Wednesday, 17 July 2019

3) பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.07.19

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


திருக்குறள்


அதிகாரம்:புகழ்

திருக்குறள்:240

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

விளக்கம்:

தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றி பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

பழமொழி

EARLY SOW, EARLY NOW

 பருவத்தே பயிர் செய்

இரண்டொழுக்க பண்புகள்

1. கடிதங்கள், கட்டுரைகள் போன்றவை எழுதும் போது திருத்தமான மொழி நடையை கையாள்வேன்.

2. பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற கலைகளையும் கலைஞர்களையும் போற்றுவேன்.

பொன்மொழி

ஒரு செயலில் எத்தனைப் பேர் கலந்து கொண்டனர் என்பது முக்கியமல்ல.துணிவுடனும் தூய உள்ளத்துடனும் கலந்து கொள்பவர்களாலேயே சிறப்படைகிறது.

------ காந்தி அடிகள்

 பொது அறிவு

ஜூலை 17- இன்று சர்வதேச நீதி தினம்

1.சர்வதேச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி யார்?

தல்வீர் பண்டாரி (பிப்ரவரி 2018 முதல்)

2.நம் நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்?

ரஞ்சன் கோகாய்(அக்டோபர் 3,2018 முதல்)

English words & meanings

* Camel - a desert animal. ஒட்டகம்
பாலைவன கப்பல் என்று அழைக்கப்படுகிறது.
மூன்று நிமிடங்களில் 200 லிட்டர் தண்ணீர் குடிக்க கூடியவை

* Cabage - a vegetable. முட்டைகோசு
வெள்ளை. பச்சை மற்றும் ஊதா (purple) நிறங்களில் காணப்படும்
 வைட்டமின் கே, ஈ மற்றும் நார் சத்து உள்ளது.

ஆரோக்ய வாழ்வு

தினமும்  காலையில்  வெதுவெதுப்பான நீரில்  மஞ்சள் கலந்து குடித்து வர வறட்டு இருமல் குணமாகும்.

Some important  abbreviations for students

* ITS - Indian Trade Service

 * IRPFS - Indian Railway Protection Force Service

நீதிக்கதை
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். “சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

புதன்

கணக்கு & கையெழுத்துப்பயிற்சி

*எண்களில் மிகவும் சிறப்புடை எண் 9
* 9 ன் மாயாஜாலக் கணக்குகளில் இன்று உங்களுக்காக ஒன்று

12345679
இந்த எண் தொகுப்பை 9 ன் மடங்குகளால்  பெருக்கிப் பாருங்கள்..

விடைகள்:
111,111,111,
222,222,222
333,333,333
.....................
.....................

கையெழுத்துப் பயிற்சி - 6






இன்றைய செய்திகள்

17.07.2019

* கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு.

* இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் கடந்த 14-ம் தேதி நடத்திய அஞ்சல் துறை தேர்வினை ரத்து செய்தது மத்திய அரசு. பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு.

* ஆந்திர மாநில கவர்னராக ஹரிசந்திரனும், சத்தீஸ்கர் கவர்னராக உய்கேவும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* காரைக்குடியில் 46 வது தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 19 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

* துருக்கியில் சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 53 கிலோ எடை பிரிவில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்றார்.

Today's Headlines

🌸 Red alert for 6 districts of Kerala: Indian meteorological department notification.

🌸 The central Government has cancelled the postal department exam conducted in Hindi and English on  14th.  Announcement has been given that the exam will be held in  regional languages

 🌸 BB Harishchandan and Anusuya Uikey are appointed as Governors to the states of Andhra Pradesh and Chattishgarh

 🌸 The 46th National Women's Chess Championship in Karaikudi will be held from July 19 to 27.

 🌸In the women's 53kg weight category of the International Wrestling Championships in Turkey, Vinesh won the gold medal for the Indian .

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment