Sunday, 21 July 2019

ஜப்பான் நிறுவனத்தில் ஆண்டுக்கு 22 லட்சம் சம்பளம் - வென்று காட்டிய மாணவி ‘வேண்டாம்’

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல் 


பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்திற்கு மாணவி வேண்டாமை தூதுவராக நியமித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கௌரவப்படுத்தியுள்ளார்.
திருத்தணியை அடுத்த நாராயணபுரத்தைச் சேர்ந்த அசோகன் - கௌரி தம்பதிக்கு இரு‌ பெண் குழந்தைகள் பிறந்தன. அடுத்தாவது, ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்த அவர்களுக்கு, மூன்றாவது குழந்தையும் பெண்ணாகவே பிறந்தது. 'வேண்டாம்' எனப் பெயர் வைத்தால் அடுத்து பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கும் என ஊரார் சொன்னதை கேட்டு, மூன்றாவதாக பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என்றே பெயர் சூட்டினர் பெற்றோர்.

115642_v4
'வேண்டாம்' எனப் பெயர் கொண்ட ஒரே காரணத்தாலேயே, அந்தக் குழந்தை சந்தித்த கிண்டல்கள் கேலி ஏராளம். அனைத்தையும் எதிர்கொண்ட 'வேண்டாம்', கல்வியில் தனது திறமையை நிரூபித்தார். தற்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் வேண்டாமை, ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்று ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு எடுத்துள்ளது. பெற்றோர்களால் வேண்டாம் எனப் பெயர் வைக்கப்பட்ட மாணவியை இன்று ஜப்பான் நிறுவனமோ வேண்டும் என வேலைக்கு எடுத்துள்ளது.
114041_v2
இது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மாணவி வேண்டாமை அழைத்து பாராட்டியுள்ளார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி. அதோடு, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற சிறப்பு திட்டத்திற்கு மாணவி வேண்டாமை தூதுவராக நியமித்தும் ஆட்சியர் மகேஸ்வரி கெளரவித்துள்ளார்.
111141_v3
பெண்கள் தடை‌களை தகர்த்தெறிந்து, சாதனைகள் படைக்க மாணவி வேண்டாம் உந்து கோளாய் இருப்பார் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு கல்வியே மிகப்பெரிய‌ ஆயுதம் என்பதை உணர்த்தி, பாராட்டை பெற்றுள்ளார் மாணவி வேண்டாம்.

No comments:

Post a Comment