தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
ஐ.நா.,வின் புதிய பொதுச் செயலராக போர்ச்சுகல் நாட்டின் மாஜி பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பொறுப்பேற்றார்.
பொறுப்பேற்பு:
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக இருந்த பான்-கி-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31ம் தேதியுடன்(31-12-16) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலராக போர்ச்சுகலின் மாஜி பிரதமரும் ஐ.நா.,வின் அகதிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான ஆன்டோனியோ கட்டரஸ் முறைப்படி நேற்று(ஜன.,1) பொறுப்பேற்றார். 2021 டிசம்பர் 31ம் தேதி வரை அப்பதவில் கட்டரஸ் தொடருவார்.
உலக அமைதி:
இதனைத் தொடர்ந்து கட்டரஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது: உலக மக்கள் அனைவரும் முதலில் அமைதியை நிலை நாட்டுவதையே புத்தாண்டு உறுதி மொழியாக ஏற்க வேண்டும். உலக அமைதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன். நாடுகளுக்கு இடையே பிரச்னைகளை தீர்க்கும் நோக்கத்தில் எனது பணியை தொடருவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment