Monday, 21 September 2015

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு வழங்குதல் குறித்து இணை இயக்குநர் அறிவுரை!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

Director's Proceedings

Aided School Promotion Regarding Instructions / DSE JD - Click Here

அக்.8ல் பள்ளிகளை மூடி போராட்டம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


           பங்களிப்பு பென்ஷன் திட்டம் ரத்து, மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 8ல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும்,”என சிவகங்கையில் உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 


            முதல்வர் ஜெ., கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஆட்சிக்கு வந்தவுடன் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன் என்றார்.இன்று வரை ரத்தாகவில்லை .மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கான போக்குவரத்து, கல்வி, வீட்டு வாடகை படிகளை மத்திய அரசு போல் வழங்க வேண்டும். 2004ல் பகுதி நேரஆசிரியராக 55 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.அவர்களை 2006ல் அரசு பணிவரன்முறை செய்தது. ஆனால் பணி, பணப்பலன்கள் இன்று வரை கிடைக்கவில்லை.

கல்வித்துறையில்ஒப்பந்த அடிப்படையில் நியமித்த ஆசிரியரை பணிவரன் முறை செய்ய வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கையை முன்வைத்து, முதல்வரின் கவனத்தைஈர்க்கும் வகையில்,அக்டோபர் 8ம் தேதி தமிழகம் முழுவதும்3 லட்சம் ஆசிரியர்கள் பள்ளிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதற்கு பின்னரும் அரசு செவி சாய்க்காவிடில், தொடர் போராட்டம் நடக்கும், என்றார்.சங்க மாநில செயலாளர் சேதுசெல்வம், மாவட்ட செயலாளர் இளங்கோ உடனிருந்தனர்.

பாடம் நடத்த ஆசிரியருக்கு என்ன மனநிலை வேண்டும்?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


        வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியர்கள் புன்னகையுடன் மாணவர்களைப் பார்த்து, தங்களுக்குள் ஒரு சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்:

‘என் முன்னே உள்ள இவர்கள் யார்? நான் இங்கே செய்ய வேண்டியது என்ன?’

அவ்வாறு கேட்டுக் கொண்டால் அவர்களுக்குள்ளிருந்து ஒரு பதில் கிடைக்கும்:
‘சமுதாயத்தின் பல நிலைகளிலிருந்து வந்துள்ள இந்த மாணவர்கள் பல நூற்றாண்டுகளாக அறிவைத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பல நூற்றாண்டுகளாகக் குறிப்பிட்ட ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த கல்வியை நாடி இவர்கள் வெகு தூரத்திலிருந்து வந்துள்ளார்கள். நான் இங்கே இவர்களுக்குச் சிறந்த அறிவையும் ஊக்கத்தையும் அளிப்பதற்காக உள்ளேன்.’

ஆசிரியர்களே! இந்த மனப்பான்மையுடன் நீங்கள் கற்றுத் தரும்போது உங்களது ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களை ஊக்குவித்துச் சிறப்பாகச் செயலாற்றத் தூண்டும். அப்போது நீங்கள் சம்பளம் வாங்கும் வெறும் தொழிலாளியாக, தனிமனிதனாக இல்லாமல் உண்மையில் சிறந்த ஆசிரியராக – சிறந்த குடிமகனாக – முழு மனிதனாக உயர்வீர்கள்.

தனிமனிதன்- முழுமனிதன்
நீங்கள் வளர்ச்சியடைய இரண்டு அம்சங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவை: தனிமனிதன், முழுமனிதன்.
தனிமனிதனாக நீங்கள், ஆசைகள், விருப்பு‚வெறுப்புகள், லட்சியங்கள் மற்றும் பரம்பரைப் பண்புகள் ஆகியவற்றின் வரையறைக்கு உட்பட்டவர்களாக உள்ளீர்கள்.
ஆனால் முழுமனிதனாக உயர்ந்தவுடன் பரந்து, விரிந்து பிறரது வாழ்க்கையிலும் நுழைந்து, இயைந்து வாழ ஆரம்பிக்கிறீர்கள். இது தனிமனிதனுக்கும் முழுமனிதனுக்கும் உள்ள வேறுபாடு. முழுமனிதன் என்ற வார்த்தை தனிமனிதன் அல்லது தனித்துவம் என்பதைவிட அதிக பொருள் பொதிந்தது.


மனிதநல ஆர்வலரான ஆங்கில அறிஞர் பெர்ட்ரன்ட் ரஸல் கூறுவார்: ‘தனிமனிதர்கள் பில்லியர்டு பந்துகளைப் போன்றவர்கள். தனிமனிதன் பிறருடன் இயைந்து வாழ முடியாமல் அவர்களுடன் அடிக்கடி மோதிக் கொள்கிறான்’.

தனிமனித நிலையில் ஆசிரியர்கள் பிற ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் மோதிக் கொள்கின்றனர். ஆனால் முழுமனிதனாக மாறியதும் நாம் மற்றவர்களின் உள்ளங்களில் நுழையும் திறமையைப் பெற்றுவிடுகிறோம். அவர்களும் நம் உள்ளங்களில் இடம் பிடிக்கின்றனர். அப்போது பிற ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் இணைந்து ஒரே குழுவாக வாழும் பெரும் திறமையைப் பெறுகிறோம்.
இப்படி தனிமனிதனிலிருந்து முழுமனிதனாக மாறும்போது நாம் சக்தி மிக்கவர்கள் ஆவோம். இது ஓர் ஆன்மிக வளர்ச்சி.

தனிமனிதனாக நீங்கள் புலன்களால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். ஆனால் சமுதாயத்தில் உணர்வுபூர்வமாகப் பங்கெடுக்கும்போது அந்தக் கட்டுப்பாட்டைக் கடந்து விடுகிறீர்கள்.

அப்போது நீங்கள் முழு மனிதன் ஆகிறீர்கள். அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் உரிய ஆற்றல் உங்களுக்குள்ளே தோன்றிவிடுகிறது. தனிமனிதத் தன்மை என்பது புலன்களால் கட்டுப்படுத்தப்பட்ட அகங்காரம். அக்கட்டுப்பாட்டை அகங்காரம் கடக்கும்போது முழுமனிதத் தன்மையாக உருவெடுக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர் இதனைப் ‘பக்குவப்படாத அகங்காரம்’ மற்றும் ‘பக்குவப்பட்ட அகங்காரம்’ என்பார்.

வேதாந்தத்தின்படி, தனித்துவமானது ஆன்மிகத்தின் முதல் படி. அது சமுதாயத்தில் அடக்கி ஆளப்பட்ட மனிதனைத் தனித்தன்மை உடையவனாக, சுதந்திரமும் மேன்மையும் மிக்கவனாகச் செய்கிறது. இது இயல்பான ஒன்று.

எந்த விலங்கும் இத்தகைய தனித்தன்மையைப் பெறுவதில்லை. ஏனெனில் அவற்றுக்கு அகங்காரமோ, தான் என்ற உணர்வோ இருப்பதில்லை. இந்தத் தனிமனித உணர்வு என்பது குழந்தைகளிடம் இரண்டு அல்லது இரண்டரை வயதில் அகங்கார உணர்வாக எழ ஆரம்பிக்கும்போது தோன்றுகிறது.
ஐந்து வயது வரை இந்த அகங்கார உணர்வை அல்லது தனித்துவத்தை மேலும் பலப்படுத்துவதையே குழந்தை கற்றுக் கொள்கிறது. அதன் பின் பிறருக்கு உதவுவதன் மூலமும் தன் வாழ்க்கை ஓட்டத்தில் பிறருக்கு உரிய இடத்தை அளிப்பதன் மூலமும் முழு மனிதனாக மாற அந்தக் குழந்தைக்குப் பயிற்சி தரப்பட வேண்டும்.

இல்லையேல் அந்தக் குழந்தை பிறருடன் இனிமையாக இயைந்து வாழ முடியாமல் பிரச்னைகளும் சிக்கல்களும் மிக்க தனிமனிதனாக வளர்ந்துவிடும்.

சம்ஸ்கிருதத்தில் தனித்துவம் என்பது ‘வ்யக்தித்வம்’என்றும், முழு மனிதத்தன்மை என்பது ‘விகஸித வ்யக்தித்வம்’ என்றும் கூறப்படும்.
குழந்தையானது முதலில் வ்யக்தி, பின்பு அதுவே விகஸித வ்யக்தியாக மாற வேண்டும். சமுதாய வாழ்க்கையைப் பார்க்கும்போது நாம் காண்பது இதுவே.

சரியாக வளராத, ஆனால் உரிமைகளைக் கொண்ட, பின்தங்கிய சமுதாயத்திலிருந்து வரும் பிள்ளைகள் பொதுவாக இத்தனித்துவத்தைக் கொண்டிருப்பதில்லை. அந்தக் குழந்தை ஜாதி, பிரிவு என்றவாறு ஏதாவது ஒரு சமூகத்தின் அங்கமாக மட்டும் இருந்திருக்கும்.

ஆனால் சில வாரங்கள் கல்வி கற்க ஆரம்பித்ததும் அதனிடம் ஒரு தனித்துவ உணர்வு வளரும். கல்வியின் முதல்படி இத்தகைய தனித்துவத் தன்மையின் பெருமையையும் மதிப்பையும் மாணவர்களை உணரச் செய்வதே ஆகும் என வேதாந்தம் கூறும்.

இந்தப் பெரும் காரியத்தை நாடு தழுவிய அளவில் செய்ய வேண்டியதே நம் முதல் கடமை. பல நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான நம் மக்கள் தங்கள் தனித்துவத்தை மறந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். கல்வியின் மூலம் இப்போது தங்களுடைய தனித்துவத்தை உணர்கிறார்கள்.

வேதாந்தத்தின்படி, கல்வியின் மூலம் தனித்துவத்தன்மையை வளர்ப்பதை ஆன்மிக வளர்ச்சி என்கிறோம். இந்த முதல்படியின்றி, அதன் அடுத்தபடியான முழுமனிதத் தன்மையை வளர்ப்பது தீங்கு விளைவிக்கும்.
ஆனால் அதே சமயம் முதல் படியை அதாவது தனித்துவத் தன்மையை மட்டும் வளர்த்தால் சுயநலமுள்ள, கடினமான, பிறருடன் இயைந்து வேலை செய்ய முடியாத தனிமனிதர்களையே உருவாக்குவோம்.

இதுதான் இந்தியாவில் இப்போது நடந்து வருகிறது. நாம் எல்லோரும் தனித்துவம் வாய்ந்தவர்கள், சுதந்திர உரிமை பெற்றவர்கள். இந்த உரிமையை நாம் கேட்டு வாங்கிக் கொள்கிறோம். நமக்குத் தனித்துவம் வாய்ந்தவர்களாகும் சுதந்திரம் உள்ளது.

ஆனால் நம்மிடம் சமுதாயப் பொறுப்புணர்வு இல்லை. இதுவே உள்ளத்தில் வளர்ச்சி பெறாத சுதந்திரத்தின் அறிகுறி. எந்த ஒரு சமுதாயத்திலும் தனித்துவம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் போனால் அது நாட்டின் நலத்திற்கு ஆபத்தாக முடியும்.
எனவே தனிமனிதனை முழுமனிதனாக்கக்கூடியதைக் கல்வியில் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தனிமனித சுதந்திரம் உள்ளத்தின் வளர்ச்சியோடு சமுதாயப் பொறுப்புணர்வையும் பெற்றுவிடும்.
இரண்டாவது படியாவது, ஆன்மிக முன்னேற்றத்தால் நடைபெறும் ஓர் உயர்ந்த மாற்றம்.

அதன்பின் நாடு லட்சக்கணக்கான, சுதந்திரமான, பொறுப்புணர்வு கொண்ட, படித்த, அறிஞர்களான குடிமக்களைப் பெற்றுவிடும். அப்போது நாடு தனது லட்சியத்தை நோக்கி வீறுநடைபோடும். இந்த லட்சிய வீறுநடையானது ஒருங்கிணைந்து ஒரே குழுவாக வேலை செய்வதால்தான் முடிகிறது.
தனிமனிதன் இந்த ஆற்றலைக் கொண்டிருப்பதில்லை. அவன் முழு மனிதனாகும்போது அந்த ஆற்றல் தோன்றுகிறது. தனிமனிதனால் பொறாமையின்றி மற்றவர்களுடன் சண்டையிடாமல் இருக்க முடிவதில்லை. ஆனால் முழு மனிதன் பிறருடன் ஒருங்கிணைந்து குழுவாக வாழும் ஆற்றலைப் பெறுகிறான்.

நாம் மனிதர்களை ஒன்றிணைக்கலாம்; ஆனால் தனித்துவம் உள்ளவர்களை ஒன்றிணைப்பது இயலாத காரியம். ஏனெனில் முழு மனிதர்களிடம் அந்த இணைப்பு அவர்கள் உள்ளத்திலிருந்து தோன்றுகிறது. ஆனால் தனித்துவம் மிக்கவர்களிடம் இந்த ஒருங்கிணைப்பு வெளியிலிருந்து நிர்ப்பந்திக்கப்படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் நம்மிடம் ஒற்றுமை உணர்வோ, ஒன்றாகப் பணி புரியும் திறனோ இல்லை. ஏனெனில் நாம் பொதுவாக முழு மனிதர்களாக இல்லாமல் தனித்துவம் வாய்ந்தவர்களாகவே இருக்கிறோம்.
இந்த நிலை மாறவும், மாற்றிக் கொள்ளவும் முயன்று நாம் சிறந்த ஆசிரியர்களாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

7-வது ஊதியக்குழுவில்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

7-வது ஊதியக்குழுவில் - 33 வருடம் பணி அல்லது 60 வயது முதிர்வு இதில் எது முதலில் வந்தாலும் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு முடிவு - இந்த முடிவுக்கு ஊழியர் சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு.

7th Central Pay Commission – Regularisation of Retirement Age?
(completing 33 years of service or at the age of 60, whichever comes first)
 
         One more recommendation which is said to be an important one, is the regularisation of retirement age for the Central Government Employees. The Commission may recommend that an employee should retire after completing 33 years of service or at the age of 60 whichever comes first. For instance,  if an employee joins a central government establishment at the age of 23, his retirement age will be 56. If this recommendation is true, it will definitely create panic among the employees and it will not be a wise decision by the pay commission. All Federations and Associations will strongly oppose these type of recommendations…

மின் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வருவது ஏன்?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

 மின்சார வாரிய உயர் அதிகாரிகள் விளக்கம்

டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்ட மின்இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வருவது ஏன்? என்பதற்கு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

டிஜிட்டல் மீட்டர்

தமிழகத்தில் உள்ள மின்சார இணைப்புகளை பெற்றுள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கிடுவதற்காக பொருத்தப்பட்டுள்ள பழைய மின்மீட்டர்கள் அனைத்தையும் மாற்றிவிட்டு புதிதாக டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணியில் தமிழ்நாடு மின்சார வாரியம் இறங்கியுள்ளது. 

இவ்வாறு டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு மின்சார கட்டணம் கூடுதலாக வருவதாக பொதுமக்கள் மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்து வருகின்றனர். பெரும்பாலான வீடுகளுக்கு மின்சார கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து மின்சார வாரிய உயர்அதிகாரிகள் தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர்கள் அளித்த பதில்கள் வருமாறு:-

துல்லியமாக மின்சாரம் கணக்கீடு

கேள்வி:- வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படுவதன் நோக்கம் என்ன?

பதில்:- மின்சார நுகர்வை துல்லியமாக கணக்கிடப்படுவதற்காகவும், பழுதான மின்சார மீட்டர்களை மாற்றுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- நவீன மயம் என்றாலும், டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு மின்சார கட்டணம் 2 மடங்கு அதிகமாக வருவதற்கு என்ன காரணம்?

பதில்:- வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மின்சாரம் துல்லியமாக கணக்கிடப்படுவதால், கட்டணமும் அதிகரிக்கிறது. முன்பெல்லாம் வீடுகளில் உள்ள சுவிட்ச் போர்டில் உள்ள இண்டிகேட்டர் மற்றும் ஜீரோ வாட்ஸ் பல்புகள், எல்.ஐ.டி. பல்புகள் போன்றவை பயன்படுத்தினால் பெரிதாக மின்சார மீட்டரில் மின்சார பயன்பாடு கணக்கிடுவதில்லை. ஆனால் தற்போது மிகவும் குறைவாக மின்சார நுகர்வு இருந்தாலும் அதனை துல்லியமாக கணக்கிடப்படுவதால் கட்டணம் அதிகமாகிறது. 

கட்டண உயர்வை தடுக்க என்ன வழி 

கேள்வி:- ஏற்கனவே மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஜிட்டல் மீட்டர் மூலம் மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறதே? இதனை தடுக்க என்னவழி?

பதில்:- வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களை முறையாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக டிவியை நிறுத்திவிட்டு, மெயின் சுவிட்சை ஆப் செய்யாமல் இருப்பது, செல்போனை ‘சார்ஜ்’ செய்துவிட்டு மெயின் சுவிட்சை ஆப் செய்யாமல் இருப்பது, இதேபோன்று மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின் போன்றவற்றை அதனுடைய சக்திக்கு மீறி பயன்படுத்துவது, கணினியை பயன்படுத்திவிட்டு சுவிட்சை ஆப் செய்யாமல் இருப்பது, இன்வெர்ட்டர் சார்ஜ் ஆன உடன் உடனடியாக சுவிட்சை ஆப் செய்யாமல் இருந்தாலும் டிஜிட்டல் மீட்டரில் மின்நுகர்வு பதிவாகிவிடுகிறது. இதனாலேயே கட்டணம் அதிகரிக்கிறது. எனவே மின்சாதனங்களை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டால், மின்சார கட்டணம் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும். 

விதிவிலக்கல்ல

கேள்வி:- டிஜிட்டல் மீட்டர் பொருத்துவதற்கு பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?

பதில்:- நவீன மயமாக்குதல் திட்டத்தின் அடிப்படையில் மின்சார வாரியம் செயல்பட்டு வருவதால் பொதுமக்களிடம் இதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. மாறாக தனியார் நிறுவன ஊழியர்களை வைத்து மின்சார மீட்டர் பொருத்தப்படுகிறது. ஒரு இணைப்பு (சிங்கிள் பேஸ்) கொண்ட மின்சார மீட்டர்கள் மாற்றுவதற்கு ரூ.10-ம், 3 இணைப்பு கொண்ட மின்சார மீட்டர்கள் மாற்றுவதற்கு ரூ.25-ம் கட்டணத்தை தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மின்சார வாரியம் வழங்குகிறது.

கேள்வி:- பழைய மீட்டர்களையே வைத்துக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அதனை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்களா?

பதில்:- அவ்வாறு அனுமதிக்கப்படுவதில்லை. இதில் எவருக்கும் விதிவிலக்கு அளிப்பதில்லை.

யார் அதிகம்பாதிக்கப்படுகிறார்கள்?

கேள்வி:- டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படுவதால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்?

பதில்:- மின்சார கட்டணம் ரூ.300 வரை செலுத்துபவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவதில்லை, மாறாக ரூ.1000 வரை பணம் கட்டுபவர்கள் தங்களுடைய கவனக்குறைவால், தேவையில்லாத இடங்களிலும் மின்சாரத்தை பயன்படுத்துவதால், அவர்களுக்கு மின்சாரத்தின் அளவு துல்லியமாக கணக்கிடப்படுவதால் கட்டணம் கூடுதலாக வருகிறது. கவனக்குறைவை போக்கிக் கொள்வது நல்லது. 

ஒரு கோடி இணைப்புகள்

கேள்வி:- தமிழகம் முழுவதும் எவ்வளவு டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன? எந்த ஊரில் அதிகம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன?

பதில்:- தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 2 கோடியே 29 லட்சம் மின்இணைப்புகளுக்கும் புதிய டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட உள்ளன. அதில் இதுவரை ஒரு கோடியே 3 லட்சம் இணைப்புகளுக்கு டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதம் உள்ள ஒரு கோடியே 26 லட்சம் மின்இணைப்புகளுக்கு டிஜிட்டல் மின்சார மீட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக 29 லட்சத்து 53 ஆயிரம் மின்சார இணைப்புகளில் 19 லட்சத்து 35 ஆயிரம் இணைப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

சென்னை முதலிடம்

கேள்வி:- தமிழகத்தில் டிஜிட்டல் மீட்டர்கள் எவ்வளவு சதவீதம் பொருத்தப்பட்டுள்ளன?

பதில்:- தமிழகத்தில் உள்ள 9 கோட்டங்களில் சென்னையில் அதிகம் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை தெற்கு 48 சதவீதம், சென்னை வடக்கு 91 சதவீதம், கோயம்புத்தூர் 40 சதவீதம், மதுரை 42 சதவீதம், ஈரோடு 44 சதவீதம், திருச்சி 38 சதவீதம், திருநெல்வேலி 35 சதவீதம், விழுப்புரம் 34 சதவீதம், வேலூர் 54 சதவீதம், 

கேள்வி:- விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படுமா?

பதில்:- விவசாய மின்இணைப்புகளுக்கான மின்மீட்டர்கள் டிஜிட்டல் மயமாக்கும் எண்ணம் தற்போது இல்லை. தொழிற்சாலைகளை பொருத்தவரையில் மின்இணைப்பு வழங்கும்போதே டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் பதில் அளித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,

வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் கூகுள் கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் திட்டம்:

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் திட்டம்: வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது நிதியமைச்சகம்

        தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இதற்கான வரைவு விதிகளை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதன்படிதங்கத்தின் எடைக்கு இணையான விலை மதிப்புள்ள பத்திரங்களை அரசு வெளியிடும். 2,5,10 கிராம்கள் அல்லது இதற்கு அதிகமான எடைக்கு இணையான விலையில் இந்த பத்திரங்கள் இருக்கும். சர்வதேச தங்கக் கடன் சந்தை நிலவரத்திற்கேற்ப இப்பத்திரங்களுக்கு வட்டி நிர்ணயிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

          எனினும் இவ்வட்டி குறைந்தது 2 சதவிகிதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஓராண்டில் அதிகபட்சம் 500 கிராம் தங்கத்துக்கு இணையான பத்திரங்களை மட்டுமே வாங்க முடியும் என்றும் அரசு கூறியுள்ளது.தங்க பத்திரத்திற்கான குறைந்த பட்ச முதலீட்டுக் காலம் 5 முதல் 7 ஆண்டுகளாக இருக்கும் என்றும் இதன் மூலம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்க அபாயத்தில் இருந்து முதலீட்டாளரை காக்க முடியும் என்றும் அரசின் வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டம்:

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

கிடைக்ககூடிய வருமானம்… முக்கியஅம்சங்கள்…. சிறப்பு பார்வை

        உங்கள் வீடுகளில் உள்ள தங்க நகைகள் கூடுதலாக வருமானத்தையும் ஈட்டித் தந்தால் எப்படியிருக்கும்.ஆம்.அப்படி ஒரு வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன.இதில் எவ்வளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.


          வீடுகளில் உள்ள தங்க நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்து அதற்கு வட்டியாக சிறிய தொகையை பெறும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வரைவு விதிகளைமத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.தங்கத்தை குறைந்தபட்சம் 30 கிராமிலிருந்து வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். டெபாசிட் செய்யப்போகும் தங்கம் bis தரச்சான்றிதழ் பெற்றதாக இருத்தல் அவசியம்.குறைந்த பட்சம் ஓராண்டு மற்றும் அதன் மடங்கில் டெபாசிட் காலம் இருக்கும். ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படஉள்ளது. தங்கத்தை டெபாசிட் செய்த 30 அல்லது 60 நாட்களில் இருந்து வட்டி கிடைக்கும். டெபாசிட்டிற்கான வட்டியை அந்தந்த வங்கிகளே தீர்மானிக்கும்.

முதிர்வின்போது டெபாசிட் செய்த அளவிற்கு ஈடான தங்கமாகவோ, அல்லது பணமாகவோ கொடுக்கப்படும்.மக்களிடம் இருந்து டெபாசிட் ஆக பெறப்படும் தங்கம் உருக்கப்பட்டு பின்னர் நகை செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படும். எனவே இத்திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தங்கம் மீண்டும் அதே வடிவில் நிச்சயம் கிடைக்காது என்பதைமக்கள் கவனிக்க வேண்டியுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடக்கும் தங்கத்தை கொண்டு வருமானம் ஈட்ட இந்த திட்டம் மிகவும் உதவும்.தங்கம் டெபாசிட் திட்டத்தில் கிடைக்கும் வருமானத்துக்கு அரசு வருமான வரி மற்றும் மூலதன வரிச் சலுகை அளிக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் வீடுகளில் 20 ஆயிரம் டன் தங்கம் பெட்டிகளுக்குள் பூட்டிக் கிடப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதை சுழற்சி முறையில் மீண்டும் சந்தைக்கு கொண்டு வருவதால் அரசுக்கு ஏராளமான அன்னியச் செலாவணி மீதமாகும். அதே சமயம் தங்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டுள்ள உள்ள தங்கத்தால் ஓரளவு வருமானமும் கிடைக்கும் என்பது மக்களுக்கு சாதகமான விஷயம்.​

Friday, 18 September 2015

இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைய களைய அரசு முயற்சி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


      இடைநிலை ஆசிரயர்களுக்கு 6வது ஊதியக்குழுவில்இழைக்கப்பட்ட அநீதிகளை களைந்து மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்ககோரி தொடக்ககல்வி இயக்குனரின்வேண்டுகோளின் படி ஊதிய முரண்பாடு பற்றி முழுமையானவிளக்கங்கள்கணக்கீடுகள் பட்டியல்கள்  தலைமை நிலைய செயலர்திரு .சாந்தகுமார் அவர்களால் தொடக்ககல்வி இயக்குனரிடம்அளிக்கப்பட்டுள்ளது
 
        இதைப்போலவே மற்ற ஆசிரியர் சங்கங்களும் பலபோராட்டங்களை அறிவித்துள்ளனஇது ஆசிரியர்கள் மத்தியில்மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுவதை உணர்ந்த அரசு இதற்கானமாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாக நம்பதகுந்த வட்டாரங்கள்தெரிவிக்கின்றன

முதல்வரின் கவனத்திற்கு இவ்விசயம் சென்றுள்ளதாகவும் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி கல்வித்துறைக்கு வாய்மொழிஉத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இது சம்பந்தமாக தமிழக ஆசிரியர்களுக்கும்மத்திய அரசுப்பள்ளிஆசிரியர்களுக்கும் இடயே உள்ள ஊதிய வேறுபாடு மற்றும்கல்வித்தகுதி மற்றும் பணி நிலைகள் குறித்து ஒப்பீடு ஆய்வைதொடக்கக்கல்வி துறை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

இது ஓரளவு இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் ஒருவிதநம்பிக்கையை ஏற்படுத்தும்முதல்வர் அவர்கள் இவ்விசயத்தில்தனிக்கவனம் செலுத்தி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியமாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர் சமுதாயம்எதிர்பார்க்கிறது.

முதல்வரின் அறிவிப்பை அனைத்து ஆரியர்களும் ஆவலோடுஎதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை

அனைத்து சத்துணவு மையங்களுக்கும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


      தமிழகத்தில் அனைத்து சத்துணவு மையங்களும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு பெற அரசு உத்தரவிட்டுள்ளது.சத்துணவு மையங்களில் விறகு அடுப்புகளால் சமையலர், உதவியாளர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுதிணறல் போன்றவை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சத்துணவு மையங்களில் 'காஸ்' இணைப்பு பெறப்பட்டு வருகிறது. 
 
         இதற்கான தொகை முதற்கட்டமாக சமூகநலத்துறை மூலம் வழங்கப்பட்டது. அதன்பின் நிறுத்தப்பட்டது. தற்போது எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் உள்ள 42,619 மையங்களில் 40 சதவீதம் மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து விடுப்பட்ட அனைத்து மையங்களிலும் இணைப்பு பெற அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு இணைப்புக்கும் ரூ.22,300 ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அடுப்பு, 'டியூப்,' மேடை அமைத்தல் போன்றவற்றிற்காக ரூ.16,400 ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான 'டெண்டர்' ஒன்றிய அளவில் விடப்பட உள்ளன. மீதத்தொகையில் 'காஸ்' இணைப்புக்கான 'டிபாசிட்' செலுத்தப்படும்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அருணாச்சலம் கூறுகையில், “திண்டுக்கல் மாவட்டத்தில் 1,351 மையங்களில் 624 ல் 'காஸ்' இணைப்பு உள்ளன. மீதமுள்ள மையங்களுக்கு விரைவில் இணைப்பு பெறப்படும்,” என்றார்.

"ஆப்பிள்" :அனைவரிடத்திலும் இனி 'ஐபோன்'

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


          பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் அமெரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்களையும், முன்னணி தொழிலதிபர்களையும் சந்திக்க உள்ளார். 
             இணையதள ஜாம்பவான கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சை மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்டோரை சந்தி்த்துப்பேச உள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய உற்பத்தி யூனிட்டை, மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கும் பொருட்டு, சிலிக்கான் வேலியில் ஆப்பிள் நிறுவன சி.இ,ஓ., டிக் குக்கையும் பிரதமர் மோடி சந்தி்த்துப் பேச உள்ளார். 
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது யூனிட்களை துவங்க முன்வந்துகொண்டிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனமும், இந்தியாவில் யூனிட்டை துவங்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் இதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.
ஆப்பிள் நிறுவனம்,இந்தியாவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடி - குக் இடையேயான சந்திப்பின் போது, இந்தியாவில், ஆப்பிள் நிறுவன ஆராய்ச்சி யூனிட் மற்றும் உற்பத்தி யூனிட் அமைப்பது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக்கை சந்திக்க இருக்கும் முதல் இந்திய ரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டால், அதன் விலை கணிசமாக குறையும். இதன்காரணமாக, பலரின் கைகளிலும், ஐபோன் இருக்கும் என்பதில் சந்தேகமுமில்லை.

கைநாட்டு கையெழுத்தாகிறது; அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         சமுதாய பிரச்னைகளுக்கு, கற்பனைத்திறனால், மாறுபட்ட கோணத்தில், பணிகளை மேற்கொண்டு, தங்கள் திறனை தேசிய அளவில் கொண்டு செல்ல, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.அரசு சார்ந்த மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பலவற்றின் சார்பில், பள்ளி மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்ப்பதற்கும், புதிய சிந்தனைகளை துாண்டும் விதமாகபள்ளி மாணவர்களுக்குபல்வேறு போட்டிகளை நடத்துகிறது. 


          இவ்வாறு நடத்தப்படும் போட்டிகள் குறித்து பெரும்பான்மையான அரசு பள்ளிகளுக்கு தகவல் அறியப்படுவதில்லை.கல்வித்துறை மற்றும் அரசுத்துறை சார்ந்த போட்டிகளில் மட்டுமே மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களை அதிகளவிலான போட்டிகளில் பங்குபெறச்செய்வதனால் அவர்களின் கற்பனைத்திறன் மேம்படுகிறது. இவ்வாய்ப்புகளை அரசுப்பள்ளிகள் தவறவிடுகின்றன.தற்போது, டிசைன் பார் சேஞ்ச் என்ற அமைப்பின் சார்பில், மாணவர்களின் கற்பனைத்திறன் அடிப்படையில் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த இரண்டாண்டுகளாகவே இப்போட்டிகள் குறித்து அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான போட்டிவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியின் பங்கேற்பு
இப்போட்டி குறித்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோவையில் விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் திருப்பூர் மாவட்டம் உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியிலும் இப்போட்டியில் பங்கேற்க மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.இப்போட்டியின் மையக்கருத்தே மாணவர்களின் கற்பனைத்திறனைக் கொண்டு, அவர்களின் சுற்றுப்பகுதியிலுள்ள ஒரு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே. இதன் அடிப்படையில், அப்பள்ளி மாணவர்கள், கைநாட்டு கையெழுத்தானது என்ற தலைப்பில் ஒருப்ரொஜெக்டை வடிவமைத்து வருகின்றனர்.ராகல்பாவி கிராமத்தில் நுாறு சதவீத மக்களுக்கும் கையெழுத்து போட அறிந்திருக்கசெய்வதே இதன் பொருளாகும். இம்முயற்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையை எதிர்பார்த்துள்ள நிலையை மாற்றி, பள்ளி வேளைக்கு பின்னர், கிராம மக்களுக்கு கையெழுத்திட கற்றுத்தருகின்றனர்.
இம்மாணவர்கள் இதுவரை ஆய்வு செய்ததில், 87 மக்கள் கையெழுத்திட தெரியாதவர்களாக உள்ளனர். இக்குழந்தைகளின் முயற்சிக்கு கிராம மக்களுக்கும் ஒத்துழைக்கின்றனர். இவர்களது ஈடுபாட்டின் பயனாக தற்போது, 80 சதவீத மக்கள் கையெழுத்திட கற்றுக்கொண்டுள்ளனர்.பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் கூறியதாவது: இப்போட்டியில் ப்ரொஜெக்ட்களை பதிவு செய்வதற்கு அக்., முதல் வாரம் வரையே உள்ளதால், மாணவர்கள் முழுமையான பணியில் ஈடுபட்டுள்ளனர். 
கற்பனைத் திறனுக்கான போட்டி என்பதால், மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவர்களாகவே முன்வந்து, இவ்வாறு கையெழுத்து போட தெரியாத மக்களுக்கு அதனை கற்பிக்கலாம் என்ற திட்டத்தை கூறினர். மிக உற்சாகத்துடனும், மாணவர்கள் இணைந்தும் கற்றுத்தருகின்றனர்.இதனால் அவர்களின் தலைமைப்பண்பும் மேம்படுகிறது. இதுபோன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த அரசு பள்ளிகள் முன்வர வேண்டும். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த இவை வாய்ப்புகளாகும். போட்டிக்கான விபரங்களை அறிந்துகொள்ள challenge.dfcworld.com என்ற இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இணையதளம் மூலம் பொருள்கள் வாங்க எஸ்.பி.ஐ.யின் தனி கடன் அட்டை அறிமுகம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         இணையதளத்தின் மூலமாக பொருள்களை வாங்குவதற்கான பிரத்யேக கடன் அட்டையை (simply click credit card) புதன்கிழமை அறிமுகப்படுத்தியது பாரத ஸ்டேட் வங்கி.இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரி விஜய் ஜசுஜா கூறியதாவது:

 
        இணையதளத்தில் பொருள்களை வாங்கும் திறன் இளம் தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது. இணையதளத்தில் தரமான, குறைவான விலையில் பொருள்களை வாங்கி, அப்பொருள்கள் அவர்களது இல்லத்திற்கு சென்று விநியோகிப்பது பலருடைய கவனத்தை பெற்றுள்ளது. 
 
         எனவே, இணையதளம் மூலம் எளிதில் பொருள்களை வாங்குவதற்கும், மேலும் பணத்தை மிச்சப்படுத்தவும் புதிய கடன் அட்டையை அறிமுகப்படுத்துகிறது.


            இந்தப் புதிய கடன் அட்டை மூலம் பாரத ஸ்டேட் வங்கி, இணையதளத்தில் பிரபலமாக இருக்கும் நிறுவனங்களுடன் கை கோர்த்துள்ளது. அதன்படி "அமேஸான் இந்தியா', "புக் மை ஷோ', "கிளியர் ட்ரிப்', "பேஃப் பர்னிஷ்', "புட் பாண்டா', "லென்ஸ் கார்லேண்ட்', "ஓலா கேப்ஸ்' இணையதளங்களில் இந்த கடன் அட்டை மூலம் எளிதாக பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

 
               வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் செலவு செய்யும் அனைத்திற்கும் 5 மடங்கு வெகுமதி புள்ளிகளை இந்தப் புதிய கடன் அட்டை வழங்கும். மேலும், இந்த கடன் அட்டையுடன் இணைந்துள்ள நிறுவனங்களின் பொருள்களை வாங்குபவர்களுக்கு 10 மடங்கு வெகுமதி புள்ளிகளை வழங்குவது இதன் சிறப்பாகும். இந்தப் புதிய கடன் அட்டையை பெறுவதற்கு ரூ.499 செலுத்த வேண்டும் என்றார் விஜய் ஜசுஜா.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாகமத்திய அரசின் விஞ்ஞானிகள்: தலா 100 மணி நேரம் வகுப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         பின் தங்கிய அரசு பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க, மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் 100 மணி நேரம் வகுப்பு எடுக்கப் போகின்றனர்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர்., (கவுன்சில் ஆப் சயின்டிபிக் அன்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்) செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் 38 ஆராய்ச்சி கூடங்கள் உள்ளன. இதில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் புதிய தொழில் நுட்பங்களை கண்டு பிடித்து தொழில்துறை நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் வழங்கி வருகின்றனர். 
 
          இவர்களின் கண்டுபிடிப்புகளை படித்தவர்களால் மட்டுமே அறிய முடிந்தது.கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞான அறிவில் சிறந்து விளங்க வேண்டும், என்பதற்காக, மத்தியஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, இந்தியா முழுவதும் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., விஞ்ஞானிகள் ஆண்டுக்கு 100 மணி நேரம், பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வகுப்பு எடுக்கப்போகும் விஞ்ஞானிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றன.காரைக்குடி 'சிக்ரி' விஞ்ஞானி மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: 10 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், அறிவியலை மார்க் வாங்குவதற்கு மட்டுமே படிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு சிந்திக்கும் திறனின்றி போகிறது. மேலும் கல்லூரிகளில் அறிவியல் படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனவே கிராமப்புற பள்ளி அளவில், விஞ்ஞானிகளை உருவாக்கும் முயற்சியில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.அதன் ஒரு கட்டமாக, காரைக்குடி 'சிக்ரி' விஞ்ஞானிகள் கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் தொழில் கல்வி என எந்த துறையில் அவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்களோ, அத்துறை குறித்து விளக்கம் அளிக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பாடத்துடன், கூடுதலாக தாங்கள் செய்து வரும் ஆராய்ச்சி, அதனால் ஏற்படும் சமூக பலன், விஞ்ஞான துறையின் எதிர்காலம், அதில் உள்ள படிப்புகள், விஞ்ஞானம் மனித வாழ்வில் எவ்வாறு பயன்படுகிறது, என்பது குறித்து கற்று கொடுக்க உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் கற்றுக்கொடுக்க 'சிக்ரி'யில் 114 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், என்றார்

ஆண்டுக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் அறிவித்தும் ஆசிரியர் பணிக்கு ஆள் இல்லாமல் தவிக்கும் பள்ளி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


       இங்கிலாந்து அருகே உள்ள "தீபகற்ப" கிராமத்தில் ஐந்தே மாணவர்கள் உள்ள பள்ளியில் பணியாற்ற ஆண்டுக்கு ரூ. 35 லட்சம் சம்பளம் கொடுப்பதாகக் கூறியும்  ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம்.


          40 குடுமபங்கள் வசித்து வரும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் தீபகற்ப கிராமத்தில்மருத்துவமனை, தபால் நிலையம் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் தபால்காரர் வருவாராம்.  இங்குள்ள மக்கள் இப்பகுதியிலேயே தங்களுக்குத் தேவையானதை உருவாக்கிக் கொள்வதால் அவர்களும் அதிக அளவில் வெளியில் செல்வதில்லையாம். ஒரு பள்ளி.. 5 மாணவர்கள் இங்கு ஒரு பள்ளியும் உள்ளது. அதில் ஐந்து மாணவர்கள் உள்ளனர்.
ஆனால், இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்தான் இல்லை. தற்போது இந்தப் பள்ளியின் மாணவர்களுக்கு, அவ்வப்போது வெளியில் இருந்து வந்து மாணவர்களே வகுப்பெடுக்கின்றனர். எனவே இந்த ஆசிரியர் பணிக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு முப்பத்தந்து ஆயிரம் பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் 35 லட்ச ரூபாய்) என இரண்டு முறை ஆசிரியர் தேவை விளம்பரம் அளித்தும் யாரும் விண்ணப்பிக்க முன்வரவில்லை. 
எளிதில் வந்து போக முடியாத அளவிலான தொலை தூர கிராமம் என்பதால் யாரும் வேலைக்கு வரத் தயங்குகிறார்களாம்.

தொடக்ககல்வி - இரண்டாம் பருவ புத்தகங்களை 18/09/2015 குள் பள்ளிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



ஆதார் அட்டை பெற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் சிறப்பு முகாம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


        பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி, மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை ஆதார் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளி வளாகத்திலேயே புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  

           திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தினை, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார். திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ. சுபாஷினி முன்னிலை வகித்தார்.  இதில், 35-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம், கைரேகை மற்றும் கருவிழி படலம் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றன. மாணவர்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தினை முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

  அதையடுத்து, மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் ஆதார் அட்டை இல்லாதவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.மு. நாகேந்திரன், கோட்டாட்சியர் அ. மனோகரன், வட்டாட்சியர்கள் செழியன், சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thursday, 10 September 2015

தொடக்கக்கல்வி-நடுநிலைப்பள்ளி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

தொடக்கக்கல்வி-நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு வளர் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்..



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா ???

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


         தமிழக அரசு கடனில் சிக்கித் தவிப்பதாக தேமுதிக தலைவர்விஜய்காந்த் குற்றம்சாட்டினார்இது தொடர்பாக திங்கள்கிழமைஅவர் வெளியிட்ட அறிக்கை:
 
         அதிமுக அரசு 2011-இல் பதவி ஏற்றபோதுஅரசுக்கு ரூ.1லட்சம் கோடி கடன் இருந்ததுகடந்த 4 ஆண்டுகளில் அது ரூ. 2.11லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுஅரசுப் போக்குவரத்துத்துறையிலும்மின் வாரியத்திலும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமானகடன் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


           மொத்தமாக ரூ.4 லட்சம் கோடிக்கும் மேல் கடனில் தமிழக அரசுசிக்கித் தவிக்கிறதுகடந்த பல ஆண்டுகளாக சுமார் ரூ.12 ஆயிரம்கோடி பணத்தை மத்திய அரசின் ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்றுவளர்ச்சி ஆணையத்திடம் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என்றகுற்றச்சாட்டு எழுந்துள்ளதுஅதனால் அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள்ஓய்வு பெறும்போதுதங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா என்றுபலர் சந்தேகப்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

நஞ்சாகும் உணவு குறித்து சில உண்மைகள்!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

நஞ்சாகும் உணவு குறித்து சில உண்மைகள்!

நன்றி - .செந்தமிழன்
உணவைப் பற்றிய எண்ணற்ற உண்மைகளில்ஒருசிலவற்றையாவது வெளிப்படுத்த வேண்டும் எனஎண்ணுகிறேன்.

   விளம்பரங்கள்மருத்துவப் பரிந்துரைகள்சங்கிலித் தொடர்சந்தைப்படுத்தல்கள் (chain link marketing) உள்ளிட்டபலவகையான உத்திகள் வழியாக உங்கள் உணவாக மாறிக்கொண்டுள்ள ‘சரக்குகள்’ அனைத்துமே தடை செய்யப்படவேண்டியவைதான்அரசாங்கம்தான் இவற்றையெல்லாம்தடை செய்ய வேண்டும் என நினைக்காமல்நீங்களே அவற்றைநிராகரிக்க வேண்டும்அதுதான் உண்மையான தடை.
ஒரு வணிக உணவில் ஏதேனும் சில வேதிப் பொருட்கள்மிகையாக இருப்பதாகவும் அந்தக் காரணத்தினால் அந்தஉணவைத் தடை செய்வதாகவும் அரசும்சில அமைப்புகளும்கூறுவதை இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால்,நீங்கள் பரிதாபத்துக்குரியவர்ஏனெனில்வேதிப் பொருட்கள்இல்லாத வணிக உணவு என எதுவுமே இல்லைஎல்லாவணிகப் பண்டங்களும் வேதி வினைகளுக்கு ஆட்பட்டுத்தான்தயாரிக்கப்படுகின்றன.
அரசாங்கமும் அதன் துணை நிறுவனங்களும் எப்போதும்கூறும் வாசகத்தை நினைவுபடுத்திப் பாருங்கள், “அந்த உணவுவகையில் குறிப்பிட்ட வேதிப் பொருள் ‘அனுமதிக்கப்பட்டஅளவைக் காட்டிலும்’ அதிகமாக உள்ளது” என்பதுதான் அந்தவாசகம்இதைக் ’கண்டுபிடிப்பதற்கு’ எவரேனும் ஒருதன்னார்வலர் ஆய்வகங்களுக்கு அலைய வேண்டும்,நீதிமன்றங்களுக்கு நடக்க வேண்டும்ஊடகங்களை நாடவேண்டும்.
அனுமதிக்கப்படும் அளவு’ என்றால் என்னஎந்தப்பரிசோதனைகளின் அடிப்படையில் அவைதீர்மானிக்கப்படுகின்றனஇந்த அளவு வேதிப் பொருட்களைஅனுமதித்தால் தீங்கில்லை என நம்பும்படியான ஆதாரங்கள்யாவைஆகிய கேள்விகளை உங்களால் சிந்திக்க முடிகிறதா!
உங்கள் சிந்தனைப் போக்கு அறிவுவயப்பட்டதுஏதேனும் ஒருபுள்ளிவிவரத்தை எடுத்து வீசினால் நீங்கள் ஏமாந்துபோவீர்கள்.சில வேதிப் பொருட்களின் பெயர்கள்சில ஊட்டச் சத்துவகைகள்அயல் நாட்டு அறிக்கைகள்பெருநிறுவனஅறிவிப்புகள்பிரபலங்களின் வாக்குறுதிகள் ஆகியவற்றைநம்பும் வகையில்தான் நீங்கள் வளர்த்தெடுக்கப்பட்டுஇருக்கிறீர்கள்.
உணவில் ஏன் வேதிப் பொருட்களைக் கலக்கிறீர்கள்உணவுஎன்பதே இயற்கையின் கொடைதானேஅது ஏன் செயற்கைத்தன்மையானதாக மாற்றப்படுகிறதுஎன்ற கேள்வி மிகவும்எளிமையானதுஒருவகையில் இது பாமரத்தனமான கேள்வி.இந்தக் கேள்விக்கு எந்த அரசாங்கமும் பெருநிறுவனமும்விடையளிக்காதுஅவர்களுக்கு விடை தெரியும்ஆனால்சொல்ல மாட்டார்கள்ஏனெனில்அந்த விடையில்தான் மனிதஉயிர்களோடு விளையாடிமக்களின் உடல்நலனைச்சூறையாடிக் கொள்ளையடிக்கும் தந்திரம் ஒளிந்துள்ளது.
கெல்லாக்ஸ் சோளத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளதுஎன விளம்பரம் செய்யப்படுகிறதுஹிஸ்டரி சேனல் எனும்தொலைக்காட்சிக் குழுவினர் கெல்லாக்ஸ் நிறுவனத்தொழிற்சாலைக்குச் சென்று ஓர் ஆவணப்படம் எடுத்தார்கள்.நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட பல கேள்விகளுக்கு அந்தத்தொழிற்சாலைப் பிரதிநிதி விடை தந்தார்ஒரே ஒருகேள்விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். ‘உங்கள் சோளப்பொரி உணவில் மிகையான அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது.இந்த இரும்புச் சத்தினை எந்தப் பொருளிலிருந்து எடுத்து,சோளத்தில் கலக்கிறீர்கள்?’ என்பதுதான் அக்கேள்வி.
இயற்கையான அளவைக் காட்டிலும் கூடுதலான இரும்புச்சத்து கெல்லாக்ஸ் சோளத்தில் இருப்பதால் அந்தக் கேள்விஎழுப்பப்பட்டதுஇதற்கு அந்த நிறுவனப் பிரதிநிதியின் பதில், ‘அதைச் சொல்ல முடியாதுஏனெனில் அது எங்கள் தயாரிப்புஇரகசியம்’.
இப்படி ஒரு பதிலை அவர்களால் வெளிப்படையாகக் கூறமுடிகிறதுஇரும்புச் சத்து எனும் வாசகத்தை நீங்கள்கவனிக்கிறீர்கள்அந்தச் ‘சத்து’ எந்தப் பொருளிலிருந்துஎடுக்கப்பட்டது என்பதைப் பற்றிய சிந்தனை உங்களில்பலருக்கு இருப்பதில்லைஉங்களுக்கு ஊட்டப்பட்டதுஇப்படியான அரைவேக்காட்டு அறிவு.
பிராய்லர் கோழியில் புரதம் இருக்கிறதுபாலில் சுண்ணாம்புச்சத்து இருக்கிறதுஊட்டச் சத்து பானங்களில் பல்லூட்டச்சத்துகள் (multi nutrients) உள்ளன என்றெல்லாம்அறிவிக்கப்படுகிறதுஇந்தச் சத்துகள் எல்லாம் எந்தப்பொருட்களின் மூலத்திலிருந்து வருகின்றன என எவரும்அறிவிப்பதில்லைநவீன அறிவியல் என்பதே மோசடிகளின்பாதுகாப்பு வளையம்தான் என்பது என்னைப் போன்றமுட்டாள்களின் கருத்துவிலங்குகளின் எலும்புகளிலிருந்துதயாரிக்கப்படும் சுண்ணாம்புச் சத்து பல உணவுகளில்கலக்கப்படுகிறதுஅவை மனிதர்களுக்கானவையே அல்ல.பேராற்றலின் படைப்பில்ஒவ்வொரு உயிரினத்திற்கெனவும்சத்து வகைகளும் அளவுகளும் தனித்துவத்துடன்வடிவமைக்கப்பட்டுள்ளன.
புரதச் சத்துதான் பாம்பின் உடலில் உள்ள நஞ்சுபாம்புகளின்கழுத்திலிருந்து நஞ்சை எடுத்து உணவில் கலந்துவிட்டு, ‘இதுபுரதச் சத்து மிக்க உணவு’ எனத் தம்பட்டம் அடிக்க முடியாது.எளிதில் செரிக்க இயலாத அடர்த்தியான புரதம் பாம்புகளின்கழுத்தில் படைக்கப்பட்டுள்ளதுஇந்தப் புரதத்தைத் தன்இரையின் மீது பாம்பு செலுத்தும்போதுஅந்த இரையின்இரத்தத்தில் அடர் புரதம் எனும் நஞ்சு கலக்கிறதுசெரிக்கஇயலாத அளவுக்கு அடர்த்தியான புரதம் என்பதால் இரைமயங்குகிறது அல்லது இறந்துபோகிறது.
எந்த உயிரியின் மீது எவ்வளவு நஞ்சு செலுத்த வேண்டும்என்பதைப் பாம்புகள் அறிந்து வைத்துள்ளனகாட்டு முயலின்மீது செலுத்தும் அளவுக்கான நஞ்சினைச் சிறு எலியின் மீதுபாம்புகள் செலுத்துவதில்லை. ‘அனுமதிக்கப்படும் அளவுஎன்ற கருத்தினைப் பாம்புகள் மிகச் சரியாகக்கடைப்பிடிக்கின்றன.
நவீன அறிவியல் பெயரிட்டு அழைக்கும் சத்துகள்பொதுவானவைஆனால்அவை எந்த உயிரியில் இருந்துஎடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து அவற்றின்தன்மைகள் முற்றிலும் மாறுபடுகின்றனநீங்கள் வாங்கிஉண்ணும் எல்லா வணிகப் பண்டங்களும் இவ்வாறானஇரகசியமான’ சத்துகளைக் கலந்து தயாரிக்கப்படுபவைதான்.
சில உணவுப் பண்டங்கள் ‘அனுமதிக்கப்பட்ட அளவைமீறியதால்தான் இப்போது தடை செய்யப்பட்டுள்ளன என்பதைமீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்நிச்சயமாகஇந்தஉணவுப் பொருட்களில் கலக்கப்பட்டுள்ள பல்வேறுஉட்பொருட்களின் மூலப் பொருட்கள் எவைஅவைமனிதர்களின் உணவாகும் தகுதி உள்ளவையாஆகிய இரண்டுகேள்விகளும் இன்னும் கேட்கப்படவே இல்லைகேட்டாலும்பதில் கிடைக்காதுபன்னாட்டு வணிகச் சட்டங்கள் இந்தஇரகசியங்களைப் பாதுகாக்கின்றனஇவற்றுக்குக்காப்புரிமை’ எனும் மதிப்பு மிக்க பெயர் உள்ளது.
ஆகஉள்ளே என்ன கலக்கப்பட்டிருக்கிறது என்பதேதெரியாமல் பொருட்களை வாங்கி உண்ணும் ஏமாளித்தனமானசமூகம் இப்போது உருவாகியுள்ளது.
இந்தச் சமூகம்தான் பாட்டி கடைகளில் விற்கப்பட்ட இலந்தைப்பழங்களில் ஈக்கள் மொய்ப்பதைக் கண்டுஅவைஅசுத்தமானவை என வெறுத்து ஒதுக்கியது.
பெரு நிறுவனங்களின் வணிக உணவுப் பண்டங்கள் மீது ஈக்கள்அமர்வதில்லைஈக்கள் நஞ்சு உணவுகளை வெறுக்கின்றன.ஏனெனில் ஈக்கள் படிப்பதும் இல்லைவிளம்பரங்களுக்கும்மருத்துவ அறிவுரைகளுக்கும் ஏற்ப ஆடுவதுமில்லைசுருங்கச்சொன்னால்ஈக்களும் பலவகைப் புழுக்களும் கொசுக்களும்பகுத்தறிவு இல்லாத உயிரினங்கள்.
அவற்றுக்குத் தெரிந்த ஒரே ஒரு மந்திரம், ‘உணவுபடைக்கப்படுகிறதே தவிரதயாரிக்கப்படுவதில்லைஎன்பதுதான்.
இந்தக் கட்டுரையின் வழியாக உங்களிடம் நான் முன்வைக்கும்சேதி என்னவெனில்வணிகப் பண்டங்களை அரசாங்கம்தான்தடை செய்ய வேண்டும் எனக் காத்திருக்காதீர்கள்நீங்களேஅவற்றைத் தடை செய்ய முடியும்எந்த நிறுவனம்தயாரித்தாலும் பால்நெய்இறைச்சி உள்ளிட்ட அனைத்துஉணவுப் பொருட்களையும் நிராகரியுங்கள்.
நன்றி - .செந்தமிழன்
வாசகர்களின் கருத்துக்கள்:
இளவேனில் சௌ :
என்டோசல்பானை பயன்படுத்த சொன்ன அரசுதான் பிறகுஅதற்கு தடை விதித்ததுபுட்டிப்பாலை ஊக்குவித்த அரசு தான்தாய்ப்பாலே சிறந்தது என்று சொல்கிறதுவேதிப் பொருள்கலப்பதால்தான் பையில் அடைத்து ‘பதப்படுத்தி’ உணவுபண்டங்களை விற்க முடியும்அதன் மூலம் வரும் லாபமாஉண்போரின் உடல்நலமா என்று வரும்போது உண்போரின்உடல்நலத்தில் பெரு நிறுவனங்களுக்கு ஏதக்கறை.
Umanaath Venkatachalam :
இதைவிட மிகத்தெளிவாக யாராலும் விவரிக்க முடியாது....அமெரிக்காவில் அனுமதிக்கப்படும் வேதிப்பொறுளின் அளவும்இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட வேதிப்பொறுளின் அளவும்மாறுபடுகிறது... இந்த சிரிய உதாரணமே நமக்கு பலவற்றைவிளக்கும்.
Nanda Kumar :
மனிதனை மனிதனே மாய்க்கும் இந்த மருந்துக் கலப்படஉணவுகள் ஒழியட்டும்எல்லோரும் சுயநலமின்றிபொதுநலத்தோடு இயற்கைஉணவுகள் உற்பத்திசெய்யட்டும்.மனிதகுலம் மகிழ்ச்சியுடன் வாழ இனியாவது இதைபின்பற்றட்டும்.
Abdul Noordheen :
நம்மால் என்ன செய்ய முடியும்என்பது பலரின் வினா.நம்மால் முடியும் என்பதை செந்தமிழன் தெளிவாகசொல்கிறார். 'பன்னாட்டுக் கம்பெனி தயாரிப்புக்களைப்புறக்கணிப்பீர்குறிப்பாக டி.வியில் விளம்பரத்தில் வரும் எந்தஉணவுப் பொருட்களையும் வாங்காதீர்மிளகாய்ப் பொடிவேண்டுமாமிளகாய் வாங்கி அரைத்துக் கொள்ளுங்கள்.எண்ணெய் வேண்டுமாசெக்குக்கு சென்று ஆட்டிகொள்ளுங்கள்இப்படி சுயமாக தயாரியுங்கள் அல்லது உங்கள்ஊரில் உங்களுக்கு தெரிந்த நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்துவிலைக்கு வாங்கி உபயோகியுங்கள்நன்றி செந்தமிழன் ஐயா.
மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:
கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களைஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாகவாழ்வது சாத்தியமாகும்.
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.
இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள்நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் கீழேஉள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்பு கொள்ளலாம்.
Thanks & Regards,
Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com