உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்களை, பள்ளி கேன்டீன்களில் விற்பனை செய்வதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவது, கவலை தரும் விஷயமாக உள்ளது. மேலும், பள்ளிகளில் உள்ள கேன்டீன்களில், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும், 'ஜங்க் புட்' எனப்படும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், குழந்தைகளுக்கு நோய் ஏற்படுகிறது. எனவே, இந்த உணவு வகைகளை, பள்ளி கேன்டீன்களில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா, இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிறார். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்
No comments:
Post a Comment