Tuesday, 17 January 2017

தமிழகத்தில் ஜனவரி 20 க்கு மேல் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


ஜனவரி 20 க்கு மேல் தமிழகத்தில் 100 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘தமிழக விவசாயிகளின் வேதனை கலந்த மழை இரைஞ்சுதல் கடவுளின் காதுகளில் விழுந்திருக்கலாம்.
ஏனெனில் ஜனவரி மாதத்தின் கடைசி 10 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு உண்டு. தமிழக விவசாயிகளுக்கு விரும்பத் தகுந்த மழைப்பொழிவைத் தரும் ஆற்றல் மிக்க வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வானிலை நிலைய அறிவிப்புகளின் படி பொய்த்துப் போன பின்னும். சைபீரியன் ஹை இப்போதும் வலிமையுடன் இருப்பதால் மேற்கு பசிபிக் பருவக் காற்று தற்போது மேலும் வலுப்பெற்று வங்கக் கடலில் ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஜனவரி 20 க்கு மேல் முந்தைய மழை வறட்சி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 100 மிமீ அளவில் நீடித்த மழை நிச்சயம்’ என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன். தமிழக மழைப் பதிவு வரலாற்றில் இதற்கு முந்தைய வறட்சி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிக மழைப்பொழிவு என்பது தமிழ்நாடு வெதர்மேனின் கணிப்பு.
இவரது கணிப்பின்படி தமிழகத்தில் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் அளவுக்காவது குறைந்த பட்ச மழைப் பொழிவு இருந்து, தமிழ்நாட்டிற்கு வரவிருக்கும் குடிநீர் பஞ்சம் நீங்கினால் சரி!

No comments:

Post a Comment