Tuesday, 17 January 2017

கழிப்பறைகளை கணக்கெடுக்க பள்ளிகளுக்கு உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


பள்ளி மாணவ, மாணவியரின் வீட்டு கழிப்பறை எண்ணிக்கையை கணக்கெடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், திறந்தவெளி கழிப்பறைகளை மாற்றி, வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறைகள் கட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில், கழிப்பறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளி மாணவ, மாணவியரின் வீடுகளில் கழிப்பறை உள்ளதா என, ஊரக வளர்ச்சித் துறையுடன் சேர்ந்து, பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுக்கிறது.
இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இருந்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், மாணவ, மாணவியரிடம் பேசி, கழிப்பறைகள் இல்லாத வீடுகளின் பட்டியலை, ஜன., 18க்குள், ஒப்படைக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

காசோலைகளை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


சிவகங்கை மாவட்டத்தில் பெண் கல்விக்கான உதவித்தொகை கோடிடப்பட்ட காசோலைகளாக வழங்கப்பட்டதால்,அவற்றை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புறங்களில் பயிலும் மிகவும் பிற்பட்ட மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை பிற்பட்டோர் நலத்துறை மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை 500 ரூபாய், 5 முதல் 8 ம் வகுப்பு வரை ஆயிரம் வழங்கப்படும். கடந்த ஆண்டு வரை உதவித்தொகைக்கான காசோலை கோடிடப்படாமல் (கிராஸ்) தலைமைஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த காசோலையில் உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் மேலொப்பம் பெறப்பட்டு, வங்கியில் மாற்றப்பட்டது. இந்த ஆண்டு தலைமைஆசிரியர் சேமிப்பு கணக்கில் செலுத்தி பணமாக்கும் வகையில் காசோலையில் கோடிடப்பட்டுள்ளது.
'தலைமைஆசிரியர்' என்ற பெயரில் எந்த பள்ளியிலும் சேமிப்பு கணக்கு கிடையாது. இதனால் காசோலையை மாற்ற முடியாமல் தலைமைஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: தொடக்க, நிடுநிலைப் பள்ளிகளில் 'தலைமைஆசிரியர்' பெயரில் சேமிப்பு கணக்கு இல்லை. இதனால் கோடிடப்பட்ட காசோலைகளை சேமிப்பு கணக்கில் செலுத்தி மாற்றுவதில் சிக்கல் உள்ளது. அவற்றை திரும்ப பெற்று, பழைய முறைப்படி கோடிடப்படாமல் வழங்க வேண்டும், என்றார்.

தமிழகத்தில் ஜனவரி 20 க்கு மேல் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


ஜனவரி 20 க்கு மேல் தமிழகத்தில் 100 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘தமிழக விவசாயிகளின் வேதனை கலந்த மழை இரைஞ்சுதல் கடவுளின் காதுகளில் விழுந்திருக்கலாம்.
ஏனெனில் ஜனவரி மாதத்தின் கடைசி 10 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு உண்டு. தமிழக விவசாயிகளுக்கு விரும்பத் தகுந்த மழைப்பொழிவைத் தரும் ஆற்றல் மிக்க வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வானிலை நிலைய அறிவிப்புகளின் படி பொய்த்துப் போன பின்னும். சைபீரியன் ஹை இப்போதும் வலிமையுடன் இருப்பதால் மேற்கு பசிபிக் பருவக் காற்று தற்போது மேலும் வலுப்பெற்று வங்கக் கடலில் ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஜனவரி 20 க்கு மேல் முந்தைய மழை வறட்சி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 100 மிமீ அளவில் நீடித்த மழை நிச்சயம்’ என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன். தமிழக மழைப் பதிவு வரலாற்றில் இதற்கு முந்தைய வறட்சி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிக மழைப்பொழிவு என்பது தமிழ்நாடு வெதர்மேனின் கணிப்பு.
இவரது கணிப்பின்படி தமிழகத்தில் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் அளவுக்காவது குறைந்த பட்ச மழைப் பொழிவு இருந்து, தமிழ்நாட்டிற்கு வரவிருக்கும் குடிநீர் பஞ்சம் நீங்கினால் சரி!

ATM-ல் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ10 ஆயிரமாக உயர்வு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.  இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
இனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10 ஆயிரம்  வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  அதே போல் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றிருந்த உச்ச வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சேமிப்பு வங்கி கணக்குள்ளோர் ஏ.டி.எம் ல் வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. 

2012ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பணியாற்றிவரும்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

2012ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பணியாற்றிவரும் பகுதிநேரபயிற்றுநர்களுக்கு பொங்கல் போனஸ், 51 கோடி ‘மே’ மாத நிலுவை தொகை, ஆண்டு ஊதியஉயர்வை, தமிழக அரசு வழங்க வேண்டி - பகுதிநேர பயிற்றுநர்கள் கோரிக்கை.

சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு,ஆதரவு குரல் கொடுத்து, அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்குரிய சலுகைகளை பெற்றுத்தரநீதிமன்றங்கள், பத்திரிகைகள், அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் - ஆசிரியர்சங்கங்கள், உதவிட அனைவரும் வேண்டுகிறோம்.
கோரிக்கைகள் சுருக்கம்:-
1. பொங்கல் போனஸ் ( 5 வருட பண்டிகை போனஸ் ).
2. ஐந்து வருட ’ மே ’ மாத நிலுவைத்தொகை – 51 கோடி.
3. ஆண்டு வாரியான ஊதிய உயர்வு (2011-12, 2012-13, 2013-14, 2014-15,2015-16 & 2016-17).
4. பணி நிரந்தரம் செய்ய துறை ரீதியான பரிந்துரை.
5. பணியின்போது இறந்தவர்கள், 58 வயதை பூர்த்தி அடைந்து ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன்கள்.
பணி நியமன விபரம்
தமிழக அரசின் அரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை (சி2)நாள் 11.11.2011ன்படி16549 பகுதிநேரப் பயிற்றுநர்கள் ரூ.5000 தொகுப்பூதியத்தில் 2012ம் ஆண்டுமார்ச் மாதம் பணி நியமனம் செய்யப்பட்டனர். வாரம் 3 அரைநாள் பணி என மாதத்திற்கு12 அரைநாட்கள் பணிபுரிய உத்தரவிடப்பட்டது. ஆறு  முதல் எட்டு வகுப்புவரை 100மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஓவியக்கல்விக்கு 5253பயிற்றுநர்களும், உடல்நலம் மற்றும் உடற்கல்விக்கு 5392 பயிற்றுநர்களும், 5904தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளான கணினி, தையல், இசை, தோட்டக்கலை, வாழ்வியல்திறன், கட்டிடம் கட்டும் கல்விக்கு 5904 பயிற்றுநர்களும் தேர்வுசெய்யப்பட்டனர்.அரசாணை 186 பள்ளிக்கல்வித்துறை(அகஇ) நாள் 18.11.2014ன்படி ஏப்ரல் 2014முதல்ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ.7000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.கோரிக்கைகளின் விரிவாக்கம்:-1. 2012ம் ஆண்டில் பணிநியமனம் செய்யப்பட்டதில் இருந்து தொடர்பணி செய்துவரும்பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு 2011-12, 2012-13, 2013-14, 2014-15, 2015-16& 2016-17 கல்வி ஆண்டுகளுக்கு இதுவரை ஒருமுறைகூட பண்டிக போனஸ்வழங்கப்படாமல் மறுக்கப்பட்டுவருகிறது. துறை ரீதியாக பரிந்துரை ஏதும்செய்யப்படவும் இல்லை. அரசும் சிறப்பு மிகை ஊதியம்கூட வழங்காமல் வருகிறது.
1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  110 விதி எண் 110-ன் கீழ் 14வதுசட்டசபையில் முதல் கூட்டத்தொடரில் மறைந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்விஜெ.ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் கீழ்கண்டவாறு உள்ளது.“உண்மையான சீரான கல்வி என்பது பாடப் புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்அளிக்காமல் கல்வி இணைச்செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இதன் அடிப்படையில், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றிற்காகஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள்மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16549 பகுதிநேர ஆசிரியர் பணியிடம்ஏற்படுத்தப்படும். இதனால் இப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில்பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 99கோடியே 29 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.”எனவே, 16549 X 5000 X 12  = 99,29,40,000 என்பது   16549 பகுதிநேரப்பயிற்றுநர்களுக்கு ஒரு ஆண்டிற்கு 12 மாதங்களுக்கான ஊதியத்தைக் கணக்கிட்டுஅறிவித்ததை நடைமுறைப்படுத்தி, கடந்த ஐந்து வருடமாக நிலுவையில் உள்ள மேமாதங்களின் தொகுப்பூதியத் தொகையான(ரூ.513019000) 51 கோடியே 30 லட்சத்து 19ஆயிரம் நிலுவைத்தொகையை பகுதிநேர பயிற்றுநர்களின் வங்கிக் கணக்கில் செலுத்ததுறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்தால் ஏப்ரல் 2014ல் நடந்த 210வது PABகூட்ட முடிவின்படி (Government of India Ministry of Human ResourceDevelopment Department of School Education and Literacy *** Minutes of the210th PAB meeting held on 03rd April, 2014 for approval of the Annual WorkPlan & Budget of Sarva Shiksha Abhiyan (SSA))அனைவருக்கும் கல்வி இயக்கத்தில்உள்ள அனைத்து தொகுப்பூதிய பணிகளுக்கும் 15%  ஊதிய உயர்வும் ,மேலும் அதன்பராமரிப்பு பணிகளுக்கு திட்ட மதிப்பீடு உயர்வும் வழங்கப்பட்டது. அதன்படிஅனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரிந்துவரும் Programmer, CivilEngineer, Accounts and Audit Manager, Data Entry Operators,Office Assistant,Consultants (State level) (officer cadre),Consultant(Clerical cadre), Sweepers, Driver,  MIS Co-Ordinator, BlockAccountant/VEC Accountant என அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் உள்ள அனைத்துவகையான பணிகளுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டபோது முதல் முறையாக பகுதிநேரபயிற்றுநர்களுக்கும் ஏப்ரல் 2014 முதல் ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ7000/-வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வுவழங்கப்பட்டது.- உதாரணத்திற்கு ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் கணினிஇயக்குபவர்களுக்கு ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டுவருகிறது.         (RURAL DEVELOPEMENT AND PANCHAYAT RAJ (CGS.1)DEPARTMENT G.O.(Ms).No.71 Dated:20.06.2014 )- அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்களுக்கு ஆண்டுவாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.எனவே, 2011-12, 2012-13, 2013-14, 2014-15, 2015-16& 2016-17 ஆண்டு வாரியாகRURAL DEVELOPEMENT AND PANCHAYAT RAJ (CGS.1) DEPARTMENT G.O.(Ms).No.71Dated:20.06.2014ன்படி வழங்கப்பட்டுள்ளதை பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கும்கணக்கிட்டு வழங்கி, நிலுவைத்தொகையின் அவரவர் வங்கிக் கணக்கில் வழங்க அரசுஅறிவிப்பை வெளியிட வேண்டும்.
3. கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஒப்பந்தமுறையில் பணியமர்த்தப்பட்ட கணினி பயிற்றுநர்கள் அனைவரும் பணி நிரந்தரம்செய்யப்பட்டுள்ளனர். மறைந்த முதல்வர் அவர்களால் காவல்துறையில்தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட காவல் நண்பர்கள் அனைவரும் அரசால்பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது ஊரகவளர்ச்சித் துறைவட்டார வளர்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரகவேலை உறுதித் திட்டகணினி இயக்குபவர்களுக்கு அரசு TNPSC மூலம் சிறப்பு தேர்வு வைத்து பணிநிரந்தரம்செய்யத் திட்டமிட்டுள்ளது. அதைப்போலவே ஒவ்வொரு துறையிலும் தினக்கூலி பணி,ஒப்பந்த பணி,  தொகுப்பூதிய பணி, மதிப்பூதிய பணி, பகுதிநேரப் பணிபுரிபவர்களைஅவ்வப்போது துறை ரீதியாக பரிந்துரை செய்து சிறப்பு காலமுறை ஊதியம்,பணிவரன்முறை, பணிநிரந்தரம் என அடுத்த முன்னேற்றமான நிலையை பெற்று வருகின்றனர்.எனவே, பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையிலோ அல்லதுஅனைவருக்கும் கல்வி இயக்கத்திலோ நிரந்தரப்பணி வழங்க வேண்டும்.
4. ஆயிரம் கனவுகளோடு அரசுப் பணி ஆசையில் 2012-ம் ஆண்டு முதல் பகுதிநேரப்பயிற்றுநராக பணிபுரிந்து எதிர்பாரா விபத்து, உடல்நல குறைவால் பணியின்போதுஇறந்தவர்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே பணியில்சேர்ந்து 58 வயது பூர்த்தி அடைந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்மறுக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின்குடும்பங்களுக்கும், பணி ஓய்வில் சென்றவர்களுக்கும் உரிய பணப்பலன்களை வழங்கவேண்டும்.
தீர்வு காண வேண்டிய பிற வேண்டுகோள்கள்
1. மகளிர் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு விடுமுறையுடன் கூடிய மகப்பேறு காலவிடுப்பு அனுமதிக்கப்படவில்லை.
1. பணி நியமனத்தின் போதும், பணி நிரவலின் போதும் தொலைதூரப் பள்ளிகளுக்குபணி ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்களுக்கு இதுவரை அருகில் பணிபுரிய வாய்ப்புகள்வழங்கப்படவில்லை.
2. G.O.177ன்படி அதிகபட்சமாக ஒருவர் நான்கு பள்ளிகளில் பணிபுரிந்துஅதற்குரிய ஊதியத்தினை பெறலாம் என்றுள்ளதை இதுவரை அமுல்படுத்தவில்லை.
3. G.O.186ன்படி அதிகபட்சமாக ஒருவர் இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்துஅதற்குரிய ஊதியத்தினை பெறலாம் என்றுள்ளதை இதுவரை அமுல்படுத்தவில்லை.
4. G.O.186ன்படி 1380 பகுதிநேரப் பயிற்றுநர்கள் பணியிடம் காலிப் பணியிடமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. 1380 காலிப் பணியிடங்களை தற்போது பணிபுரிந்துவருபவர்களுக்கு கூடுதலாக வழங்க வேண்டும்.
5. பாடப்புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. தேர்வுகளும் நடத்தப்படுவதும்இல்லை.
6. அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, யூனியன் பிரதேசமான  ஹரியானவில் பகுதிநேரப்பயிற்றுநர்களுக்கு ரூபாய் 10000 மாதத்தொகுப்பூதியமும், மேலும் கோவா யூனியன்பிரதேசத்தில் ரூபாய் 15000 மாதத்தொகுப்பூதியமும் வழங்குவதை, தமிழத்தில்இன்றுவரை அமுல்படுத்தப்படவில்லை.
7. 14வது சட்டசபையின் கடைசி கூட்டத்தொடருக்கு முன்பு ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் வழங்கக் கோரி வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டகல்லூரி விரிவுரையாளர்களுக்கு ரூ.5000 ஊதிய உயர்வும்,  செவிலியர்களுக்குபடிப்படியாக பணி நிரந்தரம் செய்ய அரசு ஒப்புக்கொண்டது.அதைப்போலவே பள்ளிகளை இழுத்து மூடி பூட்டு போடும் ஆசிரியர்கள் சங்க ஜாக்டோஅமைப்பின் 08.10.2015 மற்றும் 01.02.2016 போராட்டங்களுக்கும் எழுத்துப்பூர்வஉறுதி அளிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகளை இழுத்து மூடி பூட்டு போடும் ஜாக்டோஅமைப்பின் போராட்டத்தின்போது பள்ளிகளை இயக்க தமிழக அரசின் உத்தரவின்படிமுழுமையாக பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேலான பகுதிநேர பயிற்றுநர்களுக்குஊதிய உயர்வோ அல்லது பணி முன்னேற்றம் சார்ந்த எந்தவொரு உறுதிமொழியோ இதுவரைஇல்லாத நிலையால் ஏமாற்றத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். பகுதிநேரப்பணியைமாற்றி முழு நேரப்பணி கேட்டபோது  G.O.177-ப்படி பகுதிநேரப் பணியானதுதற்காலிகப் பணி என்பதால் முழுநேரப்பணி வழங்க முடியாது என கோரிக்கையை ஒருபக்கம்நிராகரித்த அரசு, மறுபக்கம் ஜாக்டோவின் பள்ளிகளை இழுத்து மூடும்போராட்டங்களின்போது மட்டும் பள்ளிகளை இயக்க பகுதிநேரப்பயிற்றுநர்களைமுழுநேரமாக பணியாற்ற உத்தரவிட்டு பயன்படுத்துகிறது. அரசின் இரட்டைநிலைமுரண்பாடு 5 ஆண்டுகளாகியும் களையப்படவில்லை.
8. தமிழக அரசின் மொத்த கடனில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ரூபாய்46000 கடனாக அரசால்  சுமத்தப்படுகிறது. பகுதிநேர பயிற்றுநர்களின் ஒருகுடும்பத்திற்கு  தாய்-தந்தை, கணவன்-மனைவி, குடும்பத்திற்கு ஒரே ஒரு குழந்தைஎன்ற கணக்கில் மதிப்பிட்டால், ஒட்டுமொத்தமாக இந்த 15169 பயிற்றுநர்களின்குடும்பங்களின் கடனான சுமாராக நானூறு கோடி ரூபாய் வருகிறது. எதிர்பாராமல்வரும் அரசின் கடனை சுமக்கும் வேளையில் தனி ஒருவனின் அரசு வேலையைநிரந்தரப்படுத்த வேண்டி எதிர்பார்ப்போடு கூடுதல் கடனை ஏற்க தயராகஇருக்கின்றனர்.  எனவே மத்திய அரசின் திட்ட வேலையாக இருந்தாலும், மாநில அரசேபணிநியமனம் செய்திருக்கிறது. ஆகவே மாநில அரசே 5 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும்பகுதிநேர பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த  ஆண்டுக்கு 400 கோடிகூடுதலாக நிதி ஒதுக்கி அனைவரையும் பணி நிரந்தரம் செய்துதர வேண்டும்.பணிநிரந்தரத்திற்கு இதுவரை அரசு கவனம் செலுத்தவில்லை.
9. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விரைவில் ஏழாவது ஊதியக் கமிஷன்அமுல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு அகவிலைப் படியை உயர்த்தும்போது, மாநிலஅரசும் அவ்வப்போது உயர்த்தி வழங்கி வருகிறது. எனவே ஆண்டு ஊதிய உயர்வை வழங்கவேண்டும்.
உச்ச நீதிமன்றம் கூறியபடி மொத்தவிலைக் குறியீட்டு எண், அகவிலைப் படிஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு  தொகுப்பூதிய பணி செய்பவர்களுக்கு குறைந்தபட்சஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும்.  ஒப்பந்த பணியாளர்களுக்கு, நிரந்தரப்பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சம வேலை, சம ஊதியம் என்றதத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள்ஜே.எஸ்.கெஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்குஆதரவாக வழங்கிய தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். குறைந்த பட்சம் சிறப்பு காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.
நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் அரசுப் பணியை தற்காலிகமாக, ஒப்பந்தமுறையில், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிபவர்களின் தற்போதையநிலைகள், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தானாக முன்வந்துகண்காணித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். தற்காலிக, ஒப்பந்த, தொகுப்பூதிய,தினக்கூலிப் பணி செய்து வருபவர்களை துறை ரீதியாக கணக்கெடுத்து அரசு வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும். 18 வயது முடித்த அனைவருக்கும் கல்வித் தகுதிக்கேற்பவேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதை முதன்மைப் பணியாக செய்ய வேண்டும்.
அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படவேண்டும். காலிப்பணியிடங்களில் தற்போது பணி புரிந்து வருபவர்களையே நிரந்தரம் செய்திட நடைபெறஇருக்கிற சட்டசபை கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து உதவிடவேண்டும். சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் பகுதிநேரப்பயிற்றுநர்களுக்கு, அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்குரிய சலுகைகளை பெற்றுத்தரஅனைவரும் வேண்டுகிறோம்.அனைவருக்காகவும்,
கடலூர் செந்தில்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
CELL No.: 9487257203.

3 rd Incentive

Sunday, 15 January 2017

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன முக்கிய பிரிவுகள் உள்ளன?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

 (1)- உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நகல் பெறலாம் (பிரிவு - 2J(ii)                                    (2)- பிரிவு 4(1) D, ன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்க வேண்டும்.                                      (3)- பிரிவு 6(2)ன்படி தகவல் கேட்கும் விண்ணப்பதாரரிடம் மனு எதற்கு? என்கிற காரணங்கள் கேட்க கூடாது.  
                     (4)- பிரிவு 6(3)ன்படி கேட்கப்பட்ட தகவல் வேறு அலுவலகத்தில் இருக்கின்ற போது உரிய அலுவலகத்துக்கு அனுப்பி 5 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு உரிய விபரத்தை தெரிவிக்க வேண்டும்.                                      (5)- பிரிவு 7(1)ன்படி 30 நாட்களுக்குள் தகவலை அளித்தல் வேண்டும்.                      (6)- பிரிவு 7(1)ன்படி உயிர் சம்மந்தப்பட்ட தகவல்கள் ஆனால் 48 மணிநேரத்திற்குள் அளித்தல் வேண்டும்.                                        (7)- கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள் வந்து சேரவில்லை என்றால், உங்கள் தகவல் மறுக்கப்படுவதாக அர்த்தம். பிரிவு 7(8)ன்படி மறுப்பதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.                                                            (8)- பிரிவு 7(6)ன்படி 30 நாட்களுக்குள் தகவல் தரவில்லை என்றால் கட்டணமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.                                      (9)- பிரிவு 7(9)ன்படி நீங்கள் கேட்டுள்ளபடி தகவலும் அதுபோல அளிக்கப்பட வேண்டும். உதாரணமாக சிடியில் அல்லது நகல் என எப்படி கேட்டாலும் தகவல் அளிக்கப்பட வேண்டும். (ரெக்கார்டுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என பொது தகவல் அலுவலர் கருதினால் உரிய காரணத்தை சொல்லி தர "இவ்வாறு இயலாது.... இவ்வாறு தரலாம்" என கூற வேண்டும்.                                        (10)- பிரிவு 8(1)ன்படி நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் மறுக்க முடியாத தகவல்களை அளிக்க வேண்டும்.                (11)- பிரிவு 19(8) B ன்படி தகவல் முழுமையாக வழங்கப்படாததால் இழப்பீட்டை கோரலாம். இந்த இழப்பீடு கொடுக்க தகவல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது.            (12)- பிரிவு 20(2)ன்படி பொது தகவல் அதிகாரி விண்ணப்பங்கள் பெற மறுத்தாலோ அல்லது தகவல் அளிக்க மறுத்தாலோ தகவல் ஆணையம் பொது தகவல் அதிகாரிகள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய முடியும்.                                                               (13)- பிரிவு 20(1)ன்படி தகவல் வழங்காத ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 250 முதல் ரூபாய் 25000 வரை தகவல் ஆணையம் பொது தகவல் அலுவலருக்கு அபராதம் விதிக்க முடியும்.                                                 (14)- பிரிவு 3 ன்படி அனைத்து குடிமக்களும் தகவல்களை கேட்கலாம்  அமைப்புகளின் சார்பிலும் கேட்க முடியும்.                                (15)- பிரிவு 19(1)ன்படி பொது தகவல் அலுவலருக்கு அனுப்பிய மனுவுக்கு 30 நாட்களுக்குள் பதில் வராமல் இருந்தாலோ அல்லது 30 நாட்களுக்குள் பதில் வந்தும் மேல்முறையீடு செய்ய உரிய காரணத்திற்காக நிறுத்தி வைத்திருந்தாலோ பிரிவு 19(5)ன்படி மேல்முறையீடு காலதாமதமாக செய்தாலும் ஏற்க வேண்டும்.(16)- பிரிவு 19(3)ன்படி மேல்முறையீடு அதிகாரியிடமிருந்து திருப்தியற்ற பதில் வந்தாலோ அல்லது பதில் வராமல் போனாலோ 90 நாட்களுக்குள் தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு செய்ய வேண்டும்.              (17)- பிரிவு 5 ன்படி பொது தகவல் அலுவலரின் பதவி பெயரை கேட்கலாம்.    (18)- பிரிவு 27 ன்படி விதிகளை இயற்றிட உரிய அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது. (19)- பிரிவு 21 ன்படி நல்ல எண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு அளிக்கிறது.                                                      (20)- பிரிவு 13 ன்படி பதவி, பணிக்காலம் மற்றும் பணியின் வரையறைகளை குறிக்கிறது.

கோடைக்கு முன் தேர்வு: நடுநிலை பள்ளிகள் கோரிக்கை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கோடை வெயிலில் இருந்து காக்க, முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டு வரையிலான, நடுநிலை பள்ளிகளில், 220 நாட்கள்; 10 முதல் பிளஸ் 2 வரையிலான, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 210 நாட்கள், வகுப்புகள் நடைபெறும். அதாவது, நடுநிலை பள்ளிகளுக்கு, ஏப்., 30 வரை; மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 15 வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில், நடுநிலை பள்ளிகள், அதிக நாட்கள் இயங்குவதால், கோடை வெயில் பாதிப்பில், சின்னஞ்சிறு மாணவர்கள் சிக்கி கொள்கின்றனர். இதை தவிர்க்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை, பரங்கிமலை, ஏ.பி.டி.எம்., நடுநிலை பள்ளி தாளாளர், விக்டர் கிருபாதனம் வெளியிட்ட அறிக்கை:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 31க்குள் தேர்வுகள் முடிகின்றன. ஆனால், ஆறு முதல், 14 வயது வரையிலான, சிறு வயது மாணவர்களுக்கு, ஏப்., 30 வரை பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அதனால், அவர்கள் தான் வெயிலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஏப்., 15க்குள் தேர்வுகளை முடித்து, விடுமுறை அளிக்க வேண்டும். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், இதே முறை கடைபிடிக்கப்படுகிறது. வேலை நாட்களை சரிசெய்ய, காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களை குறைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

சைகையுடன் கூடிய ஒலிப்பு முறை முன்னோட்டம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா, உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91. 
கடந்த 1925ம் வருடம் அக்டோபர் 21ல் பஞ்சாப் மாநிலம் அடேலியில் பிறந்த இவர் லக்னோவில் சட்டம் பயின்றார். சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். 29 செப்டம்பர் 1985 முதல் 11 ஜூன் 1987 வரை பஞ்சாப் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 1990 முதல் 91 வரையிலும், 2004 முதல் 2011 வரை தமிழக கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். 2000 நவம்பர் 9 முதல் 2003 ஜனவரி 7 வரை உத்தர்காண்ட் மாநில முதல் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். 1998 ம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில், ரசாயனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பர்னாலா, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்... அதிருப்தி!:மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


புதுடில்லி:'அனைவருக்கும், எட்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது; இந்த திட்டத்தால் உண்மையான நோக்கம் நிறைவேற வில்லை; இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.
நாட்டில், 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக, இலவச கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது. 'அனைத்து பள்ளி குழந்தைகளையும், 8ம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும்; தனி யார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்; அதற்கான கட்டணத்தை, அரசு செலுத்த வேண்டும்' என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். 
இந்த சட்டம் அமலுக்கு வந்து, ஏழு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திட்ட கமிஷனுக்கு
மாற்றாக, நீண்ட கால திட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும், 'நிடி ஆயோக்' அமைப்பு ஆய்வு செய்துள்ளது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இதுபற்றி நிடி ஆயோக் வட்டாரங்கள் கூறியதாவது:

கல்வி உரிமைச்சட்டம் குறித்து ஆய்வு செய்த, ஆண்டு கல்வி நிலை அறிக்கை, அதன் அவல நிலையை வெளியிட்டுள்ளது. 8ம் வகுப்பு பயிலும் குழந்தைகளில் பலருக்கு, தாய் மொழி எழுத்துகள் கூட தெரிய வில்லை; பெருமளவு நிதி முறைகேடு நடைபெறுகிறது. பல மாநிலங்களில், பெயரளவுக்கு தான் திட்டம் செயல்படுகிறது. மாணவர்கள் கல்வி பயிலுவதாக கணக்கு மட்டுமே காட்டப்படுகிறது. 
ஆனால், அவர்களது கல்வி நிலைமையை சோதித் தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. எனவே, இந்த திட்டத்தால் ஏற்பட்டுள்ள பயன் குறித்து முழுமை யாக மறு ஆய்வு செய்ய வேண்டும். தேவையான மாற்றங்கள் செய்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பயனளிக்கும் திட்டமாக இது இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
மோசடி அம்பலம்

கல்வி உரிமைச்சட்டத்தின் படி, பல்வேறு மாநிலங் களில், 8ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உணவு, பாடப் புத்தகங்கள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படுகின்றன; இதில் பெரும் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, நிடி ஆயோக் வட்டாரங்கள் கூறியதாவது:
போலி ரேஷன் கார்டுகள் மூலம் பொய்யான
பெயரில் குழந்தைகளின் பெயர்கள் பட்டியலில்சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. இதைத் தடுக்க, கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் பயன் பெறும் பயனாளி களை, ஆதார் எண் மூலம் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறிஉள்ளன. 
அதிர வைக்கும் அதிர்ச்சி தகவல்

ஆண்டு கல்வி நிலை அறிக்கையில் வெளி யாகியுள்ள பகீர் தகவல்கள்:
* எட்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, தாய் மொழி எழுத்துகள் முழுமையாக தெரியவில்லை
* தங்கள் பெயரைக் கூட எழுத தெரியவில்லை
*ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில், 50 சதவீதம் பேருக்கு, தங்கள், 2ம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்கக் கூட முடியவில்லை
* மாணவ, மாணவியருக்கு பெயரளவுக்கு மட்டுமே கல்வி வழங்கப்படுகிறது.

பள்ளி மேலாண்மை குழுவிற்கு ரூ.3.60 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


ராமநாதபுரம்,பள்ளி மேலாண்மை குழுவிற்கு பயிற்சி அளிப்பதற்காக 3 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தலைமை ஆசிரியர் உள்பட 30 பெற்றோரை உறுப்பினராக கொண்ட பள்ளி மேலாண்மை குழுக்கள் ஒவ்வொரு பள்ளியிலும் செயல்படுகின்றன. பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக பெற்றோரில் ஒருவரே இருக்கிறார்.
தமிழகத்தில் பள்ளி மேலாண்மை குழு செயல்படும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், தலா ஒரு தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவரின் பெற்றோர், என ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 3 பேர் வீதம் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு 4,088 இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக 3.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகள், பாலின பாகுபாடு களைதல், பேரிடர் மேலாண்மை, தரமான கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சமூக தணிக்கை, சுகாதாரம் பேணுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பொங்கல் விடுமுறைக்கு பின் பயிற்சி துவங்கும்,என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருது பெறுவோர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த, தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு விருது பெறுவோர் பெயரை, முதல்வர்பன்னீர்செல்வம், நேற்று வெளியிட்டார். புலவர் வீரமணி - திருவள்ளுவர்; பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு - பெரியார்; மருத்துவர் துரைசாமி - அம்பேத்கர்; கவிஞர் கூரம் துரை - அண்ணா; நீலகண்டன் - காமராஜர்; பேராசிரியர் கணபதிராமன் - பாரதியார்; கவிஞர் பாரதி - பாரதிதாசன்; பேராசிரியர் மறைமலை இலக்குவனார் - திரு.வி.க.; மீனாட்சி முருகரத்தினம் - கி.ஆ.பெ.விசுவநாதம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கலைவாணர் அரங்கில், நாளை காலை, 10:30 மணிக்கு நடைபெறும், திருவள்ளுவர் திருநாள் விழாவில், முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்குவார். விருது பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதி சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மேலும், வயது முதிர்ந்த, 50 தமிழறிஞர்களுக்கு, நிதியுதவி வழங்கும் அரசாணைகள் அளிக்கப்படும்.

புதிய பாடத்திட்டத்துக்கு வழி பிறக்குமா?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது போல, தை மாதம் பிறந்துள்ள நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் கொண்டு வர வழி பிறக்குமா என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாடு முழுவதும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, உயர் கல்விக்காக பல நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் புதிய தொழில் நுட்பம், கண்டுபிடிப்புகள், பாடத்திட்டங்கள் மாற்றம் அடிப்படையில், நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. இதன் அடிப்படையில், வினாத்தாள்கள் தயாரிக்கப்
படுவதால், நுழைவுத் தேர்வுகளில், ஆந்திரா மற்றும் வட மாநில மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறுகின்றனர்.ஆனால், தமிழகத்தில், 2006 முதல் பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. இன்னும் பழமையான பாடத்திட்டமே பின்பற்றப்படுவதால், நுழைவுத் தேர்வுகளில்,
தமிழக மாணவர்கள் பின் தங்கி உள்ளனர். புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாக, தமிழக அரசின் அனுமதி கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில், பன்னீர்செல்வம் புதிய முதல்வராக, அரசு பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, பாடத்திட்ட மாற்றத்திற்கான கோப்பை துாசிதட்டி, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, அவர் அனுமதி அளிப்பார் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஜனவரி 17 பொது விடுமுறை அறிவிப்பு வெளியீடு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்த நாளுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்ள்ளது. எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி செவ்வாய்கிழமை பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விடுமுறையை அடுத்து ஜனவரி 17-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற நிறுவனங்களும் விடுமுறை அளிக்க தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 17-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை ஆகும்.
பதக்கங்கள் அறிவிப்பு
பொங்கலை முன்னிட்டு 1685 காவலர்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதக்கம் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர், மற்றும் தலைமை காவலர் நிலைகளில் 1500 பேருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் 119 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறையில் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை வார்டனுக்கு 60 பேருக்கும் பதக்கம் வழங்கப்பட உள்ளது. பதக்கம் பெறுவோருக்கு ரூ.200 மாதாந்திர பதக்கப்படியாக வழங்கப்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
ஆதார் இணைப்பு
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை சார்பில்தன்னார்வ அமைப்புகளின் நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
நாட்டில் 50 லட்சம் முதல் 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களில் 88 சதவீதம் பேரின் ஓய்வூதிய கணக்குகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
பணிக்கொடை 2 மடங்கு உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல், பணிக்கொடை 2 மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம்வரை இருந்த பணிக்கொடை, ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம்வரை உயர்ந்துள்ளது.மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனுபவம்
ஓய்வூதியதாரர்களின் அனுபவத்தில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். அவர்களின் சக்தியை ஆக்கப்பூர்வ முறையில் உபயோகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில், மத்திய அரசு உயர் அதிகாரிகளும், ஓய்வூதியதாரர்கள் சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிக்க 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை பயிற்றுவிக்க, 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒழுக்க பண்புகளை கற்றுக் கொடுக்காததால், அவர்களின் செயல்பாடுகளில், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. 
பல மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்பதில்லை.ஊர் சுற்றுவது, மாணவியரை கிண்டல் செய்வது, சக மாணவர்களிடம் பிரச்னை செய்வது, ஆசிரியர்களை எதிர்த்து பேசுவது, வகுப்புகளுக்கு வராமல், பள்ளி வளாகத்தில் கூடி விளையாடுவது என, தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையை மாற்ற, மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வியை கற்றுக் கொடுக்கும் வகையில், பாட நேரங்களிலேயே, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக பள்ளி கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. முதல் பிரிவுக்கான பயிற்சி, பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில், சென்னையில் நேற்று துவங்கியது. தமிழகம் முழுவதும், 6,700 பள்ளிகளில் படிக்கும், 20 லட்சம் மாணவர்களுக்கு, நல்லொழுக்க கல்வி கற்றுத் தரப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

NHIS-2016 card Download...

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

NHIS -2016 card for the period 01.07.2016 to 30.06.2020 can be downloaded online in the above link by entering your NHIS - 2012 card No. & password. Password is date of birth in (DD/MM/YYYY)format.

மார்ச் முதல் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : 'ஆதார்' விபரம் தந்தவர்களுக்கு கிடைக்கும்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழகத்தில், மார்ச், 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. கடந்த, 2005ல் வழங்கிய, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்தது. இதற்கான, ஒருங்கிணைப்பு பணிகள், 2015ல் துவங்கின. 
மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரங்களை வாங்கி, அவற்றின் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் வாங்கும் பணி, 2016ல் துவங்கியது. அதே ஆண்டு, அக்டோபர் முதல், ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், பலர் ஆதார் விபரம் தராததால், கார்டு வழங்கப்படவில்லை. இந்நிலையில், மார்ச், 1ல் இருந்து, ஸ்மார்ட் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தமுள்ள, 2.03 கோடி ரேஷன் கார்டுகளில், 1.91 கோடி கார்டுகள், ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு ரேஷன் கார்டில், எத்தனை உறுப்பினர் பெயர் உள்ளதோ, அத்தனை பேரின் ஆதார் எண்களை, ரேஷன் கடையில் பதிவு செய்ய வேண்டும். அப்படி முழுமையாக பதிவு செய்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 93 லட்சம். குடும்ப தலைவரின் ஆதார் எண் மட்டும், பதிவு செய்த கார்டுகளின் எண்ணிக்கை, 87 லட்சம். 
ஆதார் விபரம் தர, ரேஷன் கடை தவிர்த்து, 'மொபைல் ஆப்' வசதியும் ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், பலர் பதிவு செய்யவில்லை. சட்டசபையில், வரும், 23ல் கவர்னர் உரையாற்ற உள்ளார். அதில், ஸ்மார்ட் கார்டு அறிவிப்பு வெளியாகும். ஆதார் பதியாதவர்களுக்கு, பிப்., வரை அவகாசம் தரப்படும். அதற்குள், எத்தனை பேர் முழு ஆதார் விபரத்தை தருகிறார்களோ, அவர்களுக்கு, மார்ச் முதல், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஆதார் தராத கார்டுகள் ரத்து செய்யப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
தீவிர சோதனை! : ஸ்மார்ட் கார்டுக்காக, ஆதார் விபரம் தராத வீடுகளில், ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஸ்மார்ட் கார்டு வினியோகம் துவங்கிய பின், அவசரமாக ஆதார் பதிவு செய்வோர் ஆவணங்களை, தீவிர சோதனை செய்ய, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆவணங்களில் எழுத்து பிழை, முகவரி குழப்பம் உள்ளிட்டவை இருந்தால், ஸ்மார்ட் கார்டு பெறுவது கடினம். எனவே, அனைவரும் ஆதார் பதிவு செய்வது நல்லது.

பருவத்தேர்வு விடுமுறைகளை ஈட்டிய விடுப்பின் முன் இணைப்பாக துய்க்கமுடியும்-தொடக்கக்கல்வி அலுவலரின் ஆணை நகல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

CRC Date changed‬: Upper primary- 21.01.17. Primary - 28.01.17 - SPD Proceeding!!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டுதல் சார்ந்து விவரம் கோருதல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


பதினேழு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட, பதவி உயர்வு விதிகளை மாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வி அமைச்சரிடம், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடக்க பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான விதிகளில், குளறுபடி நீடிக்கிறது.
அதாவது, 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தவர்கள், தொடக்க பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும், பின், பட்டதாரி ஆசிரியராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். தொடர்ந்து, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக, பணிமூப்புஅடிப்படையில், பதவி உயர்வு பெறுகின்றனர்.
ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்த பதவி உயர்வு எதுவும் கிடைக்கவில்லை. 1999ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, பட்டம் பெறாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கே, பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, இந்த குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
 சங்க பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: பட்டதாரிஆசிரியர்கள் இல்லாததால், 1999ல், இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், பதவி உயர்வு விதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதே நேரம், 14 ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், பழைய விதிகளை மாற்றாமல், பதவி உயர்வு வழங்கப்படுவதால், நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்காமல், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கல்வி - இடைநிலை / சிறப்பாசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


வருகின்ற 12.01.2017 வியாழக்கிழமை அன்று தற்போது காலியாக உள்ள 58 பட்டதாரியாசிரியர் (தமிழ்) காலிப்பணியிடங்களுக்கு 01.01.2016 நிலவரப்படி இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர் பணி நிலையில் இருந்து
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வுக்குத் தகுதி வாய்ந்தோர் பட்டியலில் இருந்து வரிசை எண் 302 ல் இருந்து 616 வரை உள்ள நபர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டு அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு...

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 உச்ச வரம்பில் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும்  குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு  ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதால் அரசுக்கு ரூ.325 கோடியே 20 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும் எனவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Income tax section 80CCD(1B) -ன் விளக்கம்:

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தற்போது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் CPS தொகையினை ரூ.50,000/- வரை கூடுதலாக கழித்துக் கொள்ளலாம். அதாவது, sec 80C- ல் ரூ.1, 50,000 மும் + sec 80 CCD(1B)-ல் ரூ.50, 000 மும் இரண்டையும் சேர்த்து ரூ.2,00,000 வரை கழிக்கலாம் என்ற செய்தி ஊடகங்களில் வலம்வருகிறது அல்லவா ?
அதற்கான விளக்கம்தான் இது.
நமது மாதச்சம்பளத்தில் CPSக்காக பிடித்தம் செய்யப்படும் 10% தொகையினை income tax section 80C யில் (LIC, Tuition fee, mutual fund, PLI, salary யில் பிடிக்கப்படும் CPS,...உள்ளிட்டவைகளை ) ரூ.1,50,000 வரை கழித்துக்கொள்ளலாம்.ஆனால் கூடுதலாக செலுத்தப்படும் ரூ.50,000/- த்தை உங்கள் கையிருப்பில் உள்ள தொகையினை புதிதாக NPS (National pension scheme or system தேசிய ஓய்வூதிய திட்டம்) திட்டத்தில் செலுத்தி income tax ல் வரிவிலக்கு பெறலாம்.
ஆக, section 80CCD(1B)ல் மாதச்சம்பளத்தில் பிடித்தம் செய்யும் CPS தொகையினை Income tax வரிவிலக்கில் கழிக்க முடியாது.

உங்கள் வீட்டில் மின்தடை எப்போது? : 10 நாட்களுக்கு முன் தெரியும் வசதி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


பராமரிப்பு பணி மின் தடை விபரத்தை, 10 நாட்களுக்கு முன்பே, தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கி உள்ளது. துணை மின் நிலையம், மின் வழித்தடங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, மின் வாரியம், குறிப்பிட்ட இடைவெளியில், அவற்றில் பராமரிப்பு பணி செய்கிறது.
பராமரிப்பு பணி :
இதற்காக, அந்த பணி நடக்கும் இடங்களில், காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும். அந்த விபரத்தை, மின் வாரியம், பத்திரிகைகள் மூலம், மக்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கிறது. தற்போது, தமிழகம் முழுவதும் பராமரிப்பு மின் தடை செய்யும் பகுதிகளை, 10 நாட்களுக்கு முன் தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கியது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், தினமும், பல இடங்களில் உள்ள மின் சாதனங்களில் பராமரிப்பு பணி நடக்கிறது. சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் வசிப்போருக்கு மட்டும், அந்த விபரம் தெரிகிறது; மற்ற நகரங்களில் வசிப்போருக்கு தெரிவதில்லை.
இணையதளம்: தற்போது, 10 நாட்களுக்கு முன், பராமரிப்பு நடக்கும் துணை மின் நிலையங்கள்; அவற்றில் மேற்கொள்ளப்படும் பணிகள் போன்ற விபரங்கள், மின் வாரிய இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளன. அனைவரும், அதை பார்த்து, அதற்கேற்ப தங்கள் பணிகளை திட்டமிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வுஅரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது.
அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது. ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப்பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.
அமைச்சர்களின் உறுதிமொழி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல்வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.
எப்படி வந்தது?
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவேதமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால்அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம்- 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்தியஅரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.
தமிழகத்தால் முடியும்
பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே.
இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்தஅரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.
விருப்பம் இல்லையா?
மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.
 இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம்என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.

மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்களுக்கான CRC அளவிலான பயிற்சி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக முதல்வர் அறிவிப்பு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.