Sunday 28 July 2019

சதிஸ் தவான் விண்வெளி ஆய்வு மையம் - சந்திராயன் - 2 பார்வையிட்ட அரசுப் பள்ளி ஆசிரியருக்கு - முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

சதிஸ் தவான் விண்வெளி ஆய்வு மையம் - சந்திராயன் - 2 பார்வையிட்ட அரசுப் பள்ளி ஆசிரியருக்கு - முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு





ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ,ச திஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஜி.எஸ்.எல்.வி மார்க் - 3 எம் - 1 , சந்திராயன் 2 பார்வையிட கரூர் மாவட்டத்திலிருந்து மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெரால்டு ஆரோக்கியராஜ் மற்றும் வெள்ளியணை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு .பெ.தனபால் ஆகிய நானும் பெங்களூர் , தேசிய கல்வி வள நிறுவனம் இயக்குனர் திரு. பால மோகன் அவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டோம் .

சதிஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் சந்திராயன் - 2 விண்கலன் ஏந்தி நின்ற ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 - எம் - 1  ராக்கெட் மற்றும் ராக்கெட், செயற்கைக்கோள் மாதிரி அருங்காட்சியகம் பார்வையிட்டோம்.

 மாணவர்களுக்கு ராக்கெட் தொழில் நுட்பம் சார்ந்த தகவல்களை  கற்றதில் மகிழ்ச்சி.

ஸ்ரீஹரிகோட்டா சென்று வர அனுமதி வழங்கிய பள்ளிக்கல்வித் துறைக்கும் , எங்களை அழைத்துச் சென்ற பெங்களூர், தேசிய கல்வி வள நிறுவனத்திற்கும், தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் முகநூல் நட்பு களுக்கும் என் மனமார்ந்த கோடன கோடி நன்றிகள்.

உலக சாதனையாளர்
கனவு ஆசிரியர்
பெ.தனபால்,
பட்டதாரி ஆசிரியர்,
அ.ஆ.மே.நி பள்ளி,
வெள்ளியணை,
கரூர் மாவட்டம்.

No comments:

Post a Comment