Tuesday, 28 July 2015

தமிழக பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள ”தமிழக பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு” தற்போது வரை தமிழக அரசால் உறுதிபடுத்தப்படவில்லை. முறையான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்கவும்.


செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள செய்திகள்-
 
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

       இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் மறைவையெட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.


          இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் எனும் இடத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது மேடையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.

               இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மேல் மிகுந்த பாசம் கொண்ட கலாம் மறைவு, மாணவர்கள் சமுதாயத்திடம் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அவரது மறைவுக்கு தமிழக அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Source: Malai Malar : Click Here & View Source News

Source: Dinamalar - Click Here & View Source News 

No comments:

Post a Comment