Tuesday, 28 July 2015

15 வயதில் முதுகலை பட்டம் பெற்று பிஎச்டி சேர்ந்துள்ள சிறுமி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


    லக்னௌவைச் சேர்ந்த சுஷ்மார் வர்மா (15) என்ற சிறுமி, முதுகலை பட்டப்படிப்பு முடித்து தற்போது பிஎச்டி ஆய்வுப் படிப்பில் சேர்ந்து சாதனை படைத்துள்ளார்.
எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜியில் முதல் ரேங்கில் சுஷ்மா தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவிலேயே, மிகவும் குறைந்த வயதில் பிஎச்டி படிப்பில் சேர்ந்துள்ள சிறுமி என்ற பெருமையை சுஷ்மா வர்மா பெற்றுள்ளார்.

மிகவும் ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்த சுஷ்மாவுக்கு மேல்படிப்பு படிக்க பல்கலைக்கழகம் நிதியுதவி வழங்கியுள்ளது.
சுஷ்மா தனது 5வது வயதில், அதிக புத்திசாலித்தனம் காரணமாக பள்ளியில் நேரடியாக 9ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment