Sunday 15 January 2017

8ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்!!!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் Asus நிறுவனமும் ஒன்று. சில காலமாக தங்களின் தயாரிப்பில் புதுமைகள் புகுத்தாமல் இருந்து வந்த Asus, 8 GB RAM வசதியுடன் கூடிய முதல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Asus ZenFone AR என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், அமெரிக்காவில் லாஸ்வேகாஸில் நடந்த எலக்ட்ரானிக் கண்காட்சியில் (CES2017) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், tango என்ற Augmented reality அம்சங்களை புகுத்தி தயாரித்துள்ளனர். tango மூலம் கணினியில் பயன்படுத்தும் சென்சார்களை இதிலும் பயன்படுத்தலாம். இதன்மூலம் ஒவ்வொரு புகைப்படத்தையும் Augmented reality எனப்படும் தத்ரூபமான முப்பரிமாண வடிவத்தில் பார்க்கலாம். அதேபோல Day Dream தொழில்நுட்ப வசதி மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்ஸ் மற்றும் வீடியோ உபயோகிக்கலாம். இதுதவிர, Auto Focus வசதி கொண்ட 23 MP கேமரா வசதியும், 5.7 Inch திரை மற்றும் உலகின் அதிவேகமான quad-core Qualcomm Snapdragon 821 processor உடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment