Wednesday, 17 July 2019

புதிய கல்விக்கொள்கை பற்றி ஆசிரியர்கள் பேசுகிறார்களா?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி -


தேககொ வரைவு 2019

பள்ளிக்கு வெளியிலிருந்து எழும் குரல்களைப் போலவே
அரச ஏமாற்றுகளின் பழிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு  பள்ளிக்குள் வேலை பார்க்கும் ஆசிரிய ஆசிரியைகள் பேசவேண்டிய அவசர காலம் இது.


வரைவை முழுமையாக வாசிக்க இயலாவிட்டால் ஏதேனும் சில பக்கங்களை வாசியுங்கள்.
ஒரு தலைப்பு சார்ந்த செய்திகளை வாசியுங்கள்.
உங்கள் கருத்தை அனைத்துத் தளங்களிலும் மக்களிடமும் பகிருங்கள்.

ஆசிரியர் அரசியலில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்று சிலர் சொல்லுவார்கள்.  தேககொ வரைவு குறித்துப் பேசுவது அரசியல் அல்ல.
வரைவு குறித்த விமர்சனங்களை அரசு கேட்கிறது. அனைத்து தரப்பினரிடமும் கேட்கிறது. அரசின் சார்பாகவே 'தேர்ந்தெடுக்கப்பட்ட' ஆசிரியர்களிடமும் கேட்கப்போகிறார்கள்.
எனவே, இது அரசுக்கு எதிரானதல்ல. மக்களுக்கும் கல்விக்கும் எதிரானது.
எனவே நல்லதோ, கெட்டதோ உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
ஆசிரியர்களின் பங்கே மிக முக்கியமானது.

குறிப்பாக ஆசிரிய சங்கங்கள் பேசவேண்டிய நேரமிது. மக்களிடம் நெருங்க வேண்டிய சங்கங்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகவும் இருக்கலாம்.

திரு.சிவா (கலகல வகுப்பறை)

No comments:

Post a Comment