தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
தமிழக அரசின் தொடக்க கல்வித்துறையின் கீழ் இடைநிலை ஆசிரியர்கள் , மொத்தம் 1,16,129, பேர் பணிபுரிந்து வருவதாக ஒருநபர் மற்றும் மூன்று நபர் குழுக்கள் மூலம் அறிக்கை சமர்பிககப்பட்டுள்ளது.
01-06-2009பின் பணிநியமனம் பெற்றவர்கள் ஏறக்குறைய 17000பேர் ஆறாவது ஊதியக்குழுவின் மூலம் 01-06-2009 ல் அரசாணை 234 வெளியிடப்பட்டு (new revised scale) (புதிய ஊதிய விகிதம்) இடைநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விட, 01-06-2009 பின்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மாதம் ரூபாய் 8000/- இன்று வரை இழந்து கொண்டு வருகின்றனர் . ஒரே கல்வித் தகுதிக்கு இரு வேறுபட்ட ஊதியம் கூடாது என நீதிமன்றங்கள் பல தீர்ப்புகள் வழங்கியிருந்தாலும் தொடர்ந்து..... ஒருநபர் குழு மற்றும் 3 நபர் ஊதியக் குழுக்களாலும் ஏமாற்றமே மிஞ்சியது... இடைநிலை ஆசிரியர்கள் கிராமப் புறங்களில் பணியாற்றுவதல் , விலை வாசி குறைவு என்றும் அவர்களின் கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்றும் அதிக அளவில் ,அதாவது 1,16,129 இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுவதால் ஊதியம் வழங்க இயலாது என தவறான மற்றும் பொய்யான அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல, இடைநிலை ஆசிரியர்கள் கல்வி தகுதியானது 10 + 12 + பட்டயச்சான்று ஆகும். மேற்கண்ட ஊதிய குழுக்களால் இடைநிலை ஆசிரியரின் ஊதியம் மறுக்கப்பட்ட காரணத்தினால் சென்னை உயர்நீதி மன்றத்தில் எமது இயக்கம் இது சார்பாக வழக்கு தொடர்ந்தது. 1.06.2009 க்குப்பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதோடு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று கூறப்பட்ட தேர்தல் வாக்குறுதியும் காணல் நீராக மாறிவிட்டது. ......
கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 க்குப்பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் கல்வித்தகுதி 10+12+பட்டயச்சான்று என பணிநியமன ஆணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதை (TRB calling letter) சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்நிலையில் கடந்த 10.07.2015 அன்று அரசாணை 200யை அரசு வெளியிடப்பட்டிருப்பது மீண்டும் இடைநிலை ஆசிரியர் சமுதாயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது..... மேற்படி அரசாணையில் ஊதியம் திருத்தம் சார்பான கோரிக்கைகள் Pay revision commission, அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அரசாணை 234இன்படி 1.06.2009க்குப்பின்பு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டதோடு ஒரு நபர் குழு PGRC (pay grievence redreffing cell) இன் மூலம் 4376 representation பெறப்பட்டு இன்று வரை ஊதியம் சார்பாக 89 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு 2இலட்சம் அரசு ஊழியர்கள் பயனடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் அதில் ஏமாற்றப்பட்டனர் மேலும் தனிநபர் மற்றும் சங்கங்களால் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ஊதியம் சார்பாக பல்வேறு தகவல்கள் தொடர்ந்து கோரப்பட்டு வருவதால் நிதிதுறைக்கு அதிகமான வேலைப்பளு ஏற்பட்டதாம்.
அதாவது தனிநபரோ அல்லது சங்கமோ அடுத்த ஊதிய குழு வரும் வரை ஊதியம் திருத்தம் கோரி வர வேண்டாமென்று மேற்படி அரசாணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. " ஊதிய குழுக்களாலும், அரசாங்கத்தாலும் ஊதியம் மறுக்கப்படுவது வேதனையான விஷயம் இந்நிலையில் 7வது ஊதியக் குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவுகின்றது...... எழுத்தறிவிக்கும் இடைநிலை ஆசிரிய சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியதாகவே கருத நேரிடுகிறது....

No comments:
Post a Comment