தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் பள்ளி மானியம், 25 ஆயிரம், பராமரிப்பு நிதி, 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாநிலங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில், இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பள்ளிகளுக்கு பிரித்து தரப்படுகிறது. இந்நிதியை பயன்படுத்தி, பள்ளிக்கு தேவையான பொருட்கள் வாங்குதல், சேதமடைந்த வகுப்பறையை புதுப்பித்தல், கூடுதல் கட்டடம் கட்டுதல், கழிப்பிடம் கட்டுதல் போன்ற வசதிகளை செய்துகொள்ளலாம். இம்முறை, பள்ளிகளுக்கு வழங்கப்படும் எஸ்.எஸ்.ஏ., நிதியை முழுமையாக, சுகாதார பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய கழிப்பிடம், கூடுதல் கழிப்பிடங்கள் கட்டுதல், பழுதடைந்த கழிப்பிடங்களை புதுப்பித்தல், மாணவ, மாணவியருக்கு என தனித்தனியாக கழிப்பிட வசதி ஏற்படுத்துதல், சுத்தமாக பராமரித்தல், "செப்டிக் டேங்க்' அமைத்தல் போன்ற பணிகளுக்கு மட்டுமே, இந்நிதியை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., வழங்கும் நிதியை, சுகாதார பணிக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment