தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
தமிழக அரசு கடனில் சிக்கித் தவிப்பதாக தேமுதிக தலைவர்விஜய்காந்த் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக திங்கள்கிழமைஅவர் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக அரசு 2011-இல் பதவி ஏற்றபோது, அரசுக்கு ரூ.1லட்சம் கோடி கடன் இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் அது ரூ. 2.11லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அரசுப் போக்குவரத்துத்துறையிலும், மின் வாரியத்திலும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமானகடன் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்தமாக ரூ.4 லட்சம் கோடிக்கும் மேல் கடனில் தமிழக அரசுசிக்கித் தவிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக சுமார் ரூ.12 ஆயிரம்கோடி பணத்தை மத்திய அரசின் ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்றுவளர்ச்சி ஆணையத்திடம் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என்றகுற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்ஓய்வு பெறும்போது, தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா என்றுபலர் சந்தேகப்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment