சிலவகை சோப்புகள், பற்பசைகள், வெயிலிலிருந்து பாதுகாக்கும் சன்ஸ்கிரீன் கிரீம்கள் உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களிலுள்ள சில வகை ரசாயனங்கள் ஆண்களின் விந்தணுவைப் பாதித்து, மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜெர்மன் மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற் கொண்ட ஆய்வில் இது தெரியவந் துள்ளது. மொத்தம் 96 சேர்மங் களை ஆய்வு செய்ததில், வெயிலிலிருந்து சருமங்களைப் பாதுகாப்பதற் காக சன்ஸ்கிரீன் கிரீம்களில் பயன் படுத்தப்படும் ‘4-மீதைல்பென்ஸில்டேன் கேம்பர்’ (4-எம்பிசி), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான ‘டிரைகுளோசன்’ ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங் கள் விந்தணுக்களைப் பாதிக்கின்றன.
இதற்கு முந்தைய ஆய்வுகளில், இந்த ரசாயனங்கள் விந்தணுக்களைப் பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு ஆய்வுமுறைகள் இல்லை. தற்போது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதிப்பவை எனக் கூறப்படும் ரசாயனங்களை சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மனிதனின் அன்றாடப் பயன்பாட்டிலுள்ள உணவு, துணிகள், சுகாதாரப் பொருள்கள், பொம்மைகள், அலங்காரப் பொருள்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றில் ‘நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதிப்பவை’ எனக் கருதப்படும் ரசாயனங்கள் உள்ளன.
இந்த ஆய்வை வழிநடத்திய விஞ்ஞானியான, நவீன ஐரோப்பா கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் போராசிரியர் திமோ ஸ்ட்ரன்கெர் கூறியதாவது:
சில வகை சோப்புகள், பற்பசை கள், சன்ஸ்கிரீன் கிரீம்கள் உள்ளிட்ட வற்றில் பயன்படுத்தப்படும் சில வகை ரசாயனங்கள், விந்தணுக் களின் கால்சியம் அளவை அதிகப் படுத்துகின்றன. அவற்றின் நீந்தும் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்து வதுடன், கருமுட்டையைப் பாதுகாக்கும் கவசத்தைத் துளைத்து உள் நுழையும் திறனையும் குறைக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment