Wednesday, 5 August 2015

தமிழ் கையெழுத்தை அறியும் செயலி!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

அலைபேசியின் தொடுதிரையில், தமிழ் விசைப் பலகை மூலம் உள்ளீடு செய்வதைவிட, பெரிய அவஸ்தை வேறில்லை. இதற்கு மாற்றாக, ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக, ஓர் கையெழுத்து உள்ளிடுகை செயலியை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது.
'கூகுள் ஹேண்ட்ரைட்டிங் இன்புட்' என்ற இந்த இலவச செயலியை, உங்கள் ஆண்ட்ராய்டு அலைபேசி அல்லது பலகைக் கணினியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும். தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில், தொடுதிரை மீது உங்கள் விரல் மூலமோ, எழுத்தாணி (ஸ்டைலஸ்) மூலமோ தமிழிலேயே எழுத,
உங்கள் கையெழுத்து, அலைபேசி திரையில் அழகிய எழுத்துருக்களாக மாறிவிடும். உங்கள் உறவினர்களுக்காக, நீங்கள் உருவாக்கிய வாட்ஸ் ஆப் குரூப்பில், இனி உங்கள், 80 வயது பாட்டி கூட சேர்ந்து கொண்டு குறுஞ்செய்திகளை, நிலைத் தகவல்களை அனுப்பலாம்!

No comments:

Post a Comment