தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
ஆதார் அட்டை உள்ள சிறுவர்களுக்கு 15 வயது நிரம்பியதும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, செய்தித்துறை இயக்குனர் மற்றும் மின்-ஆளுமை இயக்குனர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் சேர்க்கை வழிமுறைகள் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். இதன் படி ஆதார் அட்டை உள்ள சிறுவர்களுக்கு 15 வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கட்டாயமாக நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நேரில் சென்று உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக புதன்கிழமை அன்று நிரந்தர மையங்களுக்கு நேரில் சென்று 15 வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உரியத் தகவல்களை அளிக்க வேண்டும் என்று குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment