Sunday, 26 October 2014

தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக - தகவல்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக - தகவல்


          நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல்




              தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க இதழான ஆசிரியர் இயக்கக் குரலிலும், நேர்முகமாகவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வந்தோம்.


              அந்தோ பரிதாபம் என்ற தலைப்பில் காலியாக உள்ள உ.தொ.க.அ. காலிப் பணியிடங்களின் பட்டியலை வெளியிட்டு வந்தோம். 25-10-2014 அன்று நடைபெற்ற உ.தொ.க.அ. பணிமாற்ற கலந்தாய்வில் 64 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உ.தொ.க.அலுவலர்களாக பணி மாற்ற ஆணை வழங்கியுள்ளார்.

              மேல்நிலைக் கல்வித்தகுதிக்கு இணையாக diploma in teacher education படித்தவர்களுக்கும் உ.தொ.க.அலுவலர் பணிமாற்ற ஆணை வழங்கி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை அவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு தொலைப்பேசியில் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டார்.



                 பலமுறை கேட்டுக் கொண்டதற்கிணங்க நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், தமிழ், வரலாறு, ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை ஒரேநாளில் நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். - இவ்வாறு தகவல்கள் கிடைத்துள்ளது. உறுதியான தகவல் கிடைத்ததும் நமது பாடசாலை வலைதளத்தில் பதிவு செய்யப்படும்.

Friday, 17 October 2014

ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு.


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு, அடுத்த மாதம் முதல், இ-பே ரோல்எனும், ஆன்லைன் மூலம் பில் சமர்பிக்கும் முறையை கருவூல அலுவலர்கள் அமல்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு, கருவூலம் மூலம் சம்பளம் மற்றும் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாதமும், சம்பந்தப்பட்ட தலைமை அலுவலர், தமக்கு கீழ் உள்ள அரசு ஊழியருக்கான சம்பள பில் தயாரித்து, கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியிருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக, சம்பள பில் பெறுவதை, காகித கோப்புகளாகவும், சிடி வடிவிலும், பெறப்பட்டு வந்தது.இதன்மூலம், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்கள் சம்பளம் பெறும் தலைப்பு, மொத்த செலவு உள்ளிட்டவற்றை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது கருவூலத்துறை கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், அக்டோபர் மாத சம்பளம் முதல், ஆன்லைனில் பில் சமர்பிக்கும் முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் தனித்தனியே, "யூசர் ஐடி',"பாஸ்வேர்டு' வழங்கப்படும். கருவூலத்துறை இணையதளத்தில் இ-பே ரோல் எனும் பகுதியில், இதை பயன்படுத்தி, அலுவலர்களின் பில்களை, ஆன்லைனில்சமர்பிக்கலாம்.

பின் வழக்கம் போல, வங்கிக்கணக்குகளில், "இ.சி.எஸ்' முறையில் சம்பளம்வழங்கப்பட்டுவிடும். ஆவணங்களாக தயாரித்து வழங்கி வந்த முறையை, ஒழித்துள்ள நிலை, தலைமை அலுவலர்களின் பணி பளுவை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு அக்டோபர் மாதத்துக்கான சம்பள பில்களை, "ரிகர்சல்' போல், ஆன்லைனிலும், பதிவு செய்துவிட்டு, ஆவணமாகவும் தரலாம் எனவும், அடுத்த மாதம் கண்டிப்பாக, ஆன்லைன் முறையில் மட்டுமே, பில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பில் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஒரு ஆசிரியர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, நேற்று சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், ஆன்லைனில் பில் சமர்பிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சேலம் கருவூல பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.

Education World

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
Education World

Here are the Most Popular Articles on EducationWorld.com Last Week!

Did you see the latest news stories EducationWorld staffers have been writing and curating for you? Check these stories out.Share this newsletter with your colleagues. Send us your story ideas and bylined articles by emailing editor@educationworld.com.
As always, EducationWorld has great lessonstemplates and more to help you!

Weekly News Roundup

Microsoft Releases New OneNote App for Educators
Microsoft is taking the next step in OneNote after its release of the new OneNote Class Notebook Creator app on Tuesday.  With the app,...
Poor AP Test Results Put US Behind Other Countries
America's schools may be in trouble after the release of recent results of two high school Advanced Placement (AP) exams focused on science,...
Bullying Allegations Lead to Cancelled Football Season
A small town in New Jersey is defending its high school team as its season is cut short after reported events of bullying, intimidation and...
Miami School Using Debating Skills to Prep for Common Core
While many debate the Common Core's efficacy, a Florida middle school now has a debate class simply because of the standards. Bridget McKinney,...
Study Finds Video Games Don't Improve Learning
A recent study from France found that there is no educational benefit to playing video games, but there is no harm either. The study examined the...
The Edworld Exchange
Sell original curricular materials such as lesson plans, worksheets, templates, teaching guides and more! Simply upload your files and set the prices. The Sales transaction takes place on the platform, and we provide immediate download to buyers! It's that easy!

Learn More!


NOBEL LAUREATES FOR PEACE மத்திய அரசு சார்பில் தமிழக அரசு பள்ளிகளில் பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



மத்திய அரசு சார்பில் தமிழக அரசு பள்ளிகளில் பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள்!அக்டோபர் 11,2014,11:54 IST


சென்னை: மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து, பின், முறையான பள்ளிகளில் சேர்ப்பது, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி உட்பட, பல திட்டங்கள், மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகின்றன. இதை, மூவர் குழு, ஆய்வுசெய்து வருகிறது. குஜராத் மாநில அரசின், முன்னாள் தலைமை செயலர், மான்காட், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த, ரங்கராஜன், உலக வங்கி சார்பில், அமெரிக்காவைச் சேர்ந்த, மூனா ஆகியோர், அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில், மத்திய குழு ஆய்வு செய்தது. நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் அருகில் உள்ள ஓங்கூர் தொடக்கப் பள்ளி, சாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மயிலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, சாரத்தில் உள்ள வட்டார வள மைய பயிற்சி மையம் உட்பட பல இடங்களை, மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
அனைவருக்கும் கல்வி இயக்குனரக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய குழுவுடன் பார்வையிட்டு வருகின்றனர். இன்றும், விழுப்புரம் மாவட்டத்தில், பல அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
ரங்கராஜன் கூறுகையில், &'&'பள்ளிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம்; தற்போதைக்கு எதுவும் கூற முடியாது,&'&' என்றார்.
இணை இயக்குனர் நாகராஜ முருகன் கூறுகையில், &'&'மாணவர்களின் வாசிப்புத் திறன், ஒட்டுமொத்த கல்வித்தரம், பள்ளிகளில் உள்ள வசதிகள், ஆசிரியரின் கற்பித்தல் திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும், மத்திய குழுவினர் பார்வையிடுகின்றனர். இதுவரை பார்வையிட்ட பள்ளிகளில், மத்திய குழுவினர் எவ்வித குறையையும் தெரிவிக்கவில்லை" என்றார்

CLEANLINESS PLEDGE

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



Thursday, 16 October 2014

அதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்… சமாளிப்பது எப்படி?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


          இனி ஏடிஎம் கார்டு மூலம் தினமும் 100 ரூபாய் எல்லாம் நீங்கள் எடுக்க முடியாது. அப்படி எடுத்தால், எக்கச்சக்கமான பணத்தைப் பயன்பாட்டுக் கட்டணமாக கட்ட வேண்டியிருக்கும். வருகிற நவம்பர் 1-ம் தேதியிலிருந்து இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்த வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் தந்துவிட்டது.
 
      ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப் பட்டதன் நோக்கமே, வங்கிக்குப் போய் வரிசையில் நின்று பணம் எடுப்பதைத் தவிர்க்கவும், அதிகப் பணத்தைப் பாதுகாப்பாக வங்கியில் சேமித்து வைக்கவும்தான்.

            ஆனால், இன்று அந்த ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க ஆர்பிஐ புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்திருப்பது வேடிக்கைதான். ஏடிஎம்மைப் பயன்படுத்துவதில் புதிதாக கொண்டுவரப் பட்டிருக்கும் நடைமுறைகள் என்னென்ன என்று முதலில் பார்த்துவிடுவோம்.
1. சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஒரு மாதத்துக்கு ஐந்து முறை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதற்குப்பின் வங்கிகள் தேவைப்பட்டால் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கலாம்.
2. வங்கிக் கணக்கு அல்லாத மற்ற வங்கிகளில் பயன்படுத்த ஐந்து வாய்ப்புகள்தான். அதுவும் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறையும், சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் மூன்று முறையும் பயன்படுத்தலாம். அதற்குமேல் செய்யும் பரிமாற்றங்களுக்குப் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப் படும்.
3. இதற்கான கட்டணமாக 20 ரூபாய் வரையும், அதோடு வேறு ஏதாவது சேவைக் கட்டணம் இருந்தால் அதனையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளலாம்.
ஆர்பிஐயின் இந்தப் புதிய நெறிமுறை கள் மக்களை பெரிய அளவில் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்று சம்பாதிக்கும் அனைவருமே பணத்தை மொத்தமாகக் கையில் வைத்துக்கொண்டு செலவழிப்பதில்லை. சராசரியாக இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் மாதத்துக்கு ஏடிஎம்மில் 10 – 12 முறை பரிவர்த்தனை செய்கிறாராம்.
தமிழகத்தில் தேசிய சராசரியைவிட பயன்பாட்டு விகிதம் சற்று அதிகமாகவே உள்ளது.அதிலும் மற்ற வங்கி ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்துவது என்பது மொத்த பயன்பாட்டில் 35 – 40% என்ற அளவில் இருந்தாலும், கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஒரு மாதத்துக்கான பயன்பாடு என்பது குறைந்தபட்சம் 8 – 10 என்ற அளவிலும் உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை தருவதற்காக எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டி யிருப்பதால் பயன்பாட்டுக் கட்டணத்தை விதிக்க வேண்டும் என வங்கிகள் ஆர்பிஐயிடம் கோரிக்கை வைத்ததால், இப்போது இந்தப் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது ஆர்பிஐ.
ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏடிஎம் இயந்திரங்கள் நாடு முழுக்க துவங்கப்பட்டதற்கு காரணமே பணம் எடுப்பதற்காக எல்லோரும் வங்கியைத் தேடி வரவேண்டியதில்லை. காரணம், வங்கியில் ஊழியர்கள் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை.
இதனால் வாடிக்கையாளர்களின் நேரம் வீணாகிறது என்கிற மாதிரியான பல காரணங்களினால்தான்.கடந்த காலங்களில் வங்கி ஊழியர் களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத வங்கிகள் ஏடிஎம் இயந்திரங் களின் எண்ணிக்கையை மட்டும் போட்டிபோட்டுக்கொண்டு உயர்த்தியது.
வங்கிக்கே வராதீர்கள்.
உங்களின் எல்லா வேலைகளையும் ஏடிஎம் இயந்திரம் மூலமே செய்து கொள்ளுங்கள் என்று எல்லா வங்கிகளும் சொன்னது. கேட்காமலே ஏடிஎம் கார்டு தந்துவிட்டு, புதிய தொழில்நுட்பத்துக்குப் பழக்கப்படுத்தியபின், இப்போது திடீரென ஐந்து முறைக்குமேல் எடுத்தால் கட்டணம் என்று சொல்வது வாடிக்கை யாளர்களுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும்.
சரி இனி வங்கிக்கே நேரடியாகச் சென்று பணத்தை எடுக்கலாம் எனில், அங்கும் நீங்கள் பணத்தைச் செலவழிக்கத் தான் வேண்டும். வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க, அதைப் பராமரிக்க என ஆண்டுக்கு 60 ரூபாய் தொடங்கி 500 ரூபாய் வரை செல்கிறது.
சில தனியார் வங்கிகள் 1,000 ரூபாய்கூட வசூலிக்கின்றன. (சில தனியார் வங்கி களில் மாதத்துக்கு நான்குமுறை மட்டுமே நேரடியாக வங்கிக்குச் சென்று பரிவர்த்தனை செய்ய முடியும். அதற்கு மேல் சென்றால், 90 ரூபாய் சேவைக் கட்டணம் என்ற அளவிலும், 1,000 ரூபாய்க்கு 5 ரூபாய் என்ற அளவிலும் கட்டணம் வசூலிக்கின்றன.)
எல்லாவற்றுக்கும் மேலாக, நேரத்தைச் செலவழித்துதான் வங்கிக்குச் சென்றுவர வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் இன்றும் இன்டர்நெட் தொழில்நுட்பம் பல சமயங்களில் செயலிழப்பதால், அது சரியாகும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அல்லது மீண்டுமொருநாள் வங்கிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதுமாதிரியான அலைக்கழிப்புகளுக்கு வங்கிகள் என்ன இழப்பீட்டை வாடிக்கையாளர்களுக்கு தரப்போகிறது என்று கேட்கிறார்கள் மக்கள்.தற்போது வந்திருக்கும் புதிய விதிமுறைகள்படி வங்கிகளுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றாலும், புதிய கட்டணங் களினால் ஏடிஎம் பயன்பாடு குறைந்து வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு நேரடியாக வரும்பட்சத்தில் அங்கு ஊழியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தால் மட்டுமே பணப்பட்டுவாடா எளிதில் நடக்கும்.
ஊழியர்கள் எண்ணிக்கையை உடனடி யாகப் பெருக்குவது வங்கிகளுக்கு அதிக செலவு பிடிக்கும் அம்சமாகவே இருக்கும். தவிர, அதை உடனடியாகச் செய்வதும் சாத்தியமற்றது.தவிர, ஏற்கெனவே பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துதான் பல இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை அமைத்திருக்கின்றன வங்கிகள்.
இனி இந்த இயந்திரங்களின் பயன்பாடு மிகப் பெரிய அளவில் குறையும் என்கிறபோது, இதனை மீண்டும் ஒழித்துக்கட்ட வேண்டிய கட்டாயம் வங்கிகளுக்கு ஏற்படும். ஆக, தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் மீண்டும் கற்காலத்தை நோக்கி செல்வதற்கான நடவடிக்கைகளையே ஆர்பிஐயின் இந்தப் புதிய விதிமுறைகள் வழிவகுக்கிற மாதிரி இருக்கிறது என்பதே வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
இந்த விஷயத்தில் முட்டைக்கு ஆசைப்பட்டு வாத்தினைக் கொன்ற கதையாக ஆகிவிடக் கூடாது என்பதே நம் வேண்டுகோள்.

தொலைந்து போன ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் முண்ணணி வகிப்பது சாம்சங் ஆகும்.
 
          உங்கள் விலை உயர்ந்த சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போகும்பொது உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்.. அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும் சேர்ந்து தொலைந்து போவதை பற்றி கற்பனை செய்து பார்த்ததுண்டா? இதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும். இந்த கட்டுரையில் நாங்கள் பார்க்க இருப்பது உங்கள் சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போனால் அதை எவ்வாறு கண்டு பிடிப்பது அல்லது அதை தொலைவில் இருந்து செயற்படுத்துவது.

       இதற்கு உங்கள் கையடக்க தொலைபேசி ஒரு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்னாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் புதிய அல்லது பாவணை செய்கின்ற தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும். அதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்
1. Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும்.
2. அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்குSamsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவும்.
3.இப்போது விதிமுறைகள் (Conditions Agreement) பற்றிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் I agree என்பதை சொடுக்கவும்.
அவ்வளவு தான் இப்போது உங்கள் கையடக்க தொலைபேசி தயாராகி விட்டது. இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை,காதலர்,பிள்ளைகள் பாவித்தாலோ அது இருக்கும் இடம். பயணம் செய்த பாதை, அதன் அழைப்பு விபர பட்டியல்(call Logs) மற்றும் ஏராளமான விடயங்களை Track செய்ய முடியும்.
இந்த முகவரிக்கு செல்லவும். அங்கே உங்கள் Samsung Account பயனர் பெயர் மர்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுக்கவும். நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசியில் கொடுத்த அதே தகவல்களை உட்செலுத்த வேண்டும்.
Click Here To Track Your Mobile.
அங்கே இவ்வாறனான ஒரு முகப்பு பக்கம் உங்களுக்கு தோன்றும். அங்கே உங்கள் கையடக்க தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும்.
இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான கட்டுபடுத்தும் மற்றும் Track செய்யும் வேலைகளை செய்து கொள்ளமுடியும்
1. Locate My Mobile - இதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கையடக்க தொலைபேசியின் தற்போதைய இருப்பிடம் மற்றும் இறுதி 12 மணி நேரத்தில் உங்கள் தொலைபேசி எங்கெல்லாம் பயணித்த விபரங்கல்ளை வரைபடத்தில் பார்க்கலாம்
2.Lock My Mobile- இதன் மூலம் உங்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியாதவாறு Lock செய்து கொள்ள முடியும்.
3.Ring My Mobile -உங்கள் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தால் கூட ரிங் ஆகும்.
4.Call Logs -இறுதி ஒரு வாரம் உங்கள் தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் உள்வந்த அழைப்புகளின் தகவல்களை பெறலாம்
5. Wipe My Mobile- உங்கள் செமித்து வைக்கப்பட்ட தரவுகள் மற்றும் இலக்கங்கள் என்வற்றை அழிக்க கூடிய Factory Reset / Wipe Delete என்று அழைக்கப்படும் நிரலாக்கலை செய்ய முடியும்.

குழந்தைகள் வளர்ப்பில் சில முக்கிய குறிப்புகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.
5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.
6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.
10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.
11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்

தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

 
 
பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

 

பெயர்K.R.RAMESH
கோரிக்கை எண்2014/802851/AIகோரிக்கைத் தேதி15/09/2014
முகவரி32 A3, SITHAVEERAPPA CHETTI STREET, DHARMAPURI, VIRUPAKSHIPURAM, DHARMAPURI TALUK,
DHARMAPURI - 636701.
TAMILNADU . 
கோரிக்கைபள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும்  ஆசிரியர்கள் பலரது தேர்வுநிலை வழங்கக்கோரும் கருத்துருக்கள் கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை பெறப்படவில்லை  எனும் காரணத்தால் தேர்வுநிலை வழங்கப்படாமல்  சில மாவட்டங்களில் முதன்மைக்கல்வி  அலுவலர்களால்திருப்பி அனுப்பப்படுகின்றன .      தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண் 37489/டபிள்யு 2/இ1/ 2014  நாள் 18.07.2014 கடிதத்தின் வாயிலாக    பத்தாண்டு பணிமுடித்த முதுகலையாசிரியர்  தேர்வுநிலை பெறுவதற்கு  கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது   ஆனால் தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலரால்  செயல்முறைகள் ஒ.மு எண் 4773/ஆ1/ 2014  நாள் 02.09.2014 ன் படி தற்போதும்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை இல்லாத கருத்துருக்கள்  தேர்வு நிலை வழங்கப்படாமல்  திருப்பியனுப்பப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே  மேற்காண்    தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தநா.பள்ளிக் கல்வி துணை இயக்குநரின்  கடிதத்தில் தெரிவித்துள்ளபடி  பத்தாண்டு பணிமுடித்த ஒருவர் தேர்வுநிலை பெறுவதற்கு கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை என்பதை  அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய தெளிவுரைகள் வழங்கி பத்தாண்டு பணிமுடித்த  ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுகிறேன்
கோரிக்கை வகைSERVICE MATTERS - PROMOTION, TRANSFERS,NON-PAYMEகோரிக்கை நிலவரம்Accepted
தொடர்புடைய அலுவலர்SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
பதில்ஏற்கப்பட்டது - பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு ப.க.இ ந.க.எண்.076506/W2/S1/2014 dt.13.10.2014 அன்று E.mail மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகையால் மனுதாரர் தேர்வுநிலை பெறுவதற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரை அனுக தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.74214/டபிள்யு2/14 நாள் 13.10.2014 

Tuesday, 14 October 2014

ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் குறித்த சுற்றறிக்கை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல் ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் குறித்த சுற்றறிக்கை







           ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமை, ஒவ்வொரு மாதமும், முறையாக நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது.



           அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாதத்தின் முதல் சனிக்கிழமை, மாவட்ட கல்வி அலுவலர் நிலையிலும், இரண்டாவது சனிக்கிழமை, முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலும், ஆசிரியர் குறை தீர்ப்பு முகாமை நடத்த வேண்டும். இதில், ஆசிரியர்கள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.


முதல் இரு முகாம்களிலும் தீர்க்க முடியாத பிரச்னையை, மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை, இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் முகாமிற்கு, மாவட்ட அதிகாரிகள் பரிந்துரைக்கலாம். ஆசிரியர்கள் எந்தக் காரணங்களுக்காகவும், வேலை நேரத்தில், கல்வித்துறை அலுவலகங்களுக்கு வரக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இயக்குனரகம் தெரிவித்திருப்பதற்கு மாறாக, தினமும் ஏராளமான ஆசிரியர்கள், பல்வேறு பிரச்னைகளுக்காக, இயக்குனர் அலுவலகங்களில் முகாமிடுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.                                   

வயிற்றுப்பசிக்கு அப்புறம்தான் அறிவுப்பசிக்கு தீனி: வழிகாட்டுகிறது கேரள பள்ளி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்வயிற்றுப்பசிக்கு அப்புறம்தான் அறிவுப்பசிக்கு தீனி: வழிகாட்டுகிறது கேரள பள்ளி






         பள்ளிக்கு வரும் குழந்தைகளின் அறிவுப்பசியை மட்டுமல்லாமல், வயிற்றுப்பசியையும் தீர்த்து, கேரள அரசின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒரு அரசுப்பள்ளி.


     பெரும்பாலான பள்ளிகளில் காலை வேளையில் அவசரமாக புறப்பட்டு வரும் குழந்தைகள், சரியாக சாப்பிடுவதில்லை. ஒருசிலவீடுகளில் பெற்றோர் அதிகாலையில் பணிக்கு புறப்பட்டுச் சென்று விடுவதாலும் குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. வயிற்றுப் பசியுடன் வகுப்பில் அமர்ந்திருப்பதால், படிப்பில் கவனம் செல்வதில்லை.பிற பள்ளி நிர்வாகங்களைப் போல், கேரள-தமிழக எல்லையில் உள்ள கொழிஞ்சாம்பாறை அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் இதை வேடிக்கை பார்க்கவில்லை. முதலில் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கும் முயற்சியில் இறங்கினர்.திட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, கேரள அரசின் கவனத்தை ஈர்த்தது.இதையடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டத்தை பின்பற்ற நடவடிக்கை அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


      இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் கலிலுார் ரஹ்மான் கூறியதாவது:உடல் நலமே உள்ளத்தின் நலன். ஆகவே, முதலில் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கி விட்டு, பின்னர் அறிவுப்பசியை போக்க முடிவு செய்தோம். இப்பள்ளியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு வாரம் ஒருமுறை பொதுமக்கள், நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடை மூலம், தரமான காலை உணவு தயாரித்து வழங்குகிறோம். தயாரிக்க எளிது என்பதால், பெரும்பாலும் சூடான இட்லி, சட்னி, சாம்பார் வழங்குகிறோம்.காலை உணவை வயிறார சாப்பிட்ட பின், மாணவர்கள் சிறப்பாக படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். எங்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும், இத்திட்டம் பெரிதும் பயனளிக்கிறது. இத்திட்டத்தை சிறப்பான முறையில் பெற்றோர்- ஆசிரியர் சங்கம் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நடத்தி வருகிறோம். தேவையான, சமையல் பாத்திரங்கள், பொருட்கள் அனைத்தும், நன்கொடை மூலமே பெறப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

          இப்பள்ளிக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த பெற்றோர்-ஆசிரியர் சங்கத்துக்கான மாநில அரசு விருது கிடைத்துள்ளது. 2010ல் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் அப்துல் கலீலுார் ரஹ்மானின் அயராத உழைப்பால், பாராட்டு மழையில் நனைகிறது இப்பள்ளி.

Friday, 10 October 2014

Flash News:DA 7% Announced

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களுக்கான 7% அகவிலைப் படியினை அறிவித்தது தமிழக அரசு

அவமதிப்பு வழக்கில் கல்வி அலுவலர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் : ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         கோர்ட் அவமதிப்பு வழக்கில்கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலர்,குழித்துறை கல்வி மாவட்ட அலுவலருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துமதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது
        கன்னியாகுமரி வாவரை செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலை பள்ளிதாளாளர்தாக்கல் செய்த மனுபள்ளியில் துப்புரவு பணி யாளராக சுசிலால்பணிபுரிந்தார்அவரது நியமனத்தை குழித்துறை கல்வி மாவட்ட அலுவலர் ரத்துசெய்தார்இதை எதிர்த்துஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம்தனி நீதிபதி,'சுசிலாலுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்பணப் பலன்களை அரசு நிதிஉதவி மூலம் வழங்க வேண்டும்,' என 2007 ல் உத்தரவிட்டார்இதை எதிர்த்துதாக்கலான அரசின் மேல்முறையீட்டு மனுவைஐகோர்ட் 2009 ல் தள்ளுபடிசெய்ததுசுசிலாலுக்கு வேலை வழங்கவில்லைகோர்ட் உத்தரவைநிறைவேற்றாததால் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்ராதாகிருஷ்ணன்குழித்துறை கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்புராஜேந்திரன்ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பின் கீழ்நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிடி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜரானார்.

          நீதிபதிகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவதில்அரசுத் தரப்பு இழுத்தடிப்பதுநன்றாக தெரிகிறதுஅரசு வக்கீல்,' இது தொடர்பாக சீராய்வு மனு நிலுவையில்உள்ளதுஇருந்தபோதிலும்ஏற்கனவே ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவைநிறைவேற்றத் தயார்,' என்றார்காலம் தாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில்,சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்அதிகாரிகள் திருந்த வாய்ப்பு அளிக்கிறேன்.கல்வி அதிகாரிகள் ராதா கிருஷ்ணன்ராஜேந்திரனுக்கு தலா 15 ஆயிரம் வீதம் 30ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்தொகையை மனுதாரருக்கு வழங்கவேண்டும்கோர்ட் உத்தரவை நிறைவேற்றியது பற்றி, 2 வாரத்தில் அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

அரசு பள்ளிகளில் - ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு..

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


             பள்ளி அலுவலகம், வகுப்பறைகளில் ஒட்டடை அடித்து, தூய்மையாகவைத்திருக்க வேண்டும்,” என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
              பிரதமர் நரேந்திர மோடி, அக்.2ல் 'கிளீன் இந்தியா' திட்டத்தை துவக்கி வைத்தார். மோடியின் இத்திட்டம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் என, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 'தூய்மை பள்ளி' திட்டம்: இதையடுத்து,தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகளில், அக்.,9 முதல் 2015 ஆக.,15 வரை 'தூய்மை பள்ளி' திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். அதில், பள்ளி வளாகம், விளையாட்டு மைதானத்தை சுத்தமாக வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் முட்புதர்களை அகற்ற வேண்டும்.

                   பள்ளி குடிநீர் தொட்டியில் 'குளோரினேஷன்' செய்ய வேண்டும்.சத்துணவு மையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடல் வேண்டும்.தலைமை ஆசிரியர் அறை, வகுப்பறை, நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம் ஆகியவற்றில் ஒட்டடை அடித்து தூய்மையாக வைக்க வேண்டும். பள்ளி வளாக கதவுகள், ஜன்னல்கள், பேன், நாற்காலிகள், மாணவர் இருக்கைகள், அலமாரி, கம்ப்யூட்டர், டிவி.,க்கள், லேப்-டாப் போன்றவற்றில் படிகிற தூசிகளைஅன்றாடம் துடைத்து, தூய்மையாக வைத்திடல் வேண்டும். பள்ளி கட்டடங்களைபழுதுபார்த்து, வெள்ளை அடிக்கவேண்டும். விழிப்புணர்வு: மாணவர்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு தர வேண்டும். தினமும் நடக்கும் காலை வழிபாட்டில் மகாத்மா காந்தியின் சுத்தம், சுகாதாரம் சார்ந்த கூற்றுக்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவியம், தனிநடிப்பு போட்டிகள் நடத்தி, 'தூய்மையான பள்ளி' என, அறிய செய்தல் வேண்டும். மேலும், தினமும் மாணவர்கள் பல் துலக்குதல், குளித்தல், நகம் வெட்டுதல், சுத்தமான உடை அணிதல், சாப்பிடுவதற்கு முன் சோப்பால் கை கழுவுதல் குறித்து பயிற்சி அளிக்கவேண்டும். இது போன்ற செயல்பாடுகள் மூலம், அந்தந்த பள்ளிகளை, 'தூய்மை பள்ளி'களாக வைத்திருக்கவேண்டும், என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வரி செலுத்துவோர் ரேஷன் பொருட்கள் பெற...தடை?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


                  வருமான வரி செலுத்துவோரையும், அரசு உயர் அதிகாரிகளையும், பொது வினியோக திட்ட வரம்பிலிருந்து அகற்றுவது குறித்தும், அவர்கள் ரேஷன் பொருட்கள் பெற தடை விதிப்பது குறித்தும்,
மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
                    இந்த திட்டத்தை அமல்படுத்த முற்படும்படி, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு, இது தொடர்பாக மாநில அரசுகளுடன் விவாதிக்கும்படியும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை கேட்டுக் கொண்டுள்ளது.

              அதேநேரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்ட, உணவு பாதுகாப்பு திட்டத்தை தொடரவும் தீர்மானித்துள்ளது.இதுதொடர்பாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மத்திய உணவு அமைச்சர் பஸ்வான் கூறியதாவது:பொது வினியோக திட்டத்தின் கீழ், பயன் பெறக்கூடிய ஏழைகள் மற்றும் உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய ஏழைகள் எத்தனை பேர் என்பதை கண்டறிவது, கடினமான பணி. அதேநேரத்தில், வரி செலுத்துவோரையும், அரசு அதிகாரிகளையும் கண்டறிவது எளிது. அதனால், இவர்களை பொது வினியோக திட்ட வரம்பில் இருந்து நீக்குவதும், அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு தடை விதிப்பதும் எளிதானது.மத்திய பிரதேச மாநிலத்தில், பிரிவு - 1 மற்றும் பிரிவு - 2 அதிகாரிகளும், வருமான வரி செலுத்துவோரும், பொதுவினியோக திட்ட வரம்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

             இந்த முறையை, மற்ற மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளோம். இது தொடர்பாக, விரைவில் மாநில அரசுகளுடன் பேச்சு நடத்த உள்ளேன்.பொது வினியோக திட்டம் முறையாக செயல்படுவதில்லை என, ஏராளமான புகார்கள் வந்துள்ளன. மேலும், பொது வினியோக திட்டத்தின் பலன்கள், உண்மையான ஏழைகளை சென்றடைவதில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் தான், வருமான வரி செலுத்துவோரையும், அரசு உயர் அதிகாரிகளையும், பொது வினியோக திட்ட வரம்பிலிருந்து நீக்க பரிசீலிக்கப்படுகிறது.

               முந்தைய அரசின் உணவு பாதுகாப்புத் திட்டம் தொடரும். அந்த திட்டம் முடக்கப்படாது. புதிதாக ஒரு திட்டம் அமல்படுத்தப்படும் வரை, பழைய திட்டத்தை முடக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. முந்தைய மத்திய அரசு அமல்படுத்திய திட்டங்களை, தற்போதைய அரசு தொடர விரும்பவில்லை எனக் கூறுவது தவறானது.உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த, ஏற்கனவே வழங்கப்பட்ட மூன்று மாத அவகாசம் முடிந்து விட்டது.

              அதனால், மாநிலங்களுக்கு மீண்டும் ஒரு முறை அவகாசம் வழங்கப்படும்.அத்துடன், உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகள் பட்டியலில் இருந்து, வருமான வரி செலுத்துவோரையும், அரசில் பணியாற்றும் பிரிவு - 1 மற்றும் பிரிவு - 2 அதிகாரிகளையும் நீக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பஸ்வான் கூறினார்.

                 உணவு மானிய செலவு கூடும்: lஉணவு பாதுகாப்புச் சட்டத்தை, இதுவரை, 11 மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. அதிலும், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா என, ஐந்து மாநிலங்கள் மட்டுமே, முழுமையாக அமல்படுத்தி உள்ளன.

                l25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இதை இன்னும் அமல்படுத்த வேண்டி உள்ளது.lபார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட உணவு பாதுகாப்புச் சட்டப்படி, தகுதி உடைய அனைவரும், 5 கிலோ அரிசி மற்றும் ௩ கிலோ கோதுமையை, 2 ரூபாய் விலையில் பெற்றுக் கொள்ளலாம்.lஅதேநேரத்தில், 'அந்த்யோதயா அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ், ஏழைகளில் ஏழைகளாக உள்ள குடும்பம் ஒன்றுக்கு, மாதம் ஒன்றுக்கு, 35 கிலோ அரிசி வழங்கப்படுவதும் தொடரும். அதில், எந்த மாற்றமும் இருக்காது.

                   lஉணவு பாதுகாப்புச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தால், மத்திய அரசின் உணவு மானியம், தற்போதுள்ள, 25 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 1.31 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.lஅத்துடன், வருடாந்திர உணவு தானிய தேவையும், தற்போதுள்ள, 5.5 கோடி டன்னிலிருந்து, 6.8 கோடி டன்னாக உயரும்.

              மாநிலங்களுக்கு ஆறு மாதம் அவகாசம்:உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள், அதை அமல்படுத்த மேலும், ஆறு மாதம் அவகாசம் வழங்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

                    கடந்த, 2013 ஜூலையில், உணவு பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அதை இந்த ஆண்டு ஜூலைக்குள், மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. பின், இந்தக் காலக்கெடு, அக்டோபர், 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

              ஆனாலும், நாட்டில் உள்ள மக்களில், மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்க வகை செய்யும் இந்தச் சட்டத்தை அமல்படுத்த, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை, பல மாநிலங்கள் செய்யவில்லை என்பதால், மேலும், ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த தகவலை, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று தெரிவித்தார்.

கல்விச் சுற்றுலா செல்பவர்கள் மாவட்ட நீதிபதிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


            மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்லும் பள்ளிகள் அது தொடர்பாக எழுத்துப் பூர்வமான தகவலை மாவட்ட நீதிபதிக்கு தெரியப்படுத்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் மூலம் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கல்வித்துறை விதித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்

              பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுலா செல்லும் இடங்கள் பாடத்திட்டத்திற்கு தொடர்புடையதாக இருப்பதுடன், அந்த சுற்றுலாவால் மாணவர்களுக்கு பயன் கிடைக்க வேண்டும். மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எழுத்துப்பூர்வமாக அனுமதி கடிதம் கொடுத்தால் மட்டுமே அந்த மாணவரை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் சுற்றுலாவின் பொழுது சட்ட, திட்டங்களுக்கு கட்டு்ப்படுவதாக மாணவரும், அவர் தம் பெற்றோரும் கடிதம் வழங்க வேண்டும். பள்ளியின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர் சுற்றுலா செல்வது தொடர்பாக உரிய அனுமதியை உயர் அதிகாரிகளிடம் பெற வேண்டும்.
 
         அணைக்கட்டுப் பகுதிகள், மின் உற்பத்தித் தளங்கள், கடல் பகுதிகள், பொது இடங்களுக்குச் சுற்றுலா செல்ல வேண்டியிருந்தால் மாவட்ட நீதிபதி அல்லது அதற்கு இணையான அதிகாரிகளுக்கு எழுத்துப் பூர்வமான தகவலை கண்டிப்பாக அனுப்ப வேண்டும். சுற்றுலாவை மூத்த ஆசிரியர் வழிநடத்துவதுடன், மாணவிகள் சுற்றுலாவில் பங்கு கொண்டால் மூத்த பெண் ஆசிரியைகள் வழிநடத்த வேண்டும்.
 
           மேலும், சுற்றுலாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவரின் முழு விபரமும்( பெற்றோர் விபரம், முகவரி, கைபேசி எண் உள்ளிட்டவை) வழிநடத்தும் ஆசிரியர்கள் வைத்திருக்க வேண்டும். சுற்றுலாவின் பொழுது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதை சமாளிக்கும் பொறுப்பையும் பள்ளியின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர் ஏற்கவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில்

கூறப்பட்டுள்ளது.

Education News

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
Weekly Newsletter
October 8, 2014
Free Webinar: October 30
Top 10 Ways to Prepare Your Children for Kindergarten

Join us for our interactive webinar and discover the methods and techniques from the award-winning Get Set for School Pre-K curriculum that provides children with foundations for future academic success.

Register now →
 
 
Daily editing builds students' skills!

With Every-Day Edit exercises, challenge students to find and fix 10 errors in spelling, capitalization, punctuation or grammar.

Details matter. Can you find all the errors?
Autumn Fun
White House
Pablo Picasso

 

Lesson Planning

Ebola Outbreak: Student Discussion Guide
Use this useful guide and suggested resource to enhance your lesson plan.


Lesson Plan Booster: How Can Students Help a Bullied Peer?
This grade 6-12 discussion considers the impact of bullying and teaches ways to help mistreated students.


Are Students Getting Enough Feedback? Six Questions Teachers Should Ask
Reporting on standardized test data isn't the only way to provide students with feedback. Check out these tips.

Search for more lesson plans and mini-lessons by subject
 and explore our recently added lessons.

Professional Development

Report Card Comments
Suggestions for comments to help when looking for just the right phrase.


Professional Development Should Include Real Life Experiences
Choosing complex, age-appropriate texts in professional development lectures and simulations will help teachers discover what really works best in the classroom.


Teaching Study Skills
During the meeting of one school's "Breakfast Club," students share homemade flash cards, practice test questions, matching games, and more.
Don’t miss our Prof. Dev. Columns and Classroom Management Tips.

Early Childhood

Make a Shape-o-Lantern
Children reinforce learning about shapes with this cute craft.

Halloween Coloring Sheet
Kids will have fun with this spooky activity.


Fire Safety: Get Low and Go
Teach children the importance of crawling low to the floor when trying to exit through smoke.


See more Early Childhood content here or search for content that meets your needs.

Technology

13 Ways to Use Pinterest in the Classroom
Get pinning and discover great solutions to improve your room.

Technology Firms Pledge to Protect Student Data Microsoft and 13 other companies have promised not to sell student information or behaviorally target advertising.

Tech Experts Provide Four Questions for Teachers Trying New Tech Tools
Tech options should be evaluated closely before classroom use.

 

Administrators

Gallup Survey Shows Most Principals Support Common Core Standards
73 percent of superintendents believe that the Common Core Standards are just about right for most students.

Principal Encourages Teachers to Work Together to Differentiate Instruction
Turn to special education teachers for guidance in how to reach students of varying levels.


Principal Offers Six Meetings That Work for Administrators
It's time to have meetings where things get done.


Browse administrator columns in our archive.

Education News

Special Feature: Educator Deals and Freebies
This week’s finds include an anti-bullying pin and poster, a family reading kit and great inference lesson plan materials.   

School Counselors Have Enormous Impact on Students, Study Finds
The presence of a counselor reduces incidences of disruptive behavior.


First-Year Teachers Share Why They Teach
These recent graduates can't think of anything they'd rather do than teach and they share their passion with others.

American Historical Association Sends Support Letter to Colorado Students
The AHA clarified the role of the AP History teacher and lent their support to protesting students.

Could You Be Our Next Teacher of the Day?

Share your successes in the classroom, plus a few interesting facts that make you unique. Click here to submit yourself for consideration, and be sure to check out all of our honorees!Every month, Teachers of the Day from that month are entered in a prize drawing.

The winning Teacher of the Month receives a $100 school-supply gift card.

At the end of the calendar year, one lucky Teacher of the Year wins a $250 school-supply gift card.

 

The EdWorld Exchange

Find great lesson plans, worksheets, templates, teaching guides and more!



School Funding Center

Need funding for your school? Find grant money fast with the most comprehensive grant database available. Check out our FREE Trial today!


Check out the School Funding Center Blog for grant writing tips , advice and current Grant Opportunities.


SchoolNotes

On this free platform, post homework, create and share flashcards, keep a calendar of events and upload documents, images and URLs. Students and parents receive notification when you update your SchoolNotespage.


Stay Connected! Share, Pin and Tweet

 Send EducationWorld your story ideas and bylined articles. Follow us on Facebookand Twitter.

Look for our Pinterest boards.