தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.07.19
திருக்குறள்
அதிகாரம்:அருளுடைமை
திருக்குறள்:247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
விளக்கம்:
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.
பழமொழி
You may know by a handful the whole
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
இரண்டொழுக்க பண்புகள்
1. என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.
2.இயற்கை சமநிலையை பேணிபாதுகாப்பேன். அதற்காக என் பங்களிப்பை செலுத்துவேன்.
பொன்மொழி
ஒவ்வொரு நொடியும் நமது எண்ணங்களும் காட்சிகளும் மறைகின்றன.எனவே நினைவு சின்னங்களாகும் செயல்களை மட்டுமே வெளிப்படுத்துங்கள்..
பொது அறிவு
ஜூலை 26- இன்று கார்கில் வெற்றி தினம்
1. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நடைபெற்ற கார்கில் போரின் மற்றொரு பெயர் என்ன ?
ஆபரேஷன் விஜய் (விஜய் என்பதற்கு இந்தி மொழியில் வெற்றி என்று பொருள்)
2. கார்கில் போர் நடந்த கால அளவு என்ன?
மே 3,1999 முதல் ஜூலை 26,1999வரை(2 மாதங்கள் 3 வாரங்கள் 2 நாட்கள்)
English words & meanings
Jellyfish - a water animal with no brain or heart, ஜெல்லி மீன்.
* கடலில் வாழும் அழகிய ஆபத்தான உயிரினம்
* இதற்கு மூளை, இருதயம், கண், காது போன்ற எந்த உறுப்புகளும் கிடையாது.
Jasmine - a heavily scented white flower, மல்லிகை
* தமிழ் நாட்டில் எல்லா வகை விழாக்கள் மற்றும் திருவிழாக்களுக்கு பெயர் போனது.
* மதுரையின் மல்லிகை மிக மிக பெயர் போனது
ஆரோக்ய வாழ்வு
வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் உள்ளது. இது உடல்நலத்திற்கு ஏற்றது.
Some important abbreviations for students
* EMIS - Education Management Information System
* MSW - Maximum Sentence Weight in Document
நீதிக்கதை
தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும்.
அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.
அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் “இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்” என்றார். மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார்.
இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.
ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது.
ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன.
ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமு,தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது.
மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.
சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு “அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது.
ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்” என்றது.
சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது, இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.
தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது.
சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.
வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.
வெள்ளி
சமூகவியல்&விளையாட்டு
மைசூர் அரண்மனை
தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும். மிகப் பெரிய நுழைவு வாயில், திறந்த வெளி ஹால்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் ஆயுத அறை, நூலகம், லிஃப்ட் வசதி, வேட்டை அறை, பிரத்யேக படுக்கை அறைகள் என அனைத்தும் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளன.
பாரம்பரிய விளையாட்டு -
தட்டாங்கல் விளையாடும் முறையை அழகாக விளக்கும் பொள்ளாச்சி அரசுப்பள்ளி மாணவிகள்
இன்றைய செய்திகள்
26.07.2019
* மதுரை மலர் சந்தையில் வீணாகும் மலர்க் கழிவுகளை மறுசுழற்சி செய்து நாள்தோறும் 1 டன் வரை இயற்கை உரம் தயாரிக்கும் புதிய திட்டம் விவசாயிகள், பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
* ஸ்மார்ட் கார்டுகள் பணிகளை விரைந்து முடிக்க மாணவர்களின் விவரங்களை ஜூலை 31-க்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
* பீகாரில் விண்ணில் இருந்து விளைநிலத்தில் விழுந்த கல்: ஆய்வு செய்ய அறிவியல், தொழில்நுட்ப துறை உத்தரவு.
* அடுத்த ஒலிம்பிக் போட்டித் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் 2020, ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, 2020 ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட உள்ள தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
* 14 நாடுகள் பங்கேற்கும் சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டிகள் சென்னையில் ஆகஸ்ட் 3-ந்தேதி தொடக்கம்.
Today's Headlines
🌸The new scheme of recycling the flower waste to fertilizer upto 1 tonne at Madurai Flower market has been welcomed by farmers and the public.
🌸 The school department has ordered to enter the details of the students within July31 for the smart cards duty
🌸 A meteorite (space stone) fallen from the sky at Bihar. The Science and Technology department was ordered to do research on the stone.
🌸 The next Olympics will be held in Tokyo, Japan. It starts on July 24 of 2020 and losts till August 9. The gold, silver and bronze medals to be awarded to the winners are introduced.
🌸 Special Olympic football competitions with 14 countries will begin in Chennai on August 3

No comments:
Post a Comment