Wednesday 5 August 2015

ஒளியாற்றல் தேசிய கருத்தரங்கு பரிசு அள்ளலாம் பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


             ஒளியாற்றலை சமுதாய நற்செயலுக்கு பயன்படுத்துவதில் உள்ள வாய்ப்பு, சவால்கள்' குறித்து பள்ளி மாணவர்களுக்கான தேசிய கருத்தரங்கு ஆக., 31ல் சென்னையில் நடக்கிறது.
 
              பள்ளிக் கல்வித்துறை, பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பநிறுவனம் இணைந்து தமிழக அளவில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கருத்தரங்குகளை நடத்துகின்றன. தற்போது 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 'ஒளியாற்றலை சமுதாய நற்செயலுக்கு பயன்படுத்துவதில் உள்ள வாய்ப்பு, சவால்கள்' என்ற கருத்தரங்கு நடத்த உள்ளன. 
 
                   இதுகுறித்து 6 நிமிடத்திற்குள் மாணவர்கள் விளக்கம் அளித்து, நடுவர்களின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டும். கல்வி மாவட்ட அளவில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஆக., 7ல் மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடக்கும்.தேசிய கருத்தரங்கு: அதில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தேசிய கருத்தரங்கு ஆக., ௩1ல் சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.

No comments:

Post a Comment