தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
கரூர்: குஜராத்மாநிலத்தில் உள்ளடிசைன் பார் சேஞ்ச் என்றதனியார் நிறுவனம்சமூகத்திற்குபயன்படக்கூடியவகையிலானஎளிமையான திறன்போட்டிகளைஆண்டுதோறும் நடத்தி பள்ளிகளையும், மாணவ, மாணவிகளையும்அடையாளம் காட்டி வருகிறது.
அந்த வகையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம்இந்நிறுவனம் நடத்திய போட்டியில், ஆட்சி மங்கலம் அரசுநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை மோகனாம்பாள், ஆசிரியர்கள்சசிரேகா, மகேஸ்வரி, ராஜகோபால், தனலட்சுமி, ஜெயந்தி ஆகி யோர்ஒருங்கிணைந்து மாணவர்களின் சார்பில் போட்டிக்கு என்னபடைப்பினை அனுப்பலாம் என ஆலோசித்தனர். பின்னர் பள்ளியைசுற்றிலும் 25 அடி நீளம், 3 அடி உயரத்தில் செங்கல்லுக்கு பதிலாக 1300வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் பாட்டில்களில் மணலை நிரப்பிஅதைக்கொண்டு சுற்றுச்சுவரை உருவாக்கினர்.
இந்த சுற்றுச்சுவருக்கு செங்கல் கொண்டு கட்டப்படுவதில் நான்கில்ஒரு மடங்கு செலவு செய்தாலே போதும், நீண்ட ஆயுளும்கிடைக்கும். சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மக்காத பிளாஸ்டிக்வாட்டர் பாட்டில்களும், நகரை மாசுப்படுத்தாமல், பாதுகாப்பு அரணாகதிகழ்ந்து விளங்கும் வகையில் இந்த சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.இதன் செயல் வடிங்கள் அனைத்தும் வீடியோவாகவும்,போட்டோக்களாகவும், செய்முறை தியரியாகவும் உருவாக்கப்பட்டுமாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்ஒப்படைக்கப்பட்டது. இவை அந்த நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பள்ளிகளின்படைப்புகளை பெற்றுக்கொண்ட குஜராத் நிறுவனம், இந்தியாமுழுதும் 100 படைப்புகளை தேர்வு செய்தது.
அதில், ஆட்சி மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிமாணவர்களின் இந்த படைப்பும் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்துகடந்தாண்டு நவம்பர் 22ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பள்ளி குழுவினர் கலந்து கொண்டனர்.அங்கு தேர்ந்ெதடுக்கப்பட்ட 100 பள்ளிகளை சேர்ந்த குழுவினர், தலா25 பள்ளிகள் என பிரிவுகளாக பிரித்து அதில் முதலிடத்தை பிடிக்கும்பள்ளிக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவித்தனர்,அதன் படி, இந்த பள்ளி பங்கு பெற்ற பிரிவில் முதலிடத்தை பெற்றது.இதனடிப்படையில், தனியார் நிறுவன நிர்வாகிகள், பள்ளி ஆசிரியைமற்றும் மாணவிக்கு சான்றிதழும், ரூ.50,000க்கான காசோலை மற்றும்விருது வழங்கப்பட்டது.
இந்த போட்டி உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருநாட்டிலிருந்தும் தேர்ந்ெதடுக்கப்படும் பள்ளிகள் ஆண்டுதோறும்ஏதாவது ஒரு நாட்டில் நடைபெறும் உலகளாவிய அறிவியல்மாநாட்டிற்கு அந்த நாட்டின் சார்பாக அழைக்கப்பட்டு, அவர்களின்படைப்புகள் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுஇதற்காக நம் நாட்டின் சார்பில் ஆட்சி மங்கலம் அரசு பள்ளி மட்டும்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம்மெக்சிகோ நாட்டில் நடைபெறும் அறிவியல் மாநாட்டில் இப்பள்ளிகுழுவினர் பங்கேற்று தங்கள் படைப்பை காட்சிப்படுத்துகின்றனர்.இதில் பள்ளி ஆசிரியை சசிரேகா, மாணவி மேகவர்ஷினி ஆகியோர்பங்கேற்கின்றனர். இந்த அறிவியல் மாநாட்டில் 45 நாடுகளில் இருந்துபடைப்புகள் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
சொந்த செலவு
மெக்ஸிகோ நாட்டிற்கு ஆசிரியையும், மாணவியும் சென்று வர ரூ. 2லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும். இதை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், இதற்கான நிதியை திரட்டும்முயற்சியில் பள்ளிக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள்ஈடுபட்டுள்ளன. இப்பள்ளி மாணவர்களின் இந்த படைப்பு குறித்தசிறப்புச் செய்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தினகரன்நாளிதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment