தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்
26-07-2019
*இன்றைய திருக்குறள்*
*குறள்- 800*
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
*மு.வ உரை:*
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.
*கருணாநிதி உரை:*
மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்.
*சாலமன் பாப்பையா உரை*:
குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.
*பொன்மொழி*
தன்னலம் சிறிது இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
- சுவாமி விவேகானந்தர்
*பழமொழி*
Old is gold.
காலம் பொன் போன்றது.
*Important Used Words*
Mouse சுண்டெலி
Musk Deer கஸ்தூரி மான்
Mussel நத்தை, சிப்பி
Peacock மயில்
Pig பன்றி
*பொது அறிவு*
1.எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?
குலசேகர பாண்டியன்
2. மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடித்தவர் யார்?
பேட்ரிக் மேக்-மில்லன்
3.லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?
வேலூர் ஸ்ரீபுரம்
*Today's grammar*
*Common grammar mistakes*
Wrong :
I have visited Niagara Falls last weekend.
Right :
I visited Niagara Falls last weekend.
Wrong :
The woman which works here is from Japan.
Right :
The woman who works here is from Japan.
Wrong :
She’s married with a dentist.
Right :
She’s married to a dentist.
*அறிவோம் தமிழ்*
*யாப்பு*
யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும்.
*இன்றைய கதை*
*பழமொழி கதை*
*தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது*
மகாபாரதக் கதையில் வரும் அந்த பதினெட்டு நாள் போர் தான் மிக முக்கியமானது. அதிலும் கர்ண மோட்சம் என்பது மிக மிக முக்கியமானது. பாண்டவர்களுக்கு கர்ணனை வெல்வதுதான் பெரிய சவால். கர்ணன் கையில் நாகாஸ்திரம் இருக்கிறது. அதை சமாளிக்கும் திறமை உலகில் யாருக்கும் கிடையாது. அதனால் அதனை அர்ச்சுனன் மீது ஒரு தடவைக்கு மேல் அம்பு எய்தக் கூடாது என்று குந்தி கர்ணனிடம் வரம் வாங்கியிருந்தாள்.
ஆனால் கர்ணன் அதி தீவிரமாக போர் புரிந்தான். அவன் அர்ச்சுனனை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற வெறியில் போரிட்டான். அர்ச்சுனனை எப்படியாவது காப்பாற்றியேயாக வேண்டுமென்ற கவலை பாண்டவர்களுக்கு இருந்தது. இல்லை என்றால் குருஷேத்திரம் குறை ஷேத்திரமாகி விடும். ஆத்திரம் புத்திக்கு கேடு என்பது போல் அர்ச்சுனனை வீழ்ந்த வேண்டும் என்ற கோபம் வெறியாக மாறியது. ஆகவே அர்ச்சுனனுக்கு நாகாஸ்;திரத்தை விட்டான் கர்ணன்.
கர்ணன் குறி எப்போதும் தப்பாது. அவன் எய்த நாகாஸ்திரம் அர்ச்சுனன் தலையினை நோக்கி வந்து கொண்டிருந்தது. சாரதியான கிருஷ்ணன் நின்றுக்கொண்டிருந்த தேரை தன் கால் பெருவிரலால் அழுத்தினார். தேர் ஒரு ஜான் கீழே இறங்கியது. வந்த நாகாஸ்திரம் அர்ச்சுனனின் தலைகவசத்தை தட்டிச் சென்றது. அர்ச்சுனன் பதறியவன் என்ன என்று கிருஷ்ணனைப் பார்த்தான். கிருஷ்ணனே தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று கூறினான்.
*செய்திச் சுருக்கம்*
🔮மின்சாரத்தில் இயங்கும் கார், இந்தியாவிலேயே சென்னையில் தான் முதலில் அறிமுகம் - அமைச்சர் ஜெயக்குமார்.
🔮இளங்கலையுடன் பி.எட்.ஐ நான்கு வருடங்களில் முடிக்கும் வகையிலான படிப்பை செயல்படுத்த உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல் அளித்துள்ளார்.
🔮ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு: 15 பேர் உடல் சிதறி பலி .
🔮சீனாவில் வர்த்தக ரீதியிலான ராக்கெட்டுகளை அனுப்பி தனியார் நிறுவனம் பரிசோதனை
🔮சீனாவில் நடைபெற்ற சர்வதேச பேட்மின்டன் தொடரின் மகளிர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளார்.
🔮Chandrayaan-2: GSLV Mark III-M1 vehicle reduces number of orbit-raising exercises, saves fuel.
🔮Need long-term fiscal support to build Navy: Admiral Karambir Singh.
🔮Pakistan to send its first astronaut to space in 2022: Minister.
🔮MS Dhoni to serve Indian Army in Kashmir, will undertake patrolling and guard duties
*தொகுப்பு*
T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.
School Morning Prayer Activities - 26-07-2019

No comments:
Post a Comment