Thursday, 16 October 2014

தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

 
 
பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

 

பெயர்K.R.RAMESH
கோரிக்கை எண்2014/802851/AIகோரிக்கைத் தேதி15/09/2014
முகவரி32 A3, SITHAVEERAPPA CHETTI STREET, DHARMAPURI, VIRUPAKSHIPURAM, DHARMAPURI TALUK,
DHARMAPURI - 636701.
TAMILNADU . 
கோரிக்கைபள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும்  ஆசிரியர்கள் பலரது தேர்வுநிலை வழங்கக்கோரும் கருத்துருக்கள் கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை பெறப்படவில்லை  எனும் காரணத்தால் தேர்வுநிலை வழங்கப்படாமல்  சில மாவட்டங்களில் முதன்மைக்கல்வி  அலுவலர்களால்திருப்பி அனுப்பப்படுகின்றன .      தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண் 37489/டபிள்யு 2/இ1/ 2014  நாள் 18.07.2014 கடிதத்தின் வாயிலாக    பத்தாண்டு பணிமுடித்த முதுகலையாசிரியர்  தேர்வுநிலை பெறுவதற்கு  கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது   ஆனால் தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலரால்  செயல்முறைகள் ஒ.மு எண் 4773/ஆ1/ 2014  நாள் 02.09.2014 ன் படி தற்போதும்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை இல்லாத கருத்துருக்கள்  தேர்வு நிலை வழங்கப்படாமல்  திருப்பியனுப்பப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே  மேற்காண்    தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தநா.பள்ளிக் கல்வி துணை இயக்குநரின்  கடிதத்தில் தெரிவித்துள்ளபடி  பத்தாண்டு பணிமுடித்த ஒருவர் தேர்வுநிலை பெறுவதற்கு கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை என்பதை  அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய தெளிவுரைகள் வழங்கி பத்தாண்டு பணிமுடித்த  ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுகிறேன்
கோரிக்கை வகைSERVICE MATTERS - PROMOTION, TRANSFERS,NON-PAYMEகோரிக்கை நிலவரம்Accepted
தொடர்புடைய அலுவலர்SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
பதில்ஏற்கப்பட்டது - பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு ப.க.இ ந.க.எண்.076506/W2/S1/2014 dt.13.10.2014 அன்று E.mail மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகையால் மனுதாரர் தேர்வுநிலை பெறுவதற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரை அனுக தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.74214/டபிள்யு2/14 நாள் 13.10.2014 

No comments:

Post a Comment