்கும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம், சிறந்த சிறார்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்விருதுக்கான தேர்வை, மாவட்ட, மாநில அளவில் நடத்தி, தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பி வைப்பர். இந்திய அளவில், 520 சிறார்கள் பங்கேற்ற தேசிய போட்டியில், 82 பேர், விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 17 பேர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
No comments:
Post a Comment