தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவருக்கு புரியாத பாடத்தை எளிதில் புரிய வைத்து, அவரை மாற்றிய நுணுக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க உள்ளனர்.
அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சிலர் நன்கு படிப்பர். ஆனால் கூச்ச சுபாவத்துடன் இருப்பர். சில மாணவர்கள் ஆங்கிலம் நன்கு படிப்பர் ஆனால் தமிழ் இலக்கணத்தில் திணறுவர். சிலருக்கு கணிதம் புரியாது. இது போன்ற குறைபாடு உடைய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட பாடத்தில் புரியாத பகுதியை புரிய வைக்க வேண்டும். இதை எளிமையான நடைமுறையில் கையாண்ட வழிமுறைகள் குறித்து ஒவ்வொரு பகுதியாக ஆராய்ச்சி கட்டுரை போல் எழுதி டிச., மாதத்திற்குள் சமர்பிக்க அனைவருக்கும் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாட தலைப்பில் செயல் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பிப்பர். இதன் அடிப்படையில் வரும் காலங்களில் மாணவர்களுக்கு கற்றுத்தரும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
No comments:
Post a Comment