Wednesday, 12 August 2015

அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


டெல்லிஅரசியன் நலத் திட்டங்களைப்பெற ஆதார் எண் கட்டாயமானது அல்லஎன்று உச்சநீதிமன்றம் அதிரடியாகஉத்தரவிட்டுள்ளதுநாடு முழுவதும்மக்களுக்கு ஒரே அடையாள அட்டைவழங்கும் வகையில் ஆதார் அட்டைதிட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறதுஅரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்றமத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
         அதேபோல் ஊதியம் பெறுவதுதிருமணப் பதிவு,சொத்துகள் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதார்அட்டையை கட்டாயமாக்க சில மாநிலங்கள் திட்டமிட்டுள்ளதற்கும்எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டனஇந்த மனுக்கள் உள்பட ஆதார் தொடர்பானஅனைத்து வழக்குகளையும்அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றவேண்டும் என்று மத்திய அரசும் வலியுறுத்தி இருந்ததுஇந்தமனுவை விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர்எஸ்.போப்டே,சி.நாகப்பன் ஆதார் அட்டை தொடர்பாக பல்வேறு கேள்விகள்எழுப்பினர்.

அதன் பிறகு வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசனபெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டனர்இன்றைய விசாரணையின்முடிவில் அரசின் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண்கட்டாயமல்லஆதார் எண் கட்டாயம் அல்ல என்பதை மக்களுக்குஊடகங்கள் மூலம் அரசு தெரிவிக்க வேண்டும்ஆதாருக்காகசேகரிக்கப்படும் விவரங்களை அந்நிறுவனம் பிற நிறுவனங்களுடன்பகிர்ந்து கொள்ளக் கூடாதுபொதுவிநியோகத் திட்டம்சிலிண்டர்வழங்கலுக்கு ஆதார் எண்ணை அரசு கேட்கலாம் என்றும்உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment