Friday 31 July 2015

அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்! 60 நாட்களுக்குள் எடுக்க காலக்கெடு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


'அரசு ஊழியர்கள் அனைவரும், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என்று, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


        நாட்டு மக்கள் அனைவருக்கும், தனித்தனியாக, பிரத்யேக அடையாள எண் வழங்கும் நோக்கத்துடன், 'ஆதார்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களிலும், தாலுகா அலுவலகங்களிலும் போட்டோ எடுத்து, கைரேகை, கருவிழி பதிவு செய்தவர்களுக்கு, 'ஆதார்' எண்ணுடன் கூடிய அடையாள அட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன.இவ்வாறு வழங்கப்படும் 'ஆதார்' அட்டைகள், முக்கிய அடையாள ஆவணமாக, மத்திய, மாநில அரசுகளால்
அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

அரசு நலத்திட்ட உதவிகள், தேவைப்படுவோரை நேரடியாக சென்றடையவும், மானியத்திட்டங்களை போலியான நபர்கள் பெறுவதை தடுக்கவும், அனைவரும் 'ஆதார்' எண் சமர்ப்பிக்க வேண்டும் என்று, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதன் முதற்கட்டமாக, காஸ் மானியம் பெறும் திட்டத்தில், 'ஆதார்' எண் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும், ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து வருகிறது. தற்போது, 'தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும், உடனடியாக ஆதார் எண் விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும்' என்று, கருவூல கணக்குத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

'வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு இரண்டு மாதம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். வயதானவர்கள், மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மேலும் ஒரு மாத காலம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்' என்று, அந்த சுற்றறிக்கையில், கணக்குத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

அரசுப்பணியாளர் சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறுகையில், ''தமிழகம் முழுக்க, மூன்று லட்சம் நிரந்தர அரசுப்பணியாளர்களும், மூன்று லட்சம் தொகுப்பூதிய பணியாளர்களும் உள்ளனர். ஆதார் எண் கட்டாயம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.

கால அவகாசம் என்பதையும், சம்பளத்தை நிறுத்துவது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி செய்தால் நாங்கள் போராட்டத்துக்கு தள்ளப்படுவோம்,'' என்றார்..3

சம்பளத்தில் பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்படும் தனியார் நிறுவன ஊழியர்களிடமும், ஆதார் எண் சேகரிக்கும் பணியை, வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளன.

TV Flash News:

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


*ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் இன்று முதல்(31.07.15) விண்ணபிகலாம் தமிழக அரசு அறிவிப்பு

*மேல்நிலை,உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவகத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 7.08.2015

*தொடக்க ,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் உதவித்தொடக்க கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 06.08.2015.

*கலந்தாய்வு குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

*கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தொடங்க வாய்ப்பு!

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிபந்தனைகள்: கல்வித்துறை முடிவில் திடீர் மாற்றம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


        பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டம் எதிரொலியால் பொதுமாறுதல் கலந்தாய்வில் இந்தாண்டு சேர்க்கப்பட்ட புதிய நிபந்தனைகளை தளர்த்திக்கொள்ள கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

   
            ஒவ்வொரு ஆண்டும் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்குவர். கடந்த இரண்டு ஆண்டுகளை போல் இந்தாண்டும் கலந்தாய்வு அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பும், போராட்டங்களும் நடத்தின.


         இந்நிலையில், இந்தாண்டிற்கான கலந்தாய்வு விதிமுறைகளை ஜூலை 14ல் கல்வித்துறை வெளியிட்டது. இதில், குறைந்தது ஒரு பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியோருக்கு மட்டுமே கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்விற்கு முன் நிர்வாக அடிப்படையில் துறை, பள்ளிகள் மற்றும் மாணவர் நலன் கருதி முதலில் நிர்வாக மாறுதலை மேற்கொள்ளலாம் உட்பட சில நிபந்தனைகள் புதிதாக சேர்க்கப்பட்டன.

          இதனால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் புதிய நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என போராட்டங்கள் நடந்தன.

           இந்நிலையில் சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்றுமுன் தினம் நடந்தது. செயலர் சபீதா, இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கலந்தாய்வில் பங்கேற்க 'ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்' என்ற நிபந்தனையை தளர்த்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம் ?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


       ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில்மாற்றம்ஒரு பணியிடத்தில் ஒரு கல்வி ஆண்டு பணியாற்றிஇருந்தால் போதும்கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் எனவும்,


       ஆகஸ்ட் 6 வரை தொடக்கக் கல்வித்துறையிலும்ஆகஸ்ட் 7வரை பள்ளிக் கல்வியிலும் விண்ணப்பங்கள் பெறப்படும். தொடக்கக்கல்வித்துறையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உதவித் தொடக்கக் கல்விஅலுவலர் கலந்தாய்வு தொடங்கி நடக்க உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து முழுமையான, உறுதியான தகவல்கள் கிடைத்தவுடன் நமது பாடசாலை வலைதளத்தில் வெளியிடப்படும்.

7th Pay Commission Likely to Hike Salaries By 40%: Credit Suisse

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         The 7th Pay Commission is likely to raise the salaries of government employees by up to 40 per cent, said Neelkanth Mishra, India equity strategist of Credit Suisse. The Pay Commission will submit its recommendations in October and it willbe implemented by next year.


          "As the Pay Commission numbers come through there could be a 30-40 per cent increase for each individual. Itwon't be as big as last time because it was driven by a lot of arrears but definitely a large number of government employees will come into the pay bracket which can afford to have, for example, four-wheelers," he said in an interview with NDTV. (Watch the full interview)Credit Suisse says about one-third of India's middle class is employed by the government and as the 7th Pay Commission comes through, there will be an improvement in discretionary spending."In Tier 3, Tier 4 towns where government employees are 50-60 per cent of the middle class, it is very likely that real estate markets will take off again," Mr Mishra said.
Once the Pay Commission submits its recommendations in October, it will take 3-6 months for the Centre and the states to announce its implementation, Credit Suisse said.Gujarat and Madhya Pradesh have already indicated that they are going to implement the 7th Pay Commission recommendations from January 1, 2016, he said.As clarity emerges on the 7th Pay Commission, consumption will see an uptick and that could act as a stimulus to the economy, the brokerage said.However, Mr Mishra struck a note of caution.
"Clearly if you see a third or 35per cent of your middle class getting a 40 per cent or 30 per cent jump in compensation in one shot, the fears of inflation will rise." Expectations of rate cuts can get pushed out and some possible fiscal pressures can emerge, he warned.

திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் "மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்" சென்னையில் நடைபெறும்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         நேற்று காலை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 
 
        இதில் திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோ சார்பில் உண்ணாவிரதம் சென்னையில் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் எனவும்,அடுத்தக்கட்ட கூட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கட்டடத்தில் நாளை வெள்ளிக்கிழமை கூட்ட முடிவெடுக்கப்பட்டது.

தகவல் : சாந்தகுமார், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, சென்னை

மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 இன்று வெளியாகிறது: விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்யலாம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 இன்று வெளியாகிறது: விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்யலாம்

  கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 பதிப்பு இன்று வெளியாகிறது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

       ஏற்கனவே, விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. விண்டோஸ்-7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ்-8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ்-9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு இன்று வெளியாகும் விண்டோஸ்-10 பதிப்பில் பல்வேறு வகையான நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


           மேதகு அப்துல் கலாம் மறைவு - 30/07/2015 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் செயல்முறைகள் 

Tuesday 28 July 2015

ஆழ்ந்த வருத்தங்கள்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
-
 ஆழ்ந்த வருத்தங்கள்.

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


       பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒரு சில தனியார் பள்ளிகள் தங்களின் சுயவிருப்பத்தின் பேரில் விடுமுறை அளித்துள்ளன. 

        தமிழக அரசு விடுமுறை என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. Source : Thanthi TV.

தமிழக பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள ”தமிழக பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு” தற்போது வரை தமிழக அரசால் உறுதிபடுத்தப்படவில்லை. முறையான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்கவும்.


செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள செய்திகள்-
 
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

       இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் மறைவையெட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.


          இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் எனும் இடத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது மேடையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.

               இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மேல் மிகுந்த பாசம் கொண்ட கலாம் மறைவு, மாணவர்கள் சமுதாயத்திடம் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அவரது மறைவுக்கு தமிழக அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Source: Malai Malar : Click Here & View Source News

Source: Dinamalar - Click Here & View Source News 

"அப்துல்கலாம்"‬ என்றொரு தமிழன் - வாழ்க்கையும் கல்வியும்...

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


                     கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், ஒரு படகுச் சொந்தக்காரரும் மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் அவர்களுக்கும், இல்லத்தரசி ஆஷியம்மா அவர்களுக்கும், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், மகனாகப் பிறந்தார். 


         அவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் ஆனதால், இளம் வயதிலேயே, அவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாணவனாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்கு பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும், அவர் சித்தரிக்கப்படுகிறார்.
இராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு வருட படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார். அவர் 1955 ஆம் ஆண்டில், எம் ஐ டி சென்னையில், விண்வெளி பொறி இயல் படிப்பிற்காக, சென்னை சென்றார். அங்கு அவர் முதுகலை பட்டமும் பெற்றார். கலாம் பல கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்று இருந்தாலும், முறையான படிப்பை, எம் ஐ டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார்.
கலாம் ஒரு உயர்ரகத் திட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த போது, கல்லூரி முதல்வர், அந்த திட்டத்தின் முன்னேற்றத்தைக் குறித்து அதிருப்தி ஆனதோடு, இரண்டு தினங்களுக்குள் திட்டம் முடிக்கப்படவில்லை என்றால் அவருடைய கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும் என்று மிரட்டினார். அதனால் கலாம், ஓய்வு ஒழிவில்லாமல் அந்த திட்டத்திற்காக உழைத்து, திட்டத்தை உரிய காலத்தில் முடித்து, கல்லுரி தீனின் நன்மதிப்பை பெற்றார். பின்னர் அவர் " நான் உனக்கு அதிக பளு கொடுத்து மிக கஷ்டமான காலக்கெடுவை விதித்தேன்." என்று கூறினார்.

அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15,1931இல் பிறந்தார்) பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.

கலாம், இந்தியாவின் முக்கிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது, பாட்னா , அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றுவதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.


கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்பு பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, கருணை மனுக்களின் மீது முடிவேதும் எடுக்காமல் இருந்த காரணத்தால், குற்றவாளிகளின் மீதான நடவடிக்கைகள் கால தாமதம் ஆகியதற்காக, விமர்சிக்கப்பட்டுள்ளார்.

ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.



பிறப்பு: அக்டோபர் 15, 1931

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு) 

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்: 

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்: 

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 – சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

டிவிட்டரில் அப்துல் கலாமின் கடைசி பதிவு! & கடைசி நிமிடம்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


 

      10 மணி நேரங்களுக்கு முன்பு இறுதியாக ட்வீட் செய்திருந்தார் அப்துல் கலாம். அதில், ' நான் ஷிலாங்கிற்கு செல்கிறேன். அங்குள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனெஜ்மெண்ட் கல்லூரியில் வாழ்த்தக்கது இந்த பூமி என்ற தலைப்பில் பேச உள்ளேன் " என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.



பிறப்பு: அக்டோபர் 15, 1931

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)  

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:      

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:     

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்இந்தியா 2012எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
-
 ஆழ்ந்த வருத்தங்கள்.

15 வயதில் முதுகலை பட்டம் பெற்று பிஎச்டி சேர்ந்துள்ள சிறுமி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


    லக்னௌவைச் சேர்ந்த சுஷ்மார் வர்மா (15) என்ற சிறுமி, முதுகலை பட்டப்படிப்பு முடித்து தற்போது பிஎச்டி ஆய்வுப் படிப்பில் சேர்ந்து சாதனை படைத்துள்ளார்.
எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜியில் முதல் ரேங்கில் சுஷ்மா தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவிலேயே, மிகவும் குறைந்த வயதில் பிஎச்டி படிப்பில் சேர்ந்துள்ள சிறுமி என்ற பெருமையை சுஷ்மா வர்மா பெற்றுள்ளார்.

மிகவும் ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்த சுஷ்மாவுக்கு மேல்படிப்பு படிக்க பல்கலைக்கழகம் நிதியுதவி வழங்கியுள்ளது.
சுஷ்மா தனது 5வது வயதில், அதிக புத்திசாலித்தனம் காரணமாக பள்ளியில் நேரடியாக 9ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday 27 July 2015

ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டாயம்:தற்செயல் விடுப்புக்கு அனுமதி மறுப்பு.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

        அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி மறுத்து, மாநில திட்ட இயக்குனர் எச்சரித்துள்ளார். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளுக்காக மட்டும், கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.


மேலும், விடுமுறை நாட்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டால், அன்றைய தினத்துக்குபதிலாக, வேறு நாட்களில் ஈடுசெய் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயிற்சிகளில் பங்கேற்க பெரும்பாலான ஆசிரியர்களிடம் ஆர்வம் காணப்படுவதில்லை. சிலர், அன்றைய தினங்களில் விடுப்புஎடுத்துச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதுகுறித்த புகார்கள் தொடர்ந்து, தலைமை அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட்டது. இதனால், பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு எடுப்பது அரசு விதிகளுக்கு முரணானது எனவும், இனிவரும் காலங்களில் பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு அளித்தால், அது ரத்து செய்யப்பட்டு, ஆப்சென்ட் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், இதுகுறித்த சுற்றறிக்கை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்,உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 37 ஆயிரம் பேர்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

       தமிழகத்தில் 37,500 குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது.  அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 37,500 பள்ளி செல்லாக் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

 இதுதொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறியது:

தமிழகத்தில் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் மாவட்டங்களில்தான் பள்ளி செல்லாத குழந்தைகள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக, சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

மாநிலத்துக்குள்ளேயே இடம்பெயரும் தொழிலாளர்கள் காரணமாக விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர், பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களுக்காக ஹிந்தி, ஒரியா உள்ளிட்ட மொழிகளில் பாடங்களை நடத்துவதற்கான ஆசிரியர்களும் தன்னார்வ அமைப்புகளின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் ஏராளமான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அவர்களின் குழந்தைகளுக்காக தெலுங்கு மொழியிலும் பாடங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்து சேலம், ஈரோடு பகுதிக்கு இடம்பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்லாமல் உள்ளனர். இவர்கள் பருத்தி சீசனில் ஆண்டுக்கு 3 அல்லது 4 மாதங்கள் தங்களது குழந்தைகளுடன் சென்றுவிடுவதால், அவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.

சென்னை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 1,250-ஆக உள்ளது. கட்டுமானப் பணிகள், சாலையோரங்களில் வசிப்பவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை.

இந்தக் குழந்தைகளில் 33,000 பேரை பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படுவர் என்று அவர்கள் தெரிவித்தனர்

இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

      ஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளை  மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து  ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


         ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும்  மே மாதம் நடந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு  ஆண்டுகளாக கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டு வருகிறது. 2015-16க்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த 2 மாதங்களாக  ஆசிரியர்கள்  கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் கலந்தாய்வின் போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்த  விபரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 

இதன்படி கலந்தாய்வில் பங்கேற்க ஏற்கனவே வேலை பார்க்கும் இடத்தில் குறைந்தது ஒரு ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நியதி 3  ஆண்டாக மாற்றப்பட்டது. இதனால் ஒரு இடத்தில் 3 ஆண்டுக்கும் குறைவாக  பணியாற்றிய பல ஆயிரம் ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க  முடியாத நிலை ஏற்பட்டது. 

மேலும் சில விதிமுறைகள் தங்களுக்கு பாதகமாக இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நிர்வாக காரணங்களால் இடமாறுதலுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகள் முறைகேடுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் வகையில் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். 

எனவே, இவற்றை மாற்றம் செய்து பழைய முறைப்படி கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.  

இதனால் நெறிமுறைகளில் மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாற்றங்கள் குறித்து அறிவிப்பு  வெளியிடப்பட்ட பிறகு கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் அனேகமாக ஆகஸ்டு முதல் வாரம் கவுன்சலிங் தொடங்க  வாய்ப்புள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சுகாதார பணிக்கு எஸ்.எஸ்.ஏ., நிதி:பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


        பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., வழங்கும் நிதியை, சுகாதார பணிக்கு மட்டுமே  பயன் படுத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

         மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் பள்ளி மானியம், 25 ஆயிரம், பராமரிப்பு நிதி, 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாநிலங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில், இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பள்ளிகளுக்கு பிரித்து தரப்படுகிறது. இந்நிதியை பயன்படுத்தி, பள்ளிக்கு தேவையான பொருட்கள் வாங்குதல், சேதமடைந்த வகுப்பறையை புதுப்பித்தல், கூடுதல் கட்டடம் கட்டுதல், கழிப்பிடம் கட்டுதல் போன்ற வசதிகளை செய்துகொள்ளலாம். இம்முறை, பள்ளிகளுக்கு வழங்கப்படும் எஸ்.எஸ்.ஏ., நிதியை முழுமையாக, சுகாதார பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய கழிப்பிடம், கூடுதல் கழிப்பிடங்கள் கட்டுதல், பழுதடைந்த கழிப்பிடங்களை புதுப்பித்தல், மாணவ, மாணவியருக்கு என தனித்தனியாக கழிப்பிட வசதி ஏற்படுத்துதல், சுத்தமாக பராமரித்தல், "செப்டிக் டேங்க்' அமைத்தல் போன்ற பணிகளுக்கு மட்டுமே, இந்நிதியை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோவில் நடைபெறும் அறிவியல் மாநாட்டுக்கு கரூர் அரசு பள்ளி தேர்வு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


 கரூர்குஜராத்மாநிலத்தில் உள்ளடிசைன் பார் சேஞ்ச் என்றதனியார் நிறுவனம்சமூகத்திற்குபயன்படக்கூடியவகையிலானஎளிமையான திறன்போட்டிகளைஆண்டுதோறும் நடத்தி பள்ளிகளையும்மாணவமாணவிகளையும்அடையாளம் காட்டி வருகிறது 
 
         அந்த வகையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம்இந்நிறுவனம் நடத்திய போட்டியில்ஆட்சி மங்கலம் அரசுநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை மோகனாம்பாள்ஆசிரியர்கள்சசிரேகாமகேஸ்வரிராஜகோபால்தனலட்சுமிஜெயந்தி ஆகி யோர்ஒருங்கிணைந்து மாணவர்களின் சார்பில் போட்டிக்கு என்னபடைப்பினை அனுப்பலாம் என ஆலோசித்தனர்பின்னர் பள்ளியைசுற்றிலும் 25 அடி நீளம், 3 அடி உயரத்தில் செங்கல்லுக்கு பதிலாக 1300வாட்டர் பாட்டில்கூல் டிரிங்க்ஸ் பாட்டில்களில் மணலை நிரப்பிஅதைக்கொண்டு சுற்றுச்சுவரை உருவாக்கினர்.

இந்த சுற்றுச்சுவருக்கு செங்கல் கொண்டு கட்டப்படுவதில் நான்கில்ஒரு மடங்கு செலவு செய்தாலே போதும்நீண்ட ஆயுளும்கிடைக்கும்சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மக்காத பிளாஸ்டிக்வாட்டர் பாட்டில்களும்நகரை மாசுப்படுத்தாமல்பாதுகாப்பு அரணாகதிகழ்ந்து விளங்கும் வகையில் இந்த சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.இதன் செயல் வடிங்கள் அனைத்தும் வீடியோவாகவும்,போட்டோக்களாகவும்செய்முறை தியரியாகவும் உருவாக்கப்பட்டுமாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்ஒப்படைக்கப்பட்டதுஇவை அந்த நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதுபல்வேறு மாநிலங்களில் இருந்து பள்ளிகளின்படைப்புகளை பெற்றுக்கொண்ட குஜராத் நிறுவனம்இந்தியாமுழுதும் 100 படைப்புகளை தேர்வு செய்தது.

அதில்ஆட்சி மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிமாணவர்களின் இந்த படைப்பும் தேர்வு செய்யப்பட்டதுஇதையடுத்துகடந்தாண்டு நவம்பர் 22ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பள்ளி குழுவினர் கலந்து கொண்டனர்.அங்கு தேர்ந்ெதடுக்கப்பட்ட 100 பள்ளிகளை சேர்ந்த குழுவினர்தலா25 பள்ளிகள் என பிரிவுகளாக பிரித்து அதில் முதலிடத்தை பிடிக்கும்பள்ளிக்கு பரிசுகள்சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவித்தனர்,அதன் படிஇந்த பள்ளி பங்கு பெற்ற பிரிவில் முதலிடத்தை பெற்றது.இதனடிப்படையில்தனியார் நிறுவன நிர்வாகிகள்பள்ளி ஆசிரியைமற்றும் மாணவிக்கு சான்றிதழும்ரூ.50,000க்கான காசோலை மற்றும்விருது வழங்கப்பட்டது.

இந்த போட்டி உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறதுஒவ்வொருநாட்டிலிருந்தும் தேர்ந்ெதடுக்கப்படும் பள்ளிகள் ஆண்டுதோறும்ஏதாவது ஒரு நாட்டில் நடைபெறும் உலகளாவிய அறிவியல்மாநாட்டிற்கு அந்த நாட்டின் சார்பாக அழைக்கப்பட்டுஅவர்களின்படைப்புகள் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம்இந்த ஆண்டுஇதற்காக நம் நாட்டின் சார்பில் ஆட்சி மங்கலம் அரசு பள்ளி மட்டும்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுஇதையடுத்து வரும் செப்டம்பர் மாதம்மெக்சிகோ நாட்டில் நடைபெறும் அறிவியல் மாநாட்டில் இப்பள்ளிகுழுவினர் பங்கேற்று தங்கள் படைப்பை காட்சிப்படுத்துகின்றனர்.இதில் பள்ளி ஆசிரியை சசிரேகாமாணவி மேகவர்ஷினி ஆகியோர்பங்கேற்கின்றனர்இந்த அறிவியல் மாநாட்டில் 45 நாடுகளில் இருந்துபடைப்புகள் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

சொந்த செலவு


மெக்ஸிகோ நாட்டிற்கு ஆசிரியையும்மாணவியும் சென்று வர ரூ. 2லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும்இதை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால்இதற்கான நிதியை திரட்டும்முயற்சியில் பள்ளிக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள்ஈடுபட்டுள்ளனஇப்பள்ளி மாணவர்களின் இந்த படைப்பு குறித்தசிறப்புச் செய்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தினகரன்நாளிதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது